Time

Cinema

oi-V Vasanthi

<!–

–>

சென்னை: சூர்யா ஹீரோவாகவும், திரிஷா ஹீரோயினாகவும் நடித்திருக்கும் கருப்பு திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் மிரட்டலாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ததோடு மட்டுமல்லாமல், வசூலிலும் அசத்தி வருகிறது.

Suriya Karuppu Trisha RJ Balaji Box Office

கருப்பு படம் பின்னணி

நடிகராகவும், கதாசிரியராகவும், இயக்குநராகவும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய ஆர்.ஜே.பாலாஜி, இந்த முறை சூர்யாவுடன் கைகோர்த்தது ரசிகர்களிடம் அதிக ஆர்வத்தை உருவாக்கியது. சாய் அபயங்கர் இசையமைப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம், மே 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

விமர்சனம்

படம் வெளியான முதல் காட்சியிலிருந்தே ரசிகர்களிடமிருந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன. குறிப்பாக, படத்தின் ஆன்மீகத் தன்மை, சூர்யாவின் ஸ்கிரீன் ப்ரெசென்ட், திரிஷாவின் நடிப்பு, பின்னணி இசை, திரைக்கதை அமைப்பு என பல அம்சங்கள் ரசிகர்களை கவர்ந்தன. பல தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலானது.

வெளியீட்டுக்கு முன்பும் பின்பும் சில சர்ச்சைகள் படத்தைச் சுற்றி எழுந்தன. சில காட்சிகள் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்தாலும், அவை எதுவும் படத்தின் வெற்றிப் பயணத்தை பாதிக்கவில்லை. மாறாக, அந்த பேசுபொருள்களே படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

அதிகரித்த பாக்ஸ் ஆபிஸ்

முக்கியமாக, இந்தப் படத்தை பல ரசிகர்கள் ஒருமுறை பார்த்து நிற்காமல், இரண்டாவது, மூன்றாவது முறையாக குடும்பத்தோடு சென்று பார்ப்பதாக கூறப்படுகிறது. இதுவே ஒரு படத்தின் நீண்டகால வெற்றிக்கு முக்கிய காரணம் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கருதுகின்றன.

இந்த மாபெரும் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் படக்குழுவினர் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள திரையரங்குகளுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார்கள். ரசிகர்களின் இந்த அன்பான வரவேற்பு படக்குழுவினருக்கும் கூடுதல் உற்சாகத்தை அளித்திருக்கிறது.

கருப்பு படம் எட்டாவது நாள் வசூல் நிலவரம்

இந்நிலையில், படத்தின் 8வது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. தகவல்களின் படி, நேற்று மட்டும் இந்தியாவில் சுமார் 7.80 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் மட்டும் மொத்த வசூல் 150 கோடி ரூபாயை நெருங்கியிருக்கிறது. உலகளவில் 200 கோடி ரூபாயை தாண்டி படம் பாய்ந்துகொண்டிருக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பொதுவாக முதல் வாரத்துக்கு பிறகு பல படங்களின் வசூல் சரிவை சந்திக்கும். ஆனால் கருப்பு படம் எட்டாவது நாளிலும் கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது, இந்தப் படத்தின் வெற்றி சாதாரணமல்ல என்பதை நிரூபிக்கிறது.

மகிழ்ச்சியில் சூர்யா

சூர்யாவின் கேரியரில் இந்த படம் இன்னொரு மிகப்பெரிய மைல்கல்லாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது. இந்த வேகம் தொடர்ந்தால், கருப்பு இன்னும் பெரிய வசூல் சாதனைகளை படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Специалисты регулярно помогают при интоксикации, запоях, абстиненции и сложных состояниях зависимости. Изучить вопрос подробнее – [url=https://viivod-iz-zapoya-v-sankt-peterburge16.ru/]вывод из запоя с выездом…

  2. При многодневном запое продукты распада алкоголя создают нагрузку на печень, сердце, мозг, нервную систему и другие внутренние органы. У пациента…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed