`எண்களுக்குள் 2026 உலகக்கோப்பை' - 1248 வீரர்கள், புதிய அணிகள்! தலைசுற்ற வைக்கும் புள்ளிவிவரங்கள்!

கால்பந்து ரசிகர்களின் மிகப்பெரிய திருவிழாவான ஃபிஃபா உலகக்கோப்பை, இந்த முறை வரலாறு காணாத பிரமாண்டத்துடன் அரங்கேற உள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 உலகக்கோப்பை,இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. இதுவரை இல்லாத வகையில் 48 அணிகள், 104 போட்டிகள், 1248 வீரர்கள் என புள்ளிவிவரங்கள் அனைத்தும் இந்தத் தொடர் எவ்வளவு பெரியது என்பதைப் பறைசாற்றுகின்றன. பல புதிய அணிகளின் அறிமுகம், உடையப்போகும் சாதனைகள் என இந்த உலகக்கோப்பை ஒரு புள்ளிவிவரப் புயலையே கிளப்பியுள்ளது.

FIFA

புதிய வடிவம், புதிய சவால்கள்!

1998-க்குப் பிறகு உலகக்கோப்பை தொடரின் வடிவம் மாற்றப்படுவது இதுவே முதல்முறை. கடந்த ஏழு தொடர்களாக 32 அணிகள், 64 போட்டிகள் என்றே நடந்து வந்த நிலையில், இந்த முறை அணிகளின் எண்ணிக்கை 48 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தொடக்கச் சுற்றில் 12 பிரிவுகள் உருவாக்கப்பட்டு, கூடுதலாக ‘ரவுண்ட் ஆஃப் 32’ என்ற புதிய நாக்-அவுட் சுற்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2002-ல் ஜப்பான் மற்றும் தென் கொரியா இணைந்து நடத்திய தொடருக்குப் பிறகு, ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து நடத்தும் இரண்டாவது உலகக்கோப்பை இதுவாகும். அமெரிக்காவில் 11, மெக்சிகோவில் 3, கனடாவில் 2 என மொத்தம் 16 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.

போட்டிகளின் பங்கீடு எப்படி?

மொத்தமுள்ள 104 போட்டிகளில், 78 போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறுகின்றன. காலிறுதி, அரையிறுதி மற்றும் மெட்லைஃப் மைதானத்தில் நடக்கும் இறுதிப்போட்டி என அனைத்தும் அமெரிக்காவில்தான். மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் தலா 13 போட்டிகளை நடத்தவுள்ளன. ஜூன் 11 அன்று நடக்கும் தொடரின் முதல் போட்டியில் மெக்சிகோ அணி, தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. ஜூன் 12 அன்று கனடா அணி, போஸ்னியா-ஹெர்சகோவினாவுடன் மோதுகிறது.

1,248 வீரர்கள்: இது ஒரு புதிய உலக சாதனை. 71 நாடுகளைச் சேர்ந்த 449 கிளப்களில் இருந்து 1,248 வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றனர். இவர்களில் 357 பேர் ஏற்கனவே உலகக்கோப்பையில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். மீதமுள்ள 891 வீரர்களுக்கு இதுவே முதல் உலகக்கோப்பை.

லீக் பலம்: அதிகபட்சமாக இங்கிலாந்து லீக்குகளில் இருந்து 200 வீரர்கள் தேர்வாகியுள்ளனர். ஜெர்மனி (109), பிரான்ஸ் (86), ஸ்பெயின் (86) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் தொடரிலிருந்து 44 வீரர்கள் நேரடியாகப் பங்கேற்பது ஒரு புதிய சாதனையாகும்.

கிளப் ஆதிக்கம்: மான்செஸ்டர் சிட்டி கிளப், அதிகபட்சமாக 19 வீரர்களை உலகக்கோப்பைக்கு அனுப்பியுள்ளது. பேயர்ன் முனிச் (18), பிஎஸ்ஜி மற்றும் அர்செனல் (தலா 16) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ரொனால்டோ vs மெஸ்ஸி: போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 226 சர்வதேசப் போட்டிகளுடன் இந்தத் தொடரில் களமிறங்கும் அனுபவமிக்க வீரராகிறார். மெஸ்ஸியைப் போலவே, தனது 6-வது உலகக்கோப்பையில் பங்கேற்று சரித்திரம் படைக்க உள்ளார். ஏற்கனவே 5 உலகக்கோப்பைகளில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையுடன், தற்போது மேலும் ஒரு சாதனையை எதிர்நோக்கியுள்ளார்.

கோல் மன்னன் யார்?: ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸ் வைத்துள்ள 16 கோல்கள் என்ற உலகக்கோப்பை சாதனையை முறியடிக்க கடும் போட்டி நிலவுகிறது. அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி 13 கோல்களுடன் இந்த சாதனையை நெருங்கி வருகிறார். அவருக்குப் பின்னால், பிரான்ஸின் இளம் புயல் கிலியன் எம்பாப்பே இரண்டு தொடர்களில் 12 கோல்கள் அடித்து மிரட்டுகிறார். இந்த முறை குளோஸின் சாதனை முறியடிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

மெஸ்ஸி, எம்பாப்பே

வரலாறும், சாபங்களும்!

எட்டு சாம்பியன்கள்: உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை 8 அணிகளே கோப்பையை வென்றுள்ளன. பிரேசில் (5), ஜெர்மனி மற்றும் இத்தாலி (4), அர்ஜென்டினா (3) அணிகள் முன்னிலையில் உள்ளன.

நடப்பு சாம்பியன் சாபம்: நடப்பு சாம்பியனாக களமிறங்கும் அணிகள் அடுத்த தொடரில் தடுமாறுவது வாடிக்கையாகிவிட்டது. ஆறு முறை நடப்பு சாம்பியன்கள் லீக் சுற்றிலேயே வெளியேறியுள்ளனர். கடந்த நான்கு தொடர்களில் இத்தாலி (2010), ஸ்பெயின் (2014), ஜெர்மனி (2018) என மூன்று அணிகள் இந்த சாபத்திற்கு ஆளாகின. ஆனால், 2022-ல் பிரான்ஸ் இறுதிப்போட்டி வரை முன்னேறி இந்த சாபத்தை உடைத்தது.

பிரான்ஸின் ஹாட்ரிக் கனவு: மேற்கு ஜெர்மனி மற்றும் பிரேசிலுக்குப் பிறகு, தொடர்ந்து மூன்று முறை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மூன்றாவது அணி என்ற பெருமையை பிரான்ஸ் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடரும் பிரேசிலின் ஆதிக்கம்: இதுவரை நடந்த 23 உலகக்கோப்பைகளிலும் பங்கேற்ற ஒரே அணி பிரேசில் மட்டுமே. அதிக வெற்றிகள் (76), அதிக கோல்கள் (237) என பல சாதனைகளைத் தன்வசம் வைத்துள்ளது.

புதுவரவுகளும், சுவாரஸ்யங்களும்!

நான்கு புதிய அணிகள்: கேப் வெர்டே, குராகோ, ஜோர்டான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் முதல்முறையாக உலகக்கோப்பையில் கால்பதிக்கின்றன.

குட்டி நாடு, பெரிய கனவு: வெறும் 1,58,000 மக்கள் தொகை கொண்ட குராகோ, உலகக்கோப்பைக்குத் தகுதிபெற்ற மிகச்சிறிய நாடு என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.

வயதில் ஒரு வித்தியாசம்: இந்தத் தொடரின் மூத்த வீரரான ஸ்காட்லாந்து கோல்கீப்பர் கிரேக் கார்டனுக்கும் (43), இளம் வீரரான கில்பெர்டோ மோராவுக்கும் (17) இடையே 25 வயது வித்தியாசம் உள்ளது.

“`

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Быстро собираем первичную информацию, оцениваем риски и предлагаем подходящий вариант обращения. Подробнее – [url=https://vivod-iiz-zapoya-v-sankt-peterburge16.ru/]www.vivod-iiz-zapoya-v-sankt-peterburge16.ru[/url]

  2. Reading this gave me the rare experience of fully agreeing with all the conclusions, and a stop at walnutcoveartisanhouse continued…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed