Time

Cinema

oi-V Vasanthi

<!–

–>

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவான “கருப்பு” திரைப்படம் பல தடைகளை தாண்டி இறுதியாக இன்று வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சூர்யா மற்றும் திரிஷா இருவரும் வெளியிட்ட பதிவுகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கருப்பு படம் நடிகர்கள்

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியது. சூர்யா, திரிஷா தவிர நட்டி, யோகிபாபு, ஸ்வாசிகா, ஷிவதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Karuppu Movie Suriya Trisha RJ Balaji Tamil Cinema

இறுதியில் தீர்வு

“கருப்பு” படம் கடந்த சில மாதங்களாகவே ரிலீஸுக்கு தயாராக இருந்தாலும், பைனான்ஸ் மற்றும் விநியோக பிரச்சனைகள் காரணமாக தொடர்ந்து தள்ளிப்போய் வந்தது. இறுதியாக மே 14ஆம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டதால் முதல் நாள் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் நள்ளிரவு முதல் தியேட்டர்களில் காத்திருந்த ரசிகர்கள் கடும் ஏமாற்றமடைந்தனர். இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட கண்கலங்கிய வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டது அந்த நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தயாரிப்பு நிறுவனம் நன்றி பதிவு

இந்நிலையில், அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு இன்று படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமான பதிவில், “இந்தப் பயணம் எங்களுக்கு சோதனை நிறைந்ததாக இருந்தது. ஆனால் ரசிகர்களின் நம்பிக்கை தான் எங்களை இங்கே கொண்டு வந்தது. இன்று படம் உலகம் முழுவதும் வெளியாகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

Karuppu Movie Suriya Trisha RJ Balaji Tamil Cinema

சூர்யா – திரிஷா ரசிகர்களுக்கு அப்டேட்

இந்த அறிவிப்பை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் தனது சமூக வலைதளத்தில், “எங்களுடன் இருந்த அனைவருக்கும் நன்றி… இன்று திரையரங்குகளில் சந்திப்போம்” என்று பதிவிட்டுள்ளார். அதேபோல், நடிகை திரிஷாவும் படம் இன்று வெளியாகிறது என்பதை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த இரண்டு பதிவுகளும் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. “இத்தனை நாள் காத்திருந்தோம்… இப்போது தான் உண்மையான ரிலீஸ்” என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

ட்ரெய்லர் வெளியானதிலிருந்து “கருப்பு” படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பாக சூர்யாவின் வித்தியாசமான கேரக்டர், திரில்லர் அம்சங்கள், ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கம் ஆகியவை படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

பல தடைகளை கடந்து வெளியாகும் இந்த படம், பாக்ஸ் ஆபிஸில் எப்படி வரவேற்பைப் பெறும் என்பது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. “கருப்பு” படம் இன்று முதல் திரையரங்குகளில் திரையிடப்படுவதால், ரசிகர்கள் உற்சாகமாக காத்திருக்கிறார்கள்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed