7 AM Headlines: பரபரப்பாக சுழலும் சமூகத்தின் முக்கிய நிகழ்வுகள்.. காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ!

தமிழ்நாடு:

இன்று காந்தியடிகள் நினைவு தினம் – மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு – பிப்ரவரி 28 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்

சட்டவிரோதமாக இயங்கும் 134 இறால் பண்ணைகளை மூட வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ]

4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை – ஹாங்காங் இடையே விமான சேவை தொடக்கம்

தமிழ்நாட்டை கடனாளி மாநிலமாக மாற்றியது தான் திமுகவின் சாதனை – அண்ணாமலை விமர்சனம்

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் டாஸ்மாக்கில் மதுபானம் விலை உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கோயம்பேட்டில் பேருந்து நிலைய இடத்தில் லுலு மால் அமைக்கப்படுவதாக வெளியான தகவல் வதந்தி – தமிழ்நாடு அரசு

மாநகர பேருந்துகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதி விரைவில் அறிமுகம்

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீடியாமேனியா என்ற பாதிப்பு உள்ளது – அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்

சங்கி என்ற சொல்லை இழிவுப்படுத்தும் சொல்லாக பயன்படுத்துவதாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வருத்தம்

சென்னையில் மிகப்பெரிய பூங்காவை கோயம்பேட்டில் அமைக்க வேண்டும் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

இன்று முதல் தென்மாவட்ட பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

காவல்துறை மீது தவறான குற்றச்சாட்டு – நடிகர் இளவரசுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பாஜகவுட கூட்டணி இல்லை என சொல்லுவோம் – அமைச்சர் ஜெயக்குமார்

இந்தியா:

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும் – மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தகவல்

அரசியல் கோழைகள் இருந்தால் ஜனநாயகம் எப்படி தப்பி பிழைக்கும்? – மல்லிகார்ஜூன கார்கே கேள்வி

ராமர் கோயில் விழாவில் கலந்து கொண்ட இஸ்லாமிய மதகுருவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

ஆழ்ந்த தூக்கம் அவசியம்.. ரீல்ஸ் பார்க்க வேண்டாம் என மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். மக்களை தங்களுக்குள் தாங்களே அடித்துக் கொள்ள தூண்டுவதாக ராகுல் காந்தி விமர்சனம்

சிமி அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

நிதிஷ்குமாரின் முடிவு ஜனநாயகத்திற்கு நல்லதல்ல – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து

குடியரசு தின நிறைவு விழா – முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு

56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

உலகம்:

இஸ்ரேல் உளவு பிரிவினர் என கூறி 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய ஈரான் அரசு

மாலத்தீவு அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டம்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவில் ஒரே நாளில் 165 பேர் உயிரிழப்பு

விளையாட்டு:

இங்கிலாந்து அணிக்கெதிரான 2வது டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக ஜடேஜா, கே.எல்.ராகுல் விலகல் – சர்ஃபராஸ் கான், சௌரப் குமார் அணியில் சேர்ப்பு

இலங்கை டெஸ்ட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு – 4 அறிமுக வீரர்கள் அறிமுகம்

ப்ரோ கபடி லீக் தொடரில் பெங்கால் அணியை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி

ப்ரோ கபடி லீப் பாட்னா பைரேட்ஸ் அணி குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி

9 அணிகள் பங்கேற்கும் வாலிபால் லீக் போட்டி – சென்னையில் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு

Source link