லதா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் ‘மக்கள் மேடை’ என்கிற பெயரிலான இயக்கம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் பேசியிருந்த அவர், “எங்களுடைய இயக்கம் மூலமாக இந்த மாநிலத்துக்குப் பணி செய்ய நினைக்கும் அனைவரும் எங்களுடன் இணையலாம்.

லதா ரஜினிகாந்த்

பெரிய மக்கள் சக்தியாக உருவாகி மாநிலத்திற்குப் பல நன்மைகள் செய்திட முன் வாருங்கள். ஒன்றாகச் சேர்ந்து ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்வோம். உள்ளூர்களில் தலைவர்களை உருவாக்க வேண்டும்.

வலிமையும், சிந்தனைகளையும், பங்களிப்புகளையும் மக்கள் இந்த மாநிலத்திற்குத் தருவதற்குத் தயாராக இருக்கிறார்கள். ஒன்றாகச் சேர்ந்து, ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து நல்ல பல காரியங்களைச் செய்வோம்” எனத் தெரிவித்திருந்தார்.

லதா ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியாவைப் பார்த்து அவர் புதிதாக ‘மக்கள் மேடை’ என்ற இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் நேற்று இந்த இயக்கத்தைத் தொடங்கவில்லை.

லதா ரஜினிகாந்த்
லதா ரஜினிகாந்த்

கடந்த மார்ச் 7-ம் தேதியே சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த ‘மக்கள் மேடை’ அமைப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி இருக்கிறார். இதனை அவர் தனது சமூக வலைதளப்பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed