சட்டமன்ற தேர்தல் 3 மணி நிலவரம் :   70  சதவிகிதம் வாக்குப்பதிவு, 4 கோடி பேர் வாக்களிப்பு   - Kumudam

தமிழகத்தில் 234 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று(ஏப். 23) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சுமார் 5.73 கோடி பேர் வாக்களிக்கின்றனர். மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை முதலே மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீதம், 11 மணி நிலவரப்படி 37.56 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 62.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 50.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

3 மணி நிலவரம் : 70 சதவிகிதம் 

மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 70 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகப்பட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவிகி வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்த பட்சமாக 61.95 சதவிகித வாக்குகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பதிவாகி உள்ளன. தொகுதியை பொறுத்தவரை குமாரப்பாளையத்தில் 80.67 சதவீத வாக்குகளும், குறைவாக பாளையங்கோட்டை தொகுதியில்  56.15 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. 

2021 சட்டமன்ற தேர்தலில் 3 மணி நிலவரப்படி 53.08 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. கடந்த தேர்தலை விட இந்த முறை 16.92 சதவீத வாக்குகள் கூடுதலாக பதிவாகி இருப்பது குறிப்பிடதக்கது. 3 மணி வரை 4 கோடி வாக்காளர் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். 

Source link


  1. ArthurMIG Avatar

    Главный материал дня: https://bestsport.com.ua

  2. Albertasync Avatar
    Albertasync

    Пройдите комплексное лечение https://medprime-clinic.ru и диагностику в медицинском центре. Полный спектр обследований, консультации профильных специалистов, современные методы лечения, контроль состояния здоровья и индивидуальный подход на всех этапах медицинской помощи.

  3. EmilioJeomo Avatar
    EmilioJeomo

    Закажите G202 https://mismar74.ru/G202.html онлайн. Актуальные цены, наличие на складе, технические характеристики, выгодные условия покупки и быстрая доставка по всей России.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports