செளகார் ஜானகி


பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், இன்று மதியம் 2 மணியளவில் அவர் இயற்கை எய்தினார். இவருக்கு வயது 94. சங்கரமஞ்சி ஜானகி என்ற இயற்பெயர் கொண்ட இவர், சௌகார் ஜானகி என்றே திரையுலகிலும் ரசிகர்களாலும் அன்போடு அழைக்கப்பட்டு வந்தார்.

செளகார் ஜானகி

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் கடந்த 70 ஆண்டுகளாக 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, இந்தியத் திரையுலகின் மிக முக்கியமான மூத்த கலைஞராகத் திகழ்ந்தார்.

திரைத்துறை மற்றும் கலை உலகிற்கு இவர் ஆற்றிய வாழ்நாள் சேவையைப் பாராட்டி, ஒன்றிய அரசு 2022-ஆம் ஆண்டு இவருக்கு நாட்டின் உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கி கௌரவித்தது. மறைந்த நடிகை சௌகார் ஜானகிக்கு யக்னா பிரபா கோட்டி, வெங்கடரமண சங்கரமஞ்சி, சசி ராவ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

செளகார் ஜானகி
செளகார் ஜானகி

இந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த மூத்த நடிகை சௌகார் ஜானகியின் மறைவு, ரசிகர்களையும் திரைத்துறையினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தேனாம்பேட்டையிலுள்ள அவருடைய இல்லத்தில் இன்று மாலை 5 மணி முதல், அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Перед выездом желательно сообщить основные сведения: возраст, продолжительность запоя, количество алкоголя, известные заболевания и текущие жалобы. Это помогает предварительно определить,…

  2. Специалист также может отказаться проводить инфузию на дому, если отсутствует подтвержденное назначение, имеются противопоказания к препарату, требуется постоянное мониторирование показателей…

  3. Если запои повторяются регулярно, одного вытрезвления недостаточно. Выведение алкоголя помогает снять острые проявления, но для успешного выздоровления требуется лечение алкоголизма.…

  4. Врач учитывает симптомы, риски, анамнез и семейную ситуацию, чтобы предложить подходящую программу. Изучить вопрос подробнее – [url=https://3vyvod-iz-zapoya-moskva77.ru/]вывод из запоя москве[/url]

  5. Thanks for the readable length, I finished it without checking how much was left, and a stop at oliveharborcraftcollective kept…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed