Rahul Gandhi In Nellai: தமிழ்நாட்டின் வாயிலாக இந்தியாவை புரிந்து கொள்வதாக திருநெல்வேலி பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார். சமூக நீதியில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் பாதையை வகுத்து கொடுத்ததாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
வரும் 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்குகிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருநெல்வேலியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்தை நேசிக்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சம் நிறைந்த அன்போடு நேசிக்கிறேன். தமிழ்நாட்டின் கலாச்சாரம், வரலாறு, மொழி என்னை மிகவும் ஈர்த்துள்ளது. எனக்கு தமிழக மக்களிடம் இருப்பது அரசியல் ரீதியான உறவு அல்ல, அது குடும்ப உறவு.
சமூக நீதியின் பாதையில் எப்படி நடக்கவேண்டும் என்பதை நாட்டு மக்களுக்கு தமிழ்நாடு எடுத்துரைக்கிறது. அதனால் தான் பாரத் ஜோடோ யாத்திரையை தமிழ்நாட்டில் தொடங்கினேன். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4000 கிமீ நடந்து மாபெரும் தத்துவங்களை தெரிவித்தோம்.
எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேனோ அப்போதெல்லாம் தமிழகத்தை பார்க்கிறேன். தமிழை பேச முடியவில்லை என்றாலும் தமிழின் நூல்களை படித்திருக்கிறேன். இந்தியாவின் கண்ணாடியாக தமிழகத்தை பார்க்கிறேன்” என்றார்.
மேலும் காண

























Better than the average post on this subject by some distance, and a look at loudmark reinforced that, you can…