தமிழ்நாடு:

தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் – 43,051 மையங்களில் நடைபெறும் என அறிவிப்பு 
சென்னையில் முக்கிய இடங்களில் ஏர்டெல் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதி 
மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நாளை திறப்பு – இன்று ரயில் மூலம் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் 
ஆவினில் ஐஸ்கிரீம் விலை உயர்வு – இன்று முதல் அமலுக்கு வருகிறது
சென்னையில் நாளை பாஜக பொதுக்கூட்டம் – பிரதமர் மோடி கலந்து கொள்வதால் பலத்த பாதுகாப்பு 
அய்யா வைகுண்டர் அவதார திருநாள் விழா – அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து 
அதிமுக மகளிரணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராம் நியமனம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
திருக்கோவிலூர், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் – தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தகவல் 
தஞ்சாவூரில் புதிய திருவோணம் வட்டம் உருவாக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் நாளை முதல் 4 நாட்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் – மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்
மாமல்லப்புரம் அருகே கடலில் ராட்சத அலையில் சிக்கி மாணவர் உயிரிழப்பு – 4 பேர் மாயம்
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் பதவிக்காலத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு 
பராமரிப்பு காரணமாக 44 மின்சார ரயில்கள் இன்று ரத்து – சென்னை கடற்கரை, தாம்பரம் வழித்தடத்தில் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம் 

இந்தியா:

மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு – பிரதமர் மோடி மீண்டும் வாரணாசியில் போட்டி 
பாஜக கூட்டணியிலேயே எப்போதும் நீடிப்பேன் – பிரதமர் மோடியிடம் நேரடியாக வாக்குறுதி கொடுத்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு – விசாரணைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
பீகாரில் ரூ.34,800 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் – குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது என மாநில அரசு திட்டவட்டம் 
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது 
அம்பானி வீட்டு திருமணத்துக்கு ஜாம்நகர் விமான நிலையத்துக்கு 10 நாட்கள் சர்வதேச அந்தஸ்து – பலரும் கடும் கண்டனம் 
தபால் வாக்கு மூலம் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 85 ஆக உயர்வு – இந்திய தேர்தல் ஆணையம் தகவல் 
5 நாட்கள் ஓய்வுக்குப் பின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மீண்டும் நடைபயணம் தொடங்கிய ராகுல் காந்தி 

உலகம்:

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் செங்கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம் – ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு 
போர் நடைபெறும் காசாவில் விமானம் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீச அமெரிக்கா திட்டம்
பாகிஸ்தான் அரசியல் பரபரப்பு – ஆசிப் அலி சர்தாரிக்கு எதிராக முகமது கானை குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவித்தார் இம்ரான் கான்

விளையாட்டு:

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்; பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை அணி
ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – விரைவில் சென்னை வருகிறார் தோனி 
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் – இன்றைய ஆட்டத்தில் குஜராத், டெல்லி அணிகள் மோதல் 
ஐஎஸ்எல் கால்பந்து தொடர்; சென்னை – ஒடிசா அணிகள் இன்று மோதல் 

Published at : 03 Mar 2024 07:25 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed