108 திவ்ய தேசங்களில் 63 வது திவ்ய தேசமாக விளங்கும் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில் சிதிலமடைந்து.cஇந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த திருக்கோயில் 25 ஆண்டுகளுக்கு பிறகு சும்மா ரூபாய் 3.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக புறனமைப்பு பணிகள் பழமை மாறாமல் நடைபெற்றது. இந்நிலையில்,cகுடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை, முதல் கால யாக பூஜைகளுடன் துவங்கியcஇவ்விழா, புதன்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாக பூஜையும் அதனைத் தொடர்ந்து, அதிகாலை நான்காம் கால யாக சால பூஜைகள் முடிவுற்ற நிலையில், கலச புறப்பாடு நடைபெற்றது.

காலை 8.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீர் பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்ட போது கோவிந்தா கோவிந்தா என கோஷத்துடன் பரவசமடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஸ்தல சயனப்பெருமாள் பெருமாள் கோயில் புராண வரலாறு

இன்றைய செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் கடற்கரை ஒரு காலத்தில், மிகப்பெரிய காட்டுப்பகுதியாக இருந்துள்ளது. இந்த காட்டுப் பகுதியில் புண்டரீக மகரிஷி பல ஆண்டுகாலம் தவம் புரிந்து வந்துள்ளார். திருமாலை நினைத்து இவர், இந்த காட்டுப் பகுதியில் தவம் புரிந்து வாழ்ந்து வந்துள்ளார். ஒரு நாள் அருகே இருந்த குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர்களை பறித்து, திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலின் திருவடிகளில் சமர்ப்பிக்க நினைத்துள்ளார்.

பூக்களை பறித்து கொண்டு செல்லும் பொழுது குறுக்கே கடல் இருந்துள்ளது. தன் கைகளால் கடல் நீரை இரவு பகலாக இருக்க ஆரம்பித்துள்ளார். கடல் நீரை இறைப்பது அவ்வளவு சுலபமா என்ன ? ஆனாலும் திருமால் மீது நம்பிக்கையில் கடல் நீரை கையால் இறைத்து வந்துள்ளார். பல ஆண்டுகளாக இதையே செய்துள்ளார்.

கடல் நீர் வற்றட்டும்

ஒரு நாள் "பரந்தாமா நான் கொண்ட பக்தி உண்மை என்றால், இந்த கடல் நீர் வற்றட்டும் எனக்கு பாதை கிடைக்கட்டும், அதுவரை இந்த பூவும் வாடாமல் இருக்கட்டும் என திருமாலிடம் வேண்டியுள்ளார். இந்த நிலையில், முனிவர் முன் ஒரு முதியவர் தோன்றியுள்ளார். அந்த முதியவர் மகரிஷியிடம் வம்பு இழுத்துள்ளார். அதன் பிறகு எனக்கு உணவு வேண்டும் என கேட்டுள்ளார். மகரிஷியும் நான் என்றோ ஒரு நாள் இந்த கடல் நீரை வற்றவைத்து பெருமாளை காண்பேன்.

இப்பொழுது உனக்காக உணவு கொண்டு வந்து கொடுத்துவிட்டு மீண்டும் அந்த பணியை தொடர்வேன் என கூறிவிட்டு அதுவரை என்னுடைய மலர்களை நீ கையில் வைத்திரு என அந்த, தாமரை மலர் கூடையை கொடுத்து விட்டு சென்றுள்ளார். முதியோருக்காக உணவு எடுக்கும் சென்ற மகரிஷி உணவு கொண்டு வந்த பொழுது, கொடுத்துச் சென்ற பூக்களையெல்லாம் சூடிக் கொண்டு, கடலிலேயே ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் கோலத்தில் முதியவர் காட்சியளித்தார். மகரிஷிக்கு சயன கோலத்தில் காட்சி அளித்ததால் இத்தல பெருமாள் ‘தலசயனப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார் என புராணங்கள் கூறுகின்றன.

Month: February 2024
"கோவிந்தா கோவிந்தா " முழக்கம்..! ஸ்தல சயன பெருமாள் கும்பாபிஷேகம்..!

BIhar cm nitish kumar praises interim budget as positive | Nitish Kumar: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை கொண்டாடும் நிதிஷ்குமார்

Nitish Kumar: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேர்மறையானது என, பீகார் முதலமைச்ச்ர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இடைக்கால பட்ஜெட்டை பாராட்டிய நிதிஷ்குமார்:
பாஜகவை வீட்டிற்கு அனுப்புவோம் என்ற முழக்கத்துடன், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியவர்களில் நிதிஷ்குமாருக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக கடந்த வாரம், ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். மேலும், பரம எதிரி என கூறிய பாஜக உடனே சேர்ந்து, மீண்டும் ஆட்சி அமைத்து முதலமைச்சரானார். இது தேசிய அரசியலில் பெடும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் தான், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேர்மறையானது என, நிதிஷ்குமார் பாராட்டியுள்ளார்.
செயல்திறன் அதிகரிக்கும் – நிதிஷ் குமார்:
இதுதொடர்பாக பேசிய நிதிஷ் குமார், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் நேர்மறையானது மற்றும் வரவேற்பதற்கு தகுதியானது. மூன்று புதிய பொருளாதார வழித்தடங்கள் அமைக்கும் முடிவு பாராட்டுதலுக்குரியது. இவை தளவாட செயல்திறனை கொண்டு வருவதோஉட், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த உதவும்.
நடுத்தர வகுப்பினருக்காக சிறப்பு வீட்டு வசதி திட்டம் கொண்டு வரப்படும் அரசின் முடிவு வரவேற்கத்தக்க நடவடிக்கை. இதன் மூலம், வாடகை வீடுகள் மற்றும் குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கு பலன்கள் கிடைக்கும். மேலும், தொழில் வளர்ச்சி, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வரிப் பிரிவில் ஓராண்டு விலக்கு அளிக்கப்படுவது தொழில் வளர்ச்சிப் பணிகளுக்கு உத்வேகம் அளிக்கும் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். MNREGA பட்ஜெட் அதிகரிப்பு கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். பட்ஜெட்டில் உயர்கல்விக்கான கடன் தொகை உயர்த்தப்பட்டு, இளைஞர்களுக்கு நன்மை பயக்கும்” என நிதிஷ் குமார் பாராட்டியுள்ளார். இதனிடையே, பீகார் மாநிலத்தின் பட்ஜெட் கூடத்தொடர், பிப்ரவரி 10ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெலிகிராம் யூஸ் பண்றீங்களா? ஜாக்கிரதை – குறுஞ்செய்தியை நம்பிய பட்டதாரி வாலிபருக்கு நேர்ந்த கொடுமை
எதிர்க்கட்சிகள் விமர்சனம்:
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உள்ளிட்ட எந்தவித சலுகைகளும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திமுக விமர்சித்துள்ளது. இதேபோன்று, பல்வேறு எதிர்க்கட்சிகளும் பட்ஜெட்டில் விரிவான அறிவிப்புகள் எதுவுமில்லை என சாடி வருகின்றன. இந்நிலையில் தான், கடந்த வாரம் வரை பாஜகவை வீழ்த்துவோம் என பேசி வந்த நிதிஷ்குமார், தற்போது பட்ஜெட்டை வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் காண
மேட்டூர் அணையின் நீர் வரத்து 197 கன அடியில் இருந்து 199 கன அடியாக அதிகரிப்பு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 255 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 197 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 199 கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 70.49 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 33.12 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.08 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.21 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 647 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1,002 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.07 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.23 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 180 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.
IND Vs ENG 2ND Test India Up Against England In Second Test At Visakhapatnam Check The Details

IND Vs ENG 2ND Test: இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்குகிறது.
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், கையில் இருந்த வெற்றி வாய்ப்பை இந்திய அணி நழுவவிட்டு ரசிகர்களை ஏமாற்றியது. இதன் மூலம், இங்கிலாந்து அணி தற்போது இந்த தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இன்று தொடங்குகிறது.
இந்தியா – இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி:
இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டியில் பெற்ற வெற்றியின் உத்வேகத்துடன் இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. அதேநேரம், இரண்டாவது போட்டியில் வென்று தொடரில் வெற்றி கணக்கை தொடங்க இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. இதனால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த போட்டியின் நேரலைய ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
இந்திய அணியின் பேட்டிங் பிரச்னை:
பேட்டிங்கில் சொதப்பியதே முதல் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஏற்கனவே நட்சத்திர வீரர் கோலி முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகிய நிலையில், காயம் காரணமாக இன்றைய போட்டியில் ஜடேஜா மற்றும் கே.எல். ராகுல் விளையாடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதனை கவனத்தில் கொண்டு, கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஷ் அய்யர் ஆக்யோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
இங்கிலாந்து அணி நிலவரம்:
இந்திய அணியின் சுழற்பந்து வியூகத்தை தங்களால் வீழ்த்த முடியும் என்பதை, இங்கிலாந்து வீரர் ஒல்லி போப் முதல் போட்டியில் நிரூபித்து விட்டார். இதனால், இரண்டாவது போட்டியிலும் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன் இன்றய போட்டியில் களமிறங்குகிறார். அதோடு, சோயப் பஷிர் என்ற புதிய சுழற்பந்துவீச்சாளர் இந்த போட்டியின் மூலம் அறிமுகமாக இருக்கிறார்.
விசாகப்பட்டினம் மைதானம் எப்படி?
விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானம், எப்போதுமே பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். ஆனால், இந்த ஆடுகளம் கடந்த ஆட்டங்களில் நேரம் செல்ல செல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவிகரமாக இருந்துள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது. போட்டியில் வானிலை எந்த பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளேயிங் லெவன்:
இந்தியா உத்தேச அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ஷ்ரேயாஸ் அய்யர், ரஜத் படிதார், அக்சர் படேல், கேஎஸ் பாரத் , ஆர் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
இங்கிலாந்து: சாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ், ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, ஷோயப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
The list of movies actor ajithkumar dropped out but became a block buster hit

தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேடி போகாமல் தனக்கு எது பிடிக்குமோ அதை தான் செய்வேன் என மிகவும் தைரியமாக செயல்பட்டு வருபவர் நடிகர் அஜித். பைக் ரேஸிங் கனவை நோக்கிய அவரது பயணத்தில் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் அஜித்துக்கு கிடைத்த வாய்ப்புகளும், அவர் தவறவிட்ட சில படங்களும் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம் :
நியூ :
2001ம் ஆண்டில் எஸ்.ஜே. சூர்யா ‘நியூ’ படத்தின் அறிவிப்பு குறித்து வெளியிட்டதும் அதில் ‘வாலி’ மூலம் பிரபலமான அஜித் – ஜோதிகா தான் ஜோடி சேர்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த படம் ட்ராப் செய்யப்பட்டதால் அதன் நியூ வர்ஷன் எஸ்.ஜே. சூர்யா – சிம்ரன் நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியானது.
மிரட்டல் :
தீனா படத்திற்கு பிறகு 2004ம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் – அஜித் கூட்டணியில் இரண்டாவது முறையாக கூட்டணி சேர இருந்த திரைப்படம் மிரட்டல். ஆனால் நடிகர் அஜித் வேறு சில படங்களில் நடித்து வந்ததால் மொட்டை போட விரும்பாததால் கடைசி நேரத்தில் அஜித் பின்வாங்கினார். அவருக்கு பதிலாக சூர்யா நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற அப்படம் தான் ‘கஜினி’.
நான் கடவுள் :
2003ம் ஆண்டு இயக்குநர் பாலா அஜித்தை வைத்து இயக்க இருந்த திரைப்படம் ‘நான் கடவுள்’. இப்படத்திற்காக அஜித் நீளமான முடியை கூட வளர்த்தார். ஆனால் பல முறை இப்படம் கிடப்பில் போடப்பட்டதால் பொறுமை இழந்த அஜித் அப்படத்தில் இருந்து பின்வாங்கினார். மீண்டும் பாலா அந்த படத்தை நடிகர் ஆர்யாவை வைத்து 2007ம் ஆண்டு இயக்கி 2009ம் ஆண்டு திரைப்படம் வெளியானது.
நந்தா :
அஜித்தும் இயக்குநர் பாலாவும் முதல் முறையாக கூட்டணி சேர இருந்த திரைப்படம் நந்தா. ஆனால் பாலா ஸ்கிரிப்டை முழுமையாக தயார் செய்யாததால் அதை நிராகரித்தார் அஜித். பின்னர் அப்படம் சூர்யாவின் வசம் சென்றது.
மஹா :
அஜித் முதல் முறையாக போலீஸ் கேரக்டரில் நடிக்க இருந்த திரைப்படம் மஹா. நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தின் ஸ்டண்ட் காட்சியின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
ஏறுமுகம் :
இயக்குநர் சரண் – அஜித் காம்போவில் 3வது முறையை உருவாக இருந்த இப்படத்தின் ஸ்க்ரிப்ட் அஜித்துக்கு விருப்பம் இல்லாதால் அவர் நிராகரித்தார். அந்த ஸ்க்ரிப்டை சிறு மாற்றங்கள் செய்து விக்ரமை ஹீரோவாக வைத்து ‘ஜெமினி’ என்ற பெயரில் வெளியிட்டார் சரண்.
நேருக்கு நேர் :
அஜித் – விஜய் கூட்டணியில் ‘ராஜாவின் பார்வையிலே’ படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த படம் ‘நேருக்கு நேர்’. இப்படத்தின் படப்பிடிப்பில் 15 நாட்கள் கலந்து கொண்ட அஜித் பின்னர் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சில பிரச்சினையால் அப்படத்தில் இருந்து விலகினார். பின்னர் அவருக்கு பதிலாக சூர்யாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
காக்க காக்க :
காக்க காக்க படத்தில் நடிக்க முதலில் கௌதம் மேனன் முதலில் மாதவன், விக்ரம் மற்றும் அஜித்தை தான் அணுகியுள்ளார். ஆனால் அவர்கள் மறுத்ததால் அப்படத்தில் நடிகர் சூர்யா களம் இறங்கி கலக்கினார்.மேலும் காண
7 am headlines today 2024 2nd february headlines news tamilnadu india world interim budget

தமிழ்நாடு:
ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் – திமுக எம்.பிக்கள் டெல்லியில் போராட்டம் நடத்தவும் உத்தரவு
தமிழ்நாடு சட்டப்பேரவ கூட்டத்தொடர் வரும் 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது – 19ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
பட்ஜெட்டில் ஒன்றிய அரசு மீண்டும் அல்வா கிண்டியுள்ளது – அமைச்சர் உதயநிதி விமர்சனம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விவகாரத்தில் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசை பாராட்டிய சென்னை உயர்நீதிமன்றம்
சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்இந்தியா:
பிரதமர் மோடியின் 2.0 அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் – தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிப்பு
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந் சோரனுக்கு ஒருநாள் நீதிமன்ற காவல் – கைது நடவடிக்கைக்கு எதிரான வழக்கு இன்று விசாரண
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த சம்பாய் சோரனை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்
ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்களின்றி சென்னைக்கு கொண்டு செல்ல முயன்ற ரூ.7.23 கோடி பறிமுதல் – 15 பேரை பிடித்து காவல்துறை விசாரணைஉலகம்:
ஜப்பானில் இரண்டு பயணிகள் விமானம் நேருக்கு நேர் மோதி விபத்து
மெக்ச்கோவில் பேருந்து – லாரி மோதி விபத்து – 19 பேர் பலி
ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களிம் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் சந்திப்பு
விளையாட்டு:
இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது – முதல் போட்டி தோல்விக்கு பழிதீர்க்குமா இந்தியா?
Published at : 02 Feb 2024 07:04 AM (IST)
மேலும் காண
Rajkiran foster daughter Zeenat Priya has shared a emotional video about her separation from actor Munish Raja

தமிழ் சினிமாவின் மிகவும் கம்பீரமான நடிகர் என கொண்டாடப்படும் நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா, கடந்த 2022 ஆண்டு சின்னத்திரை நடிகர் முனிஷ் ராஜாவை குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. தற்போது உணர்ச்சிவசப்பட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ராஜ்கிரண் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா.
பேஸ்புக் மூலம் ஜீனத் பிரியா மற்றும் முனீஷ் ராஜா இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. முனீஷ் ராஜாவின் குடும்பத்தினர் அவர்களின் காதலுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால், ராஜ்கிரண் குடும்பம் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க மறுத்த போதிலும் அவர்களை எதிர்த்து முனீஷ் ராஜாவை திருமணம் செய்து கொண்டார் ஜீனத் பிரியா. இதனால் வீட்டை விட்டு வெளியேறினார் ஜீனத் பிரியா.
மேலும் திருமணம் செய்து கொண்ட பிறகு பிரச்சினையை மேலும் அதிகரிக்கும் வகையில் தன்னுடைய வளர்ப்பு தந்தை ராஜ்கிரண் மீது மோசமான குற்றச்சாட்டை முன்வைத்தார் ஜீனத் பிரியா. இது அவர்களுக்கு இடையே இருந்த உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது.
அதற்கு பிறகு நடிகர் ராஜ்கிரண் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் இனி ஜீனத் பிரியாவுக்கும் அவரின் குடும்பத்துக்கும் எந்த ஒரு உறவும் இல்லை என்றும் அவள் தன்னுடைய சொந்த மகள் அல்ல வளர்ப்பு மகள் என்றும் தெரிவித்து இருந்தார். மேலும் முனீஷ் ராஜாவுக்கு, ஜீனத் பிரியாவை திருமணம் செய்து கொண்டதற்கு பின்னால் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவும், அவரின் நற்பெயரை தன்னுடைய தனிப்பட்ட ஆதாயத்திற்காகவும், பண பரிமாற்றத்திற்காகவும் பயன்படுத்தக்கூடாது என்றும் குற்றம்சாட்டி இருந்தார். மாறி மாறி இது போன்ற சர்ச்சைகள் ஏற்படவே முனீஷ் ராஜா – ஜீனத் பிரியாவின் திருமண வாழ்க்கையை சுற்றி பிரச்சினை எழுந்தது.
தற்போது ஜீனத் பிரியா மிகவும் எமோஷனலான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் முனீஷ் ராஜாவுடனான தன்னுடைய திருமண பந்தத்தை முறித்து கொண்டதை சமூக ஊடகங்களுக்கு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.
“வணக்கம்… நான் பிரியா. ராஜ்கிரண் சார் வளர்ப்பு மகள். நான் 2022ம் ஆண்டு சீரியல் நடிகர் முனீஷ் ராஜாவை திருமணம் செய்து கொண்டேன். அது உங்கள் அனைவருக்கும் மீடியா மூலம் தெரிந்து இருக்கும். இப்போது நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். பிரிந்து சில மாதங்கள் ஆகிவிட்டது. எங்க கல்யாணம் சட்டபூர்வமானது கிடையாது. இதை நான் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன்.
அது மட்டும் இல்ல இந்த கல்யாணம் பண்ணிகிட்டதால என்னோட டாடியை நான் ரொம்ப காயப்படுத்திவிட்டேன். ஒரு தடவை இரண்டு தடவை இல்ல, நிறைய தடவை நான் அவரை காயப்படுத்திட்டேன். நான் இவ்வளவு பண்ணியும் எனக்கு ஒரு பிரச்சினைன்னு வந்த அப்போ என்னை கைவிடாம சத்தியமா நின்னு காப்பாத்தினார். இது நான் எதிர்பார்க்காத கருணை. எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் பத்தாது. என்னை மன்னிச்சுருங்க டாடி. என்னை மன்னிச்சுருங்க…” என பேசி வீடியோவை வெளியிட்டுள்ளார் ராஜ்கிரண் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா.
மேலும் காண
petrol and diesel price chennai on February 2nd 2024 know full details

Petrol Diesel Price Today, February 2: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 2ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 622வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்” என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, “நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்மேலும் காண
England Announce XI For 2nd Test Vs India James Anderson Returns Debut For Shoaib Bashir | IND Vs ENG: நாளை 2வது டெஸ்ட்! இங்கிலாந்து அணிக்காக மீண்டும் களமிறங்கும் ஆண்டர்சன்

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மீண்டும் திரும்பிய ஜேம்ஸ் ஆண்டர்சன்:
இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இங்கிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது. கடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் இந்த போட்டியில் கூடுதல் கவனத்துடன் ஆடும்.
இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த போட்டியில் மீண்டும் களமிறங்க உள்ளார்.
We have named our XI for the second Test in Vizag! 🏏🇮🇳 #INDvENG 🏴 | #EnglandCricket
— England Cricket (@englandcricket) February 1, 2024
இங்கிலாந்து அணியின் விவரம் பின்வருமாறு:
ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பார்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் போக்ஸ், ரெஹன் அகமது, டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
அறிமுக வீரராக சோயிப் பஷீர்:
இங்கிலாந்து அணிக்காக கடந்த டெஸ்ட் போட்டியில் சுழலில் அசத்திய டாம் ஹார்ட்லி அறிமுக வீரராக களமிறங்கினார். நாளை தொடங்க உள்ள டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக சோயிப் பஷீர் அறிமுக வீரராக களமிறங்க உள்ளார். 20 வயதே ஆன சோயிப் பஷீர் வலது கை சுழற்பந்துவீச்சு மற்றும் பேட்ஸ்மேன் ஆவார். கடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக களமிறங்கி அசத்திய டாம் ஹார்ட்லியை போல சோயிப் பஷீரும் இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவாரா? என்பது இந்த போட்டியில் தெரிய வரும்.
இந்திய அணி கடந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடியும், இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்சில் விக்கெட்டை கைப்பற்ற தவறியதால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. மேலும், இந்திய அணியில் விராட் கோலி இல்லாதது பின்னடைவாக உள்ளது. விராட் கோலி நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டியிலும் ஆடமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் 2வது இன்னிங்சில் சிறப்பாக செயல்படாதது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால், இந்த போட்டியில் இந்திய அணி அந்த தவறை சரி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: IPL 2024: ஆர்சிபி அணியில் இணையும் ஷமர் ஜோசப்..? டாம் கர்ரனுக்கு பதிலாக ஐபிஎல்லில் அறிமுகமாகும் வாய்ப்பு!
மேலும் படிக்க: ICC Test Rankings: ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதல் இடத்தை அலங்கரிக்கும் அஸ்வின்! ஆல்-ரவுண்டர் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் ஜடேஜா!RJ Balaji Revealed LKG2 and Mookuthi Amman part 2 script Idea and join to work with ishari ganesh

RJ Balaji: வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியானத் திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இதன் வெற்றி விழா இன்று நடைபெற்றது. அதில், படத்தின் இசைமைப்பாளர் ஜாவித், பாடலாசிரியர் உமா தேவி, நடிகர்கள் இமான் அண்ணாச்சி, சின்னி ஜெயந்த், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் கோகுல் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “சிங்கப்பூர் சலூன் படம் வெற்றி அடைந்துள்ளதில் மகிழ்ச்சி. இரண்டாம் பாதியில் அரவிந்த் சுவாமி சார் கதாபாத்திரம் பார்த்துவிட்டு இவரைப் போல ஒருவர் நம் வாழ்வில் வந்துவிட மாட்டார்களா? என நிறையப் பேர் சொன்னார்கள். அப்படி சிறப்பான நடிப்பைக் கொடுத்த அவருக்கு நன்றி. படம் வெளியாகி முதல் வாரத்தில் பார்வையாளர்களுக்குப் பிடித்து, இரண்டாவது வாரத்தில் படத்திற்கு புஷ் கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த சக்சஸ் மீட் நடத்துவதற்கான காரணம். அப்படி, எங்கள் படமும் பார்வையாளர்களுக்குப் பிடித்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான ஒன்று. ’சவுத் இந்தியன் அமீர்கான்’ என என்னை சின்னி ஜெயந்த் சார் சொன்னதும் எனக்கு பயம் வந்துவிட்டது. அவர் பெரிய லெஜெண்ட். அவருடன் என்னை ஒப்பிடவே முடியாது. அந்தப் பட்டம் எனக்கு வேண்டாம். படத்திற்கு ஆரம்பத்திலும் முடிவிலும் நல்லதாக எழுதுங்கள் என இமான் அண்ணாச்சி சொன்னதில் எனக்கு உடன்பாடு இல்லை. மீடியாவுக்கு அவர்கள் கருத்தை சொல்ல எல்லா சுதந்திரமும் உண்டு.
எல்.கே.ஜி., மூக்குத்தி அம்மன் பார்ட் 2:
அதேபோல, மக்களுக்காக நாங்கள் எடுத்த படம் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய சிறந்த நடிப்பைக் வெளிக்கொண்டு வந்த இயக்குநர் கோகுலுக்கு நன்றி. ஐசரி கணேஷ் சார் எனக்கு அப்பா போன்ற நெருங்கிய உறவும் அன்பும் கொண்டவர். ’எல்.கே.ஜி2’, ‘மூக்குத்தி அம்மன்2’ போன்ற ஐடியாவும் உண்டு. அதையும் ஐசரி சாரிடம்தான் செய்வேன். இரத்தம், கத்தி போன்ற படங்களுக்கு மத்தியில் நிறைய பேருக்கு சிறு நம்பிக்கைத் தரும் விதமாக ‘சிங்கப்பூர் சலூன்’ வந்துள்ளது. அது இரண்டாம் வாரத்திலும் இன்னும் சிறப்பாக ஓட வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என பேசியுள்ளார்.
படத்தின் இயக்குநர் கோகுல் பேசும்போது, “’சிங்கப்பூர் சலூன்’ படம் மூலம் என் கனவு இன்னும் அருகில் வந்துள்ளது. இந்தப் படத்திற்காக சிகை அலங்காரக் கலைஞர்கள் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது அதில் ஒருவர், ‘என் கத்தி செய்யாததை இந்த கதை செய்திருக்கிறது’ என்று சொன்னார். என் படத்தின் நோக்கம் நிறைவேறியது என்று மகிழ்ந்த தருணம் அது. அவர்களை ஒரு சாதியாக கட்டமைத்து விட்டோம். நான் சாதிக்கு அப்பாற்பட்டவன். அதனால்தான் படத்தின் ஆரம்பத்தில் ஒரு இஸ்லாமிய பார்பரை காட்டியிருப்பேன். இது குலத்தொழில் கிடையாது. இந்த விஷயம் உங்கள் அனைவருக்கும் போய் சேர்ந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. இதற்கு ஒத்துழைத்த ஹீரோ பாலாஜி, தயாரிப்பாளர் ஐசரி சார், படக்குழுவினருக்கு நன்றி. நான் இயக்கியப் படங்களிலேயே இதுதான் எனக்கு சிறந்தப் படம்” என பேசியுள்ளார்.
மேலும் காண
Blue Star Shanthanu Speech – ”அப்பா எனக்காக அழுதாரு15 வருஷம் ஆச்சு..” சாந்தனு EMOTIONAL SPEECH

”அப்பா எனக்காக அழுதாரு15 வருஷம் ஆச்சு..” சாந்தனு EMOTIONAL SPEECH
Blue Star Ashok selvan – கணவர் பேச்சை கேட்டுகண் கலங்கிய கீர்த்தி அசோக் செல்வன் EMOTIONAL SPEECH

கணவர் பேச்சை கேட்டுகண் கலங்கிய கீர்த்தி அசோக் செல்வன் EMOTIONAL SPEECH
Actor Nani Photos : நேச்சுரல் ஸ்டார் நானியின் கூல் புகைப்படங்கள்!

Actor Nani Photos : நேச்சுரல் ஸ்டார் நானியின் கூல் புகைப்படங்கள்!Siddhi Idnani Photos : பீச்சில் ஜாலியாக உலாவும் நடிகை சித்தி இத்னானியின் க்யூட் புகைப்படங்கள்!

Siddhi Idnani Photos : பீச்சில் ஜாலியாக உலாவும் நடிகை சித்தி இத்னானியின் க்யூட் புகைப்படங்கள்!Rajkiran Daughter : ”கணவரை பிரிஞ்சி வந்துட்டேன்என்ன மன்னிச்சிடுங்க பா..”கலங்கிய ராஜ்கிரண் மகள்

”கணவரை பிரிஞ்சி வந்துட்டேன்என்ன மன்னிச்சிடுங்க பா..”கலங்கிய ராஜ்கிரண் மகள்