தமிழ்நாடு:
தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை: 1,598 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ரூ.732 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
டிஎன்பிஎஸ்சிக்கு புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு
10ம் வகுப்பில் விருப்ப பாடத்துக்கும் தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயம்; 2024-25ம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு
அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிராக 2021ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தேர்தல் விதிமீறல் வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மேகதாது அணை கட்ட வேண்டும் என்றால் தமிழ்நாட்டின் அனுமதி வேண்டும், அனுமதி பெறாமல் கட்ட முடியாது என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் வரும் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
என் மண் என் மக்கள் நிறைவு விழா தேதியில் அரசு நிகழ்ச்சி இருப்பதால், பிரதமரின் வருகை தேதியை உறுதி செய்த பின் தேதி அறிவிக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரையில் வட்டாட்சியரை தாக்கியதாக கூறப்பட்ட வழக்கில் மு.க அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 22 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா:
வருமான வரித்துறையால் முடக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை மீண்டும் பயன்படுத்த அனுமதி – தீர்ப்பாயம் நடவடிக்கை
டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவர உள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு
வாலட், ஃபாஸ்டாக் உள்ளிட்ட பே-டிஎம் சேவைகளை பயன்படுத்த மேலும் 15 நாள் அவகாசம் நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவு
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக உத்தர பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணையை கட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஆன்லைனிலேயே திருமணப் பதிவு செய்யும் நடைமுறை நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
டெல்லி ஐஐடி கல்லூரியில் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரத் ஜடோ நியாய யாத்திரையில் பிகாரின் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்று ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்தார்.
உலகம்:
ரஷ்ய தம்பதியினர் குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டுமென புதின் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவில் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மரணத்திற்கு புதினே பொறுப்பு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கிரீஸ் நாடாளுமன்றத்தில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் மசோதா நிறைவேற்றம்
அமெரிக்காவில் கடந்த 2 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு பனிப்பொழிவு – 1,000 விமானங்கள் ரத்து
விளையாட்டு:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டினை கைப்பற்றினார்.
டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் முன்னேறினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்
சர்பராஸ் கானின் தந்தை நவுசாத் கானுக்கு கார் பரிசளிப்பதாக ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு
Published at : 17 Feb 2024 07:05 AM (IST)
மேலும் காண