தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இயல்பை விட 2° – 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°–41° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34°–38° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்:

காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை :

அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 42.2° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.5° செல்சியஸ், சேலத்தில் 41.0° செல்சியஸ், வேலூரில் 40.8° செல்சியஸ், திருச்சியில் 40.6° செல்சியஸ், மதுரை விமானநிலையம் & திருப்பத்தூரில் 40.2° செல்சியஸ் மற்றும் திருத்தணியில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35° – 39° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 24° –30° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 37.8° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.4° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

திற்பரப்பு (கன்னியாகுமரி) 4, தாளவாடி (ஈரோடு), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 2, சோலையார் (கோயம்புத்தூர்), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), பாலமோர் (கன்னியாகுமரி) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
Актуальный материал: https://siten.ru
Смотреть полный текст: https://siten.ru
Fresh story inside www.masfufat-alqadar.com
Читайте свежий материал: https://hidplanet.ru
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

“மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!”- திமுக தலைவர் ஸ்டாலின் | dmk stalin about changes in party | ACTPnews.com

“என்னுடைய அரசியல் ஆசானாக அண்ணன் திருமாவளவனை ஏற்றுக்கொள்கிறேன் என்று.!”- வன்னி அரசுக்கு உதயநிதி பதில்| udhayanidhi stalin answer to vanni arasu in tn assembly | ACTPnews.com

'கொளத்தூர் தொகுதியை சேகர் பாபுவிடமிருந்து பறிக்கும் திமுக?' – கட்சி மறுசீரமைப்பை தொடஙகிய ஸ்டாலின்! | ACTPnews.com

நேபாள வெள்ளம்: தமிழர்களை மீட்கத் தீவிர நடவடிக்கை – வெங்கட் நாராயணா! | Nepal Floods: TN Special Rep Venkatnarayana Update on Rescue Ops | ACTPnews.com

சொத்துவரி விவகாரம்: கேள்வி கேட்ட திமுக கவுன்சிலர்; சரண்டர் ஆன சென்னை மாநகராட்சி ஆணையர்! – | ACTPnews.com

Current recommendations matriz-del-destino org