யுவன் சங்கர் ராஜா

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சிறை’. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து அவரின் 26-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

விக்ரம் பிரபுவின் 26-வது படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா

பட அறிவிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் விக்ரம் பிரபு, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் சித்தார்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய யுவன் சங்கர் ராஜா, “இத்திரைப்படம் இசை ரீதியாகவும், முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பாணியிலும், ஒரு புதுமையான காட்சி மொழியுடனும் உருவாக உள்ளது.

இதில் முற்றிலும் ஒரு புதிய இசை வகையைக் கொண்டு வர முயற்சித்து வருகிறோம்” என்றிருக்கிறார்.

தொடர்ந்து அவரிடம், ‘நீங்கள் துபாயில் வசிக்க காரணம் என்ன?’ என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா

அதற்கு பதிலளித்த அவர், “நான் துபாயில் வசித்தாலும் பெரும்பாலும் சென்னையில்தான் இருக்கிறேன். என் மகள் துபாயில் படித்து வருவதால் அங்கு அதிக நேரம் செலவிடுகிறேன்.

பணிகளுக்கு ஏற்ப அங்கும், இங்கும் பயணம் செய்கிறேன். நான் பணியாற்றும் திரைப்படங்கள் தாமதமாவதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Продолжительного пьянства организм переносит тяжелее с каждым последующим эпизодом. Развитие алкоголизма сопровождается нарушениями работы внутренних органов. Алкоголь и его метаболиты…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed