Pyaar Prema Kalyanam Review: ஆணாதிக்கத்தைக் கேள்வி கேட்கும் படைப்பில் இதையும் கவனித்திருக்கலாமே? | Pyaar Prema Kalyanam: Elan and Saanve Megghana starrer questions patriarchy but fails to change the perspective

[ad_1]

நடிகராக அறிமுகமாகியிருக்கும் இயக்குநர் இளன், துறுதுறுப்பான இளைஞர் வேடத்துக்குப் பொருந்துகிறார். நகைச்சுவைக் காட்சிகளை இயல்பாகக் கையாண்டு பாஸ் மார்க் வாங்கும் அவர், முக்கியமான உணர்வுபூர்வக் காட்சிகளில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தத் திணறுகிறார். தன்னம்பிக்கை, சுதந்திரச் சிந்தனை, குடும்பத்தின் மீதான பிணைப்பு, காதல் எனப் பவியின் பல பரிமாணங்களையும் இயல்பாக வெளிப்படுத்துகிறார் சான்வி மேக்னா.

பவியின் அம்மாவாக ராதிகா சரத்குமார் தனது அனுபவத்தால் பல காட்சிகளைத் தூக்கி நிறுத்துகிறார். கண்டிப்பான தந்தையாக எம்.எஸ்.பாஸ்கரும் வழக்கம்போல கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மை சேர்க்கிறார். இளங்கோ குமரவேல், கீதா கைலாசம், செந்தில் உள்ளிட்டோர் குடும்பச் சூழலுக்கு இயல்பான உயிரோட்டத்தைக் கொடுக்கின்றனர். யோகி பாபுவின் கதாபாத்திரமும் நடிப்பும் எதிர்பார்த்த அளவு நகைச்சுவைக்குக் கைகொடுக்கவில்லை.

Pyaar Prema Kalyanam Review

Pyaar Prema Kalyanam Review

யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்துக்குத் தேவையான உற்சாகத்தைக் கொடுத்தாலும், பாடல்கள் தனித்துத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முந்தைய இளன்–யுவன் கூட்டணியிலிருந்த மேஜிக் இதில் மிஸ்ஸிங்! தினேஷ் கே.பாபுவின் ஒளிப்பதிவு, ஒரு கலர்ஃபுல்லான ரொமான்டிக் காமெடிக்குத் தேவையான அழகைச் சேர்க்கிறது. ட்ரெண்ட்டுக்கு ஏற்ற பிரதீப் ஈ.ராகவ்வின் படத்தொகுப்பு, காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தினாலும், சில இடங்களில் அவை அளவுக்கு அதிகமான வேகத்தில் கடப்பதால் உணர்வுகள் அழுத்தம் பெறாமல் போகின்றன. கோபி ஆனந்த் மற்றும் ஸ்ரீனிவாஸ் கலிங்காவின் கலை இயக்கம், பவி மற்றும் இளனின் வீடுகளைத் தனித்துவமாக வடிவமைத்து, இரு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளையும் வேறுபடுத்தி காட்டுகிறது.

[ad_2]

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed