முதல்வர் விஜய் உள்பட 9 அமைச்சர்களின் இலாகா ஒதுக்கீடு - Kumudam

தமிழக முதல்வராக மே 10-ம் தேதி பதவியேற்று கொண்டார். அவருடன் சேர்த்து புஸ்ஸிஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் உள்பட 9 பேர் பதவியேற்று கொண்டனர். 6 நாட்கள் ஆகியும் அமைச்சர்களின் இலாகா ஒதுக்காமல் இருந்தது. இது முதல்வர் விஜய் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது. அமைச்சர்களாக பொறுப்பேற்றும், இலாகாவிற்கு அமைச்சர்கள் ஒதுக்காமல் இருந்ததால் கோப்புகள் தேக்கம் அடைந்தன. 

இந்த நிலையில், இன்று மதியம் முதல்வர் விஜய் முதன்மை செயலர் செந்தில் ஆளுநரை நேரில் சந்தித்து இருந்தார். அப்போது பதவியேற்று கொண்ட அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு பட்டியலை அளித்தார். அதுமட்டுமின்றி, அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாகவும் ஆளுநருடன் செயலர் செந்தில் ஆலோசித்து இருந்தார். 

இந்நிலையில், முதல்வர் உள்பட 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்து ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. முதல்வர் விஜய் – காவல், உள்துறை, பொது நிர்வாகம், மகளிர் மேம்பாடு, இளைஞர் நலன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகம், என். ஆனந்த் – ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் – ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து ஒன்றியம், பாசனத் திட்டங்கள்.

ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணித் துறை(கட்டடங்கள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்), விளையாட்டு மேம்பாட்டுத் துறை. கே.ஜி. அருண்ராஜ் – மருத்துவம் மற்றும் மக்கள் நால்வாழ்வுத் துறை. செங்கோட்டையன் – நிதித் துறை (நிதி, ஓய்வூதிங்கள்)

வெங்கட ரமணன் – உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை. சிடிஆர் நிர்மல் குமார் – மின்சாரம் மற்றும் சட்டத் துறை. ராஜ் மோகன் – பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை. டி.கே. பிரபு – கனிமவளங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை. கீர்த்தனா – தொழில் துறை என துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Если человек обращается после длительного употребления, лечение может начинаться с очищения организма. Детоксикация проводится с учетом состояния пациента и возможных…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed