7 am headlines today 2024 2nd february headlines news tamilnadu india world interim budget

தமிழ்நாடு:

ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் – திமுக எம்.பிக்கள் டெல்லியில் போராட்டம் நடத்தவும் உத்தரவு
தமிழ்நாடு சட்டப்பேரவ கூட்டத்தொடர் வரும் 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது – 19ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
பட்ஜெட்டில் ஒன்றிய அரசு மீண்டும் அல்வா கிண்டியுள்ளது – அமைச்சர் உதயநிதி விமர்சனம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விவகாரத்தில் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசை பாராட்டிய சென்னை உயர்நீதிமன்றம்
சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்

இந்தியா:

பிரதமர் மோடியின் 2.0 அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் – தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிப்பு
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந் சோரனுக்கு ஒருநாள் நீதிமன்ற காவல் – கைது நடவடிக்கைக்கு எதிரான வழக்கு இன்று விசாரண
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த சம்பாய் சோரனை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்
ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்களின்றி சென்னைக்கு கொண்டு செல்ல முயன்ற ரூ.7.23 கோடி பறிமுதல் – 15 பேரை பிடித்து காவல்துறை விசாரணை

உலகம்:

ஜப்பானில் இரண்டு பயணிகள் விமானம் நேருக்கு நேர் மோதி விபத்து
மெக்ச்கோவில் பேருந்து – லாரி மோதி விபத்து – 19 பேர் பலி
ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களிம் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் சந்திப்பு

 
விளையாட்டு:

இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது – முதல் போட்டி தோல்விக்கு பழிதீர்க்குமா இந்தியா?

 
 
 

Published at : 02 Feb 2024 07:04 AM (IST)

மேலும் காண

Source link