7 Am Headlines today 2024 april 27th headlines news Tamil Nadu News India News world News | 7 AM Headlines: உள்ளூர் முதல் உலக நிகழ்களின் தொகுப்பாக

தமிழ்நாடு:

தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 ஃபாரன்ஹீட்டை தாண்டியது வெயில் – அதிகபட்சமாக ஈரோட்டில் 108 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதால் பொதுமக்கள் அவதி
மக்களவை தேர்தல் முடிந்தபிறகு தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும் – அமைச்சர் பெரியகருப்பண்
தமிழ்நாட்டிற்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்போம் – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
தேர்தல் நேரத்தில் தாம்பரம் ரயிலில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்
உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயம் – நாகர்கோவிலிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற பேருந்து ஆசனூர் பகுதியில் கவிழ்ந்தது
அரசு மருத்துவமனையில் பணியாற்ற மறுக்கும் மருத்துவர்களின் அணுகுமுறை பாராட்டத்தக்கது அல்ல – சென்னை உயர்நீதிமன்றம்
கோடை சீசன்: ஊட்டி- மேட்டுப்பாளையம் இன்று முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றம்
குடும்பத்தகராறில் மாமனார், மாமியார் உட்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு – திண்டுக்கல்லில் மருமகள் குடும்பத்தினர் வெறிச்செயல்

 
இந்தியா:

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இரண்டாம் கட்டமாக 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு – சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவு
மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கொளுத்தும் வெயில். நாட்டிலேயே அதிகபட்சமாக ஆந்திராவின் நந்தியால் பகுதியில் 112 பாரன்ஹீட் வெப்பம் பதிவு!
ஒப்புகைச் சீட்டுகளை 100% எண்ணக்கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி. மீண்டும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டுவர உத்தரவிட முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
பாஜகவை சொம்புடன் ஒப்பிட்டு கிண்டல் செய்த ராகுல் காந்தி 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற பேச்சை மோடி தற்போது நிறுத்தி விட்டதாகவும் சாடல்!
பிரதமர் மோடி முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்தார், விசாயிகளின் கடனை அல்ல – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
பிரதமர் மோடியின் தலைமையில்  இந்தியா 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது – ஜே.பி. நட்டா
தேர்தலில் மோடி அலை எதுவுமில்லை, விஷம் தான் பரவியுள்ளது – காங்கிரஸ் சாடல்
சல்மான் கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரம் – பிரபல ரவுடியின் சகோதரருக்கு லுக்-அவுட் நோட்டீஸ்

உலகம்:

அமெரிக்காவில் போலீசாரின் கைது நடவடிக்கையின் போது கருப்பின நபர் மூச்சு திணறி பலி – இணையத்தில் வைரலாகும் வீடியோ
உக்ரைனுக்கு ஏவுகணை தடுப்பு உட்பட, 6 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத உதவி வழங்கப்படும் – அமெரிக்கா
ஆப்ரிக்கா நாட்டில் கிளர்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறி  223 பேரை சுட்டுக் கொன்ற ராணுவம்
கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிலங்கலங்கள் – ஆஸ்திரேலியாவில் பரபரப்பு

விளையாட்டு:

கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை சேஸ் செய்து பஞ்சாப்  வெற்றி- டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள்: முதல் போட்டியில் மும்பை – டெல்லி அணிகளும், இரண்டாவது போட்டியில் லக்னோ – ராஜஸ்தான் அணிகளும் மோதல்

 
 

Published at : 27 Apr 2024 07:36 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link