cjp protest


நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.

இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர்வுகள் குளறுபடி தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கியது.

இந்தப் போராட்டத்தைக் கலைக்கும் வகையில் ஆளும் பா.ஜ.க அரசு மாணவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு, தடியடி தாக்குதல் எனக் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தியிருக்கிறது.

cjp protest

பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளியான நிலையில், மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், சமூக ஊடகங்களில் அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் பா.ஜ.க அரசின் நடவடிக்கை குறித்து விமர்சித்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில், பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா,“சோனம் வாங்சுக் மற்றும் மாணவர் அமைப்புகளுடன் நமது அரசாங்கம் ஒரு அர்த்தமுள்ள பேச்சைத் தொடங்கும் என்றும், அதனால் அவருடைய உடல்நலம் மேலும் மோசமடையாது என்றும் நம்புகிறேன்!

சோனம், தயவுசெய்து உங்கள் உண்ணாநோன்பை முடியுங்கள். இந்தப் போராட்டத்தைப் போலவே உங்கள் ஆரோக்கியமும் முக்கியமானது. நீங்களும் மாணவர்களும் இந்தியாவின் எதிர்காலத்திற்காகவும் நமது இளைஞர்களுக்காகவும் போராடுகிறீர்கள். நமது கல்வி முறையை உயர்த்தவும் மேம்படுத்தவும் நடக்கும் இந்தப் போராட்டத்தில் ஒவ்வொரு மாணவருக்கும், சோனமிற்கும் எனது மனமார்ந்த மற்றும் உறுதியான ஆதரவு உண்டு. உங்கள் அனைவருக்கும் மேலும் வலிமை சேரட்டும். ஜெய் ஹிந்த்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Проблемы с налоговой? примеры ответов на требования налоговой профессиональная помощь в подготовке документов и пояснений для ФНС. Разберем содержание требования,…

  2. Проблемы с налоговой? ответ на требование налоговой инспекции профессиональная помощь в подготовке документов и пояснений для ФНС. Разберем содержание требования,…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed