Time

Cinema

oi-V Vasanthi

<!–

–>

சென்னை: நடிகர் ரவி மோகன், கடந்த சில நாட்களாக தனது குடும்ப பிரச்சனைகள் காரணமாக தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். குறிப்பாக சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்து வரும் சிக்கல்கள் குறித்து மனம் திறந்து பேசியது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வழக்கமாக அமைதியாக இருக்கும் ரவி மோகன், அந்த சந்திப்பில் கண்கலங்கியபடி பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.

Ravi Mohan Jayam Ravi Tamil Cinema Divorce Controversy Ayyappa Vratam

ரவி மோகன் குற்றசாட்டு

அந்த சந்திப்பில், தனது குழந்தைகளை பார்க்க முடியாத வேதனை, பண விஷயங்களில் கூட தனக்குச் சுதந்திரம் இல்லை என்ற குற்றச்சாட்டு, தன்னைச் சுற்றி நடந்த மனஅழுத்தங்கள் என பல விஷயங்களை அவர் பகிர்ந்திருந்தார். மேலும், “எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்க மாட்டேன்” என்று மிகவும் அதிரடியாக அறிவித்ததும் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் இந்த முடிவு அவசரமானது என்றும், சினிமாவை விட்டு விலகாமல் அவர் மீண்டும் தன்னம்பிக்கையுடன் திரும்ப வேண்டும் என்றும் ஆதரவு தெரிவித்தனர்.

ரவி மோகன் சொன்ன விஷயங்கள்

ரசிகர்கள் மட்டுமல்லாமல், சில திரைபிரபலங்களும் ரவி மோகனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். கடினமான காலத்தை கடந்து செல்லும் நிலையில், உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன. ஆனால் ரவி மோகன் தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவே அவரது வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் தற்போது ரவி மோகன் எடுத்திருக்கும் புதிய ஆன்மிக முடிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வரும் அவர், ஐயப்ப சாமி விரதத்தை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீல நிற உடையில், ஐயப்ப விரத தோற்றத்தில் இருக்கும் அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.

Ravi Mohan Jayam Ravi Tamil Cinema Divorce Controversy Ayyappa Vratam

ஐயப்ப விரதம் இருக்கும் ரவி மோகன்

பொதுவாக ஐயப்ப விரதம் என்பது உடல் கட்டுப்பாடு மட்டுமல்ல; மன அமைதி, பொறுமை, ஆன்மிக சுத்தம் ஆகியவற்றை தரும் ஒரு ஆன்மிக பயணம் என பலர் கருதுகின்றனர். அதனால் தான் தற்போது வாழ்க்கையில் பெரிய மன உளைச்சலை சந்தித்து வரும் ரவி மோகன், மன அமைதிக்காக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

ரவிமோகன் எடுத்த முடிவு

“இந்த கஷ்ட காலம் கடந்து போய்விடும்”, “ஐயப்பன் உங்களுக்கு நல்ல வழி காட்டட்டும்”, “மீண்டும் பழைய ரவி மோகனாக திரும்பி வர வேண்டும்” என ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

ஒருபுறம் விவாகரத்து வழக்கு, மறுபுறம் குழந்தைகள் பற்றிய ஏக்கம், சினிமாவில் இருந்து விலகும் முடிவு என தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு நடுவே ரவி மோகன் தற்போது ஆன்மிகத்தில் ஆறுதல் தேட தொடங்கியிருப்பது, அவரது ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed