Time

Cinema

oi-V Vasanthi

<!–

–>

சென்னை: நடிகர் சூர்யா நீண்ட காலமாக ஒரு மிகப்பெரிய தியேட்டர் வெற்றிக்காக காத்திருந்தார் என்றே சொல்லலாம். நல்ல கதைகள், வித்தியாசமான கதாபாத்திரங்கள், தரமான முயற்சிகள் என தொடர்ந்து முயற்சி செய்து வந்தாலும், ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிலான கமர்ஷியல் வெற்றி மட்டும் அவரை பல ஆண்டுகளாக தவிர்த்துக் கொண்டே இருந்தது. அந்த காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பது தற்போது வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வரும் கருப்பு திரைப்படம்.

Suriya Karuppu RJ Balaji Trisha Tamil Cinema Box Office Collection

கருப்பு பட பின்னணி

இயக்குநராகவும் நடிகராகவும் தனக்கென தனி இடம் பிடித்துள்ள ஆர்.ஜே. பாலாஜி, இந்த படத்தின் மூலம் சூர்யாவுக்கு சரியான கம்பேக் கொடுத்திருக்கிறார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். இந்திரன்ஸ், நடராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளம் தலைமுறையின் கவனத்தை ஈர்த்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசை அமைத்திருப்பதும் படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

Suriya Karuppu RJ Balaji Trisha Tamil Cinema Box Office Collection

முதலில் மே 14ஆம் தேதி வெளியாக இருந்த இந்த படம், சில காரணங்களால் ஒரு நாள் தாமதமாகி மே 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால் தாமதமானாலும் தரமாக வந்ததால் ரசிகர்கள் கொண்டாட்டம் வேற லெவலுக்கு சென்றுவிட்டது. முதல் நாளிலிருந்தே படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன. குறிப்பாக சூர்யாவின் திரை ஆளுமை, ஆர்.ஜே. பாலாஜியின் கதைக்களம், கிளைமாக்ஸ் காட்சிகள், சாய் அபயங்கரின் பின்னணி இசை ஆகியவை ரசிகர்களை கவர்ந்துவிட்டன.

கருப்பு படத்தின் பலம்

குறிப்பாக ஃபேமிலி ஆடியன்ஸிகளுக்கும், குழந்தைகளும் படத்தை ஏற்றுக்கொண்டிருப்பது கருப்பு படத்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. இதனால் வாரநாட்களிலும் திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

Suriya Karuppu RJ Balaji Trisha Tamil Cinema Box Office Collection

7வது நாள் வசூல் எவ்வளவு?

பாக்ஸ் ஆபீஸ் கணக்குகளை வெளியிடும் சாக்நில்க் தகவலின்படி, கருப்பு திரைப்படம் 7வது நாளான நேற்று இந்தியாவில் மட்டும் சுமார் 8.30 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம் இந்திய அளவில் மட்டும் படம் முதல் வார முடிவில் 114.05 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுவே ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்க, உலகளவில் இந்த படம் ஏற்கனவே 200 கோடி ரூபாய் வசூலை கடந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது கூடுதல் ஹைலைட்டாக மாறியுள்ளது.

Suriya Karuppu RJ Balaji Trisha Tamil Cinema Box Office Collection

சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்

“இப்படி ஒரு மாஸ் கமர்ஷியல் ஹிட் வெற்றிக்காக எத்தனை ஆண்டுகள் காத்திருந்தோம் தெரியுமா?” என்று சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். “ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவுக்கு செம கம்பேக் கொடுத்திருக்கிறார்” என்ற கருத்துகளும் குவிந்து வருகின்றன.

படத்திற்கு இன்னும் கூட்டம் குறையாத சூழலில், வரும் வார இறுதியிலும் வசூல் வேட்டை தொடரும் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கணிக்கின்றன. இந்த வேகத்தில் சென்றால் கருப்பு இன்னும் பெரிய சாதனையை படைக்கும் என்பதில் ரசிகர்களுக்கு சந்தேகமே இல்லை.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed