தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (ஏப்ரல் 11) முதல் 5 நாட்களுக்கு லேசான மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்‌ இன்று தெரிவித்து உள்ளதாவது:

11.04.2024: தென்‌ தமிழகத்துல்‌ ஒருசில இடங்களிலும்‌, வட தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதியிலும்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

12.04.2024: தமிழகத்துல்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

13.04.2024: தென்‌ தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, வட தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதியிலும்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

14.04.2024 முதல்‌ 16.04.2024 வரை: தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

17.04.2024: தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவக்கூடும்‌.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

11.04.2024 முதல்‌ 15.04.2024 வரை:

அடுத்த ஐந்து தினங்களில்‌ தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அதிகபட்ச வெப்பநிலையில்‌ பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

11.04.2024:

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில்‌ ஒருசில இடங்களில்‌ 2- 3 டிகிரி செல்சியஸ்‌ இயல்பை விட அதிகமாகவும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இயல்பை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள்‌ மாவட்டங்களின்‌ சமவெளி பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ 37-40 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ கடலோரப் பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ 33- 37 டிகிரி செல்சியஸ்‌ இருக்கக்கூடும்‌.

ஈரப்பதம்‌:

11.04.2024:

காற்றின்‌ ஈரப்பதம்‌ தமிழக உள்‌ மாவட்டங்களின்‌ சமவெளி பகுதிகளில்‌ பிற்பகலில்‌ 30-50% ஆகவும்‌, மற்ற நேரங்களில்‌ 40-70 % ஆகவும்‌ மற்றும்‌ கடலோரப் பகுதிகளில்‌ 50-80 % ஆகவும்‌ இருக்கக் கூடும்‌.

அதிக வெப்பநிலை மற்றும்‌ அதிக ஈரப்பதம்‌ இருக்கும்‌ பொழுது ஓரிரு இடங்களில்‌ அசெளகரியம்‌ ஏற்படலாம்‌.

சென்னை மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்‌சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26- 27 டிகிரி செல்‌சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

மேலும்‌ விவரங்களுக்கு: https://imd.gov.in/chennai/ இணையதளத்தை காணவும்‌.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
nexus link wethenorth market link
leuke casino Also visit my site – beste Poker nederland (https://barriosenaccion.com.ar)
dark market list nexus dark web
Для выбора надежного партнера рекомендуем ознакомиться с [url=https://media-garage.ru/moya-kollekciya/rejting-sistemnyh-multimedia-integratorov-goroda-moskvy]рейтинг мультимедийных интеграторов[/url], который поможет найти лучших специалистов в Москве. На первых позициях…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

முதல்வரும் அவையில் இல்லை; தலைமைச் செயலாளரும் இல்லை – சபாநாயகரிடம் ரிப்போர்ட் செய்த உதயநிதி | ACTPnews.com

தளபதி எக்ஸிட்; பி.டி.ஆர் என்டரி? டு `புது நட்பு?’ விஜய் – மத்திய மாண்புமிகு ரகசிய சந்திப்பு| கழுகார் | Kazhugar updates on PTR and TVK, BJP politics | ACTPnews.com

“தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என நாங்கள் பேசக் கூடாதா?” – கேட்கிறார் அமைச்சர் விக்னேஷ் | TN Minister Vignesh Questions: “Why Can’t Tamil Nadu Produce a Prime Minister? | ACTPnews.com

“கவிஞர்கள் ஒரு வரியை இரண்டு முறை ஆழமாக சொல்வது என்பது வழக்கம்”- கே.என்.நேருவுக்கு விஸ்வநாதன் பதில்! | minister Viswanathan explain about k.n nehru statement | ACTPnews.com

Iran: "மொஜ்தபா காமேனி இறந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை; ஆனால்.." – ட்ரம்ப் சொல்வது என்ன? | ACTPnews.com

Если вам требуется качественный [url=https://remont-dvig124.ru]Ремонт двигателей[/url], обращайтесь к профессионалам. Так обеспечивается длительная и стабильная эксплуатация транспортного средства.