சிறை படத்தில்...

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சிறை’. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து அவரின் 26-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

விக்ரம் பிரபுவின் 26-வது படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

சிறை படத்தில்…

பட அறிவிப்பு தொடர்பாக வெளியான செய்தியாளர்கள் சந்திப்பில் விக்ரம் பிரபு, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் சித்தார்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய விக்ரம் பிரபு, “இயக்குநர் கதையை சொன்னபோது புதுவித அனுபவமாக இருந்தது. அவர் கதை சொல்லும்போது படம் பார்ப்பது மாதிரியான அனுபவமாக இருந்தது.

இந்தக் கதையை அவர் இரண்டு வருடமாக எழுதியிருக்கிறார். கதையை கேட்கும்போது ஆர்வமாக இருந்தது.

யுவன் இசை என்று சொன்னதும் குஷி ஆகிவிட்டேன். நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன் யுவன்.

விக்ரம் பிரபு - யுவன் சங்கர் ராஜா
விக்ரம் பிரபு – யுவன் சங்கர் ராஜா

என் தங்கையும் உங்களோட தீவிர ரசிகை. உங்கள் பாட்டைதான் பாடிக்கொண்டே இருப்பார்.

உங்களுடன் பணியாற்றுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. படப்பிடிப்பிற்கு செல்வதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed