பழம்பெரும் கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார் – கன்னட ரசிகர்கள் சோகம்
கன்னட திரையுலகின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என பன்முகத் திறன் கொண்டவர் துவாரகேஷ். பழம்பெரும் நடிகரான இவர் கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ்பெற்றவர். வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 81. மேலும் படிக்க:  RIP Actor Dwarakish: பழம்பெரும் கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகம்
கோட் படத்தின் விசில் போடு பாடல் சொதப்பியதன் காரணம் என்ன?
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும், த.வெ.க. கட்சித் தலைவருமான விஜய் நடிப்பில் கோட் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற விசில் போடு பாடல் நேற்று முன்தினம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த பாடல் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை. இந்த நிலையில், இந்த பாடல் சரியாக வராதது குறித்து அப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க: Yuvan Shankar Raja: GOAT விசில் போடு பாடல் சொதப்பியதற்கு இதுதான் காரணமா? – யுவனின் பதிலை பாருங்க!
கோட் படத்தில் விஜயகாந்த்! கேப்டன் ரசிகர்கள் படு உற்சாகம்!
பிரபல நடிகர் விஜய் நடிப்பில் கோட் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன், பிரபல நடிகர்கள் மோகன், பிரசாந்த், பிரபுதேவா மற்றும் அஜ்மல் நடித்துள்ளனர். இந்த நிலையில், விஞ்ஞானம், அறிவியல் பற்றிய இந்த படத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் மறைந்த நடிகர் விஜயகாந்த் கதாபாத்திரம் ஒன்று இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க: The Greatest of All Time: 31 ஆண்டுகளுக்கு பின் விஜய் படத்தில் விஜயகாந்த்.. ஓகே சொன்ன பிரேமலதா!
சல்மான் கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேர் கைது
பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர் சல்மான்கான். ஷாருக்கானின் போட்டி நடிகராக கருதப்படும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் மும்பை பாந்த்ராவில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 14ம் தேதி சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் படிக்க:  Salman Khan: சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு – 2 பேரை கைது செய்தது காவல்துறை
வேட்டையன் படத்தில் ரசிகர்களை சிரிக்க வைக்கப்போகும் ரஜினி – ஃபகத் பாசில் காம்போ:
சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் பிரபல மலையாள நடிகர் ஃபகத் பாசிலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஃபகத் பாசிலுக்கு நகைச்சுவையான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியுடனான அவரது காட்சிகள் ரசிகர்கள் வயிறு குலுங்கி சிரிக்கும் அளவிற்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் படிக்க: Vettaiyan: கோலிவுட்டையே அதிரவைக்கப்போகும் ரஜினி -ஃபகத் காம்போ! வேட்டையன் அப்டேட்!
 
 
 
 

மேலும் காண

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed