Month: February 2024

  • Tamilnadu CM M.K. Stalin Wrote Letter From Spain To Tamil People And DMK | CM M.K. Stalin: இருப்பது ஸ்பெய்னில் என்றாலும் நினைப்பெல்லாம் தமிழ்நாடுதான்
    Tamilnadu CM M.K. Stalin Wrote Letter From Spain To Tamil People And DMK | CM M.K. Stalin: இருப்பது ஸ்பெய்னில் என்றாலும் நினைப்பெல்லாம் தமிழ்நாடுதான்


    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 27ஆம் தேதி அரசுமுறை பயணமாக ஸ்பெயினுக்கு புறப்பட்டார். அரசுமுறை பயணத்தில் ஈடுபட்டுள்ள அவர், தமிழ்நாடு மக்களுக்கும் திமுகவினருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், 
    ”அயல்நாட்டில் இருந்தாலும் நினைவு முழுவதும் அன்பு உடன்பிறப்புகளாகிய நீங்களே நிறைந்திருக்கிறீர்கள். இந்த மடலை நான் எழுதும்போது, உடன்பிறப்புகளாம் உங்ளுக்கு இப்போது நேரம் மதியம் 12 மணி. உங்களில் ஒருவனான எனக்கு காலை 7.30 மணி. ஆம்.. இந்தியாவிலிருந்து நாலரை மணி நேர வேறுபாடு கொண்ட ஐரோப்பாவின் ஸ்பெய்ன் நாட்டில் இருக்கிறேன், தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக!
    ஜனவரி 27-ஆம் நாள் சென்னையிலிருந்து ஸ்பெய்ன் நாட்டிற்கு புறப்படும் நிலையில், ஊடகத்தினரிடம் பேசும்போது, “தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைப் பெருக்கி, 1 டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார இலக்கை அடைவதற்கு கடந்த ஆண்டு சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்றேன். இந்த ஆண்டு ஸ்பெய்ன் நாட்டிற்குச் செல்கிறேன்” என்று தெரிவித்தேன். அதுமட்டுமல்ல, சிங்கப்பூர் – ஜப்பான் பயணத்தின் விளைவாக கிடைத்துள்ள முதலீடுகள், தொடங்கவுள்ள தொழில்கள், கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் இவற்றையும், ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டின் வெற்றியையும் சுட்டிக்காட்டினேன்.
    இதோ, இங்கே ஸ்பெய்ன் நாட்டிலும் தமிழ்நாட்டிற்கானத் தொழில் முதலீடுகளை ஈர்க்கின்ற வகையிலான சந்திப்புகளும், அதன் தொடர்ச்சியாகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பயணத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறுகின்றன. இருப்பது ஸ்பெய்னில் என்றாலும், நினைப்பெல்லாம் தமிழ்நாட்டில்தான்.
    நம் தமிழ்நாட்டைப் போலவே மொழியையும் பண்பாட்டையும் இரு கண்களாகக் கருதி, உயிரெனப் போற்றக்கூடியவர்களாக ஸ்பெய்ன் நாட்டு மக்கள் இருக்கிறார்கள். பாரம்பரியப் பெருமை மிக்க ஸ்பெய்ன் நாட்டுக் கட்டடங்கள், தமிழ்நாட்டின் புகழ்மிக்க கலைப் படைப்புகளை நெஞ்சில் நிழலாடச் செய்கின்றன. நம்முடைய தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளமாகத் திகழும் ஏறுதழுவுதல் போல ஸ்பெய்ன் நாட்டிலும் எருது ஓடும் போட்டி உண்டு. நம் உயிருக்கு நேரான தமிழ்மொழி போல, அந்நாட்டு மக்களும் தங்களுடைய தாய்மொழியான ஸ்பானிஷ் மொழி மீது மிகுந்த பற்று கொண்டிருக்கிறார்கள். உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளில் இரண்டாவது இடத்தை ஸ்பானிஷ் பெற்றிருக்கிறது. ஸ்பெய்னில் எல்லா இடங்களிலும் ஸ்பானிஷ் மொழியே முதன்மை பெற்றுள்ளது. ஜப்பான் நாட்டிற்குச் சென்றபோதும் அங்கே அவர்களின் தாய்மொழியே முதன்மை பெற்றிருப்பதைக் கண்டேன். ஆதிக்க மொழிகளுக்கு இடம் தராமல், உலகத் தொடர்புக்கேற்ற அளவில் ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் நிலையை இருநாடுகளிலும் கண்டபோது, நம் மாநிலத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன் – நம் உயிருக்கும் மேலான இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய பேரறிஞர் அண்ணாவின் தொலைநோக்குப் பார்வையிலான இருமொழிக் கொள்கை நினைவுக்கு வந்தது. அந்த அண்ணனுக்கு பிப்ரவரி 3 அன்று நினைவு நாள்.
    வங்கக் கடலோரம் தன் கழகத் தம்பியாம் கலைஞருடன் நிரந்தரத் துயில் கொள்ளும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு நாளன்று அமைதிப் பேரணி நடத்தி, மலர் தூவி மரியாதை செலுத்துவது கழகத்தின் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலான வழக்கமாக உள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி வைத்த அந்த நடைமுறை வெறும் சம்பிரதாயச் சடங்கல்ல. “எங்கள் அண்ணனே.. நீ தொடங்கிய இயக்கம் எந்த இலட்சியத்திற்காக உருவானதோ, அந்த இலக்கை அடையும் வகையில் எங்கள் வெற்றிப் பயணம் தொடர்கிறது” என்று மனதில் சூளுரை ஏற்று, அதற்கேற்ற வகையில் இயக்கத்தை வழிநடத்திடும் வலிமையைப் பெறுவதற்கான வாய்ப்பு.
    நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் தலைமையில், இனமானப் பேராசிரியர் முன்னிலையில் அண்ணா சதுக்கம் நோக்கி எத்தனையோ அமைதிப் பேரணிகளில் நடந்து சென்றது என் நினைவுக்கு வருகிறது. இந்த முறை, கழக உடன்பிறப்புகளாம் உங்களுடன் வருவதற்கான சூழல் அமையவில்லை. எனினும், எந்த நாட்டைச் சுற்றினாலும் தென்னாட்டுக் காந்தி என்று போற்றப்பட்ட பேரறிஞர் அண்ணா நம்மோடுதான் இருப்பார்.
    உலக நாடுகளின் வரலாற்றை கழகப் பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் தன் தம்பியருக்கு எடுத்துரைத்து அரசியல் தெளிவு தந்த அறிவுலக மேதை அவர். கழகத்தின் பொதுக்கூட்டங்களை மாலை நேரக் கல்லூரிகளாக்கி, உலக வரலாறுகள் பற்றிய வகுப்பெடுத்தவர்கள் நம் அண்ணாவும் அவர்தம் அன்புத் தம்பியரும்.
    அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்பதே  முத்தமிழறிஞர் கலைஞர் வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களில் முதல் முழக்கம். அதனை முன்னெடுத்து, அயாராது உழைத்து, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கான வெற்றி வியூகத்தை வகுக்க வேண்டிய பொறுப்பு நிறைந்த இடத்தில் இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
    பாசிச பாஜக ஆட்சியின் சர்வாதிகார, ஜனநாயக விரோத போக்கிற்கு முடிவுகட்ட வேண்டிய உறுதியுடன் இருக்கிறோம். மக்கள் தாங்கள் விரும்பிய மொழியில் பேசுவதை, விரும்பிய தொழிலைச் செய்வதை, விரும்பிய உடையை உடுத்துவதை, விரும்பிய உணவை உண்பதை, விரும்பிய அரசைத் தேர்ந்தெடுப்பதை உறுதி செய்வதற்கும், இவற்றுக்கு அடிப்படையான மாநில உரிமைகளை கட்டிக்காப்பதற்கும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து, தேர்தல் களப் பணிகளை முன்கூட்டியே தொடங்கி மிகுந்த உற்சாகத்தோடு அதனை முன்னெடுத்துச் செல்கிறது கழகம்.
    நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த 19-ஆம் தேதி, கூட்டணிக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழு, நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு என மூன்று குழுக்கள் அறிவிக்கப்பட்டு அந்தக் குழுக்கள் தங்கள் பணிகளை உடனடியாகத் தொடங்கிவிட்டன. ஜனவரி 21-ஆம் நாள் சேலத்தில் எழுச்சிமிகு உணர்ச்சி மாநாடாக நடைபெற்ற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடும் மாநில உரிமை மீட்பு முழுக்கத்தை முன்வைத்து வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. 
    தோழமைக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கழகப் பொருளார் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் காங்கிரஸ் பேரியக்கத்துடன் முதல் சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நிறைவு செய்து, மற்ற தோழமைக் கட்சியினருடன் ஆலோசனையில் உள்ளனர். தோழமை உணர்வை மதித்தும், நாட்டின் நிலைமையை உணர்ந்தும் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவது குறித்த செய்திகள் எனக்கு எட்டியபடி உள்ளன.
    சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம் என்பதுதான் கழகத்தின் தேர்தல் வாக்குறுதி. அக்கவுண்ட்டில் ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்றோ, ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்றோ, விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்காக்குவோம் என்றோ வாக்குறுதி அளித்துவிட்டு, எல்லாமே ஜும்லா என்று ஏமாற்றுகின்ற பா.ஜ.க போலவோ அதன் கள்ளக்கூட்டணியான அ.தி.முக. போல தி.மு.க.வின் நாடாளுமனறத் தேர்தல் வாக்குறுதிகள் இருக்காது என்பதால், தங்கை கனிமொழி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் நேரில் சென்று பலதரப்பு மக்களையும் அமைப்புகளையும் சந்தித்து தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்போது, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற பொறுப்பில் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை  நேரிலும், கடிதத்திலும், மின்னஞ்சலிலும், QR Code வாயிலாகவும் வழங்கி வருகிறார்கள்.
    நாடாளுமன்ற தேர்தலுக்கான கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் கழகத்தின் முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலான நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,  அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அடங்கிய இந்தக் குழுவினர், அண்ணா அறிவாலயத்தில், நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கழகத்தின் அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்துத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
    தினமும் 4 தொகுதிகள் வீதம் இதுவரை 22 நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் ஒவ்வொன்றும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டமாக மட்டுமில்லாமல் கழகத்தினர் சுட்டிக்காட்டும் பிரச்சனைகளுக்கும், அவர்களின் கோரிக்கைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு காணும் கூட்டமாகவும் இருப்பது கழக நிர்வாகிகளை மிகுந்த உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது என்பதை அறிகிறேன்.
    இந்தியாவின் குடியரசு நாளான ஜனவரி 26 அன்று, திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அன்புச் சகோதரர் தொல்.திருமாவளவன் எம்.பி. முன்னெடுத்து நடத்திய “வெல்லும் சனநாயகம்” மாநாட்டில் நான் குறிப்பிட்டதுபோல, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக பூஜ்ஜியம்தான். அதிமுகவை வைத்து பாஜக எத்தகைய நாடகத்தை நடத்தினாலும் கழக கூட்டணியை வீழ்த்த முடியாது என்பது உறுதி. பா.ஜ.க.வுக்கு எதிரான வெற்றிக் கூட்டணி எப்படி அமையவேண்டும் என்பதை கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைத்த கூட்டணி வாயிலாக நிரூபித்துக் காட்டின திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தோழமைக் கட்சிகளும். அதனைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணி உறுதியாகக் களம் கண்டு, வெற்றி பெற்றதன் விளைவாக திராவிட மாடல் அரசு அமைந்து, இந்தியாவுக்கே முன்னுதாரணமாக ஆட்சியை வழங்கி வருகிறது. இதுதானே அண்ணாவின் இலட்சியம். இதுதானே தலைவர் கலைஞரின் செயல்திட்டம்.
    மக்களிடம் செல் என்றார் பேரறிஞர் அண்ணா. உங்களில் ஒருவனான நான் அதை வழிமொழிவதுடன், ‘மக்களிடம் செல். மக்களிடம் சொல்’ என்று ஒவ்வொரு உடன்பிறப்பையும் கேட்டுக்கொள்கிறேன். இரண்டரை ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சொல்லுங்கள். ஒவ்வொரு குடும்பமும் கழக ஆட்சியின் சாதனைகளால் பெற்றிருக்கும் பயன்களை உணர்த்துங்கள். ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிப்பதை நினைவுபடுத்துங்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிடவும் கூடுதலான உழைப்பை வழங்கி, கூடுதலான வாக்கு வித்தியாசத்தில், கடந்த முறை மிச்சம் வைத்த ஒற்றைத் தொகுதியையும் சேர்த்து நாற்பதுக்கு நாற்பது என்ற முழு வெற்றியை உறுதி செய்யுங்கள். அந்த இலக்கை  திமுக நிச்சயம் அடைந்துவிடும் என்கிற நம்பிக்கை அண்ணா அறிவாலயத்தில் கழக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுடனான சந்திப்பின்போது நிர்வாகிகள் காட்டும் உற்சாகத்திலேயே நன்கு புலப்படுகிறது. அந்த உற்சாகம், தேர்தல் களப்பணிகளிலும் குன்றாமல் குறையாமல் வெளிப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
    நம்மைத் திசைதிருப்ப அவதூறுகளைப் பரப்புவதில் பா.ஜ.க.வும் அ.தி.மு.கவும் சளைத்தவையல்ல. பொய் வழக்குகளின் பேரில் தங்களை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள் மீது மிரட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒன்றே ஒன்றிய பா.ஜ.க அரசின் பத்தாண்டுகால சாதனையாக இருப்பதால் தி.மு.க.வை மிரட்டிப் பார்க்கும் வகையிலான ஊடகப் பரபரப்புக்கான செயல்பாடுகள் இருக்கும். எதற்கும் அஞ்சாத இயக்கம்தான் தி.மு.க என்பதைக் களத்தில் ஆற்றும் பணிகள் மூலமாக அவர்களுக்குப் புரிய வைப்போம்.
    நாடாளுமன்றத்தில் இடைக்காலப் பட்ஜெட்டை பா.ஜ.க. அரசு தாக்கல் செய்திருக்கிறது. அதிலும்கூட தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளது. முழுமையான பட்ஜெட்டை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்தியா கூட்டணி அரசு தாக்கல் செய்யும். மாநிலங்களின் நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படும். அதற்கேற்ற வகையில் வெற்றி பெறுவோம் என பேரறிஞர் பெருந்தகை அண்ணா நினைவு நாளில் சூளுரைப்போம்.
    அமைதிப் பேரணியில் அன்பு உடன்பிறப்புகள் அலைஅலையாய் வங்கக்கடல் நோக்கிச் செல்கின்ற நேரத்தில், இங்கே அண்ணா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி உங்களில் ஒருவனான நானும் சூளுரை ஏற்கிறேன். அண்ணா வழியில் அயராது உழைப்போம்!  ஆதிக்க ஒன்றிய அரசை அகற்றியே தீருவோம்!” என குறிப்பிட்டுள்ளார். 

    Source link

  • silambarasan 48 directed by desingh periyasamy produced by rajkamal films
    silambarasan 48 directed by desingh periyasamy produced by rajkamal films


    ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் படத்திற்கு  என்று டைட்டில் வைக்கப் பட்டுள்ளது.
    எஸ்.டி ஆர் 48
    மாநாடு படத்தில் இருந்து தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளார்  நடிகர் சிலம்பரசன். தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படமும் பெரிய வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது சிலம்பரசன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இந்தப் படத்தை இயக்குகிறார்.  தற்போது இந்தப் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரின் இரண்டு கதாபாத்திரங்களில் நடிகர் சிலம்பரசன் காணப்படுகிறார். சரித்திர கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது

    Unleash the valour and witness this remarkable journey from #STR48.🌟 Wishing @SilambarasanTR_ a happy birthday!#Ulaganayagan #KamalHaasan #Atman #SilambarasanTR #BLOODandBATTLE #HBDSilambarasanTR @ikamalhaasan @SilambarasanTR_ @desingh_dp #Mahendran @RKFI @turmericmediaTM… pic.twitter.com/8gIeiwiwUM
    — Raaj Kamal Films International (@RKFI) February 2, 2024

    மேலும் காண

    Source link

  • Kollywood actor Vijay entry politics Tamizhaga Vetri Kazhagam and 69th is the vijay last movie
    Kollywood actor Vijay entry politics Tamizhaga Vetri Kazhagam and 69th is the vijay last movie


    தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய் ((Vijay) . ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்த விஜய், சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  அதே நேரத்தில், விஜய் அரசியலுக்கு வருவதாக சில ஆண்டுகளாக தகவல்கள் கசிந்து வந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் விஜய்.
    அரசியலுக்கு எண்டரி கொடுத்த நடிகர் விஜய்:
    நடிகர் விஜயின் (Vijay) விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் இன்று அதாவது பிப்ரவரி 2ஆம் தேதி பதிவு செய்துள்ளனர். அதில் தமிழக வெற்றிக் கழகம் (Tamizhaga Vetri kazhagam) என பெயர் முடிவு செய்யப்பட்டு, அதனை சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். 
    விஜயின் தமிழக வெற்றிக் கழகம்  (Tamizhaga Vetri kazhagam)வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பேட்டியிடப்போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய் தெளிவுபடுத்தியுள்ளார். அதே நேரத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
    முழுநேர அரசியல்வாதியாக தன்னை ஈடுபடுத்த நினைக்கும் விஜய், இன்னும் ஒரே படத்தில் நடித்தபிறகு சினிமாவில் இருந்து விலகிவிடுவார். இதனால், விஜய்யின் கடைசி படம்  என்ன? யார்  இயக்குநர்? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒரு பக்கம், விஜய் அரசியலுக்கு எண்டரி கொடுத்தாலும், விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக தெரிவித்தது ரசிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
    விஜய்யின் கடைசி படத்தின் இயக்குநர் யார்? 
    தற்போது, வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest of All Time  என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு  யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் மைக் மோகன், லைலா, சினேகா, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ்,  என பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
    ஆனால், விஜய்யின் கடைசி படம் இது இல்லை. நடிகர் விஜய் அடுத்ததாக முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் டிவிவி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனம் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தை தயாரித்து இருந்த நிலையில், விஜய்யின் 69வது படத்தை தயாரிக்க இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. 
    மேலும், விஜய்யின் 69வது படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன் ஆகியோரின் பெயர்களும் அடிபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    மேலும் காண

    Source link

  • Latest Gold Silver Rate Today february 2 2024 know gold price in your city chennai coimbatore madurai bangalore mumbai
    Latest Gold Silver Rate Today february 2 2024 know gold price in your city chennai coimbatore madurai bangalore mumbai


    தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)
    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.47,120 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.5,890  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
    24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,880 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,360 ஆகவும் விற்பனையாகிறது. 
    வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)
    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.78.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000 க்கு விற்பனையாகிறது.
    கோயம்புத்தூர்
    “தென்னிந்தியாவின்  மான்செஸ்டர்” என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,890 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.6,360 ஆகவும் விற்பனையாகிறது. 
    மதுரை 
    மதுரை நகரில் (Gold Rate In Madurai ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,890 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,360 ஆகவும் விற்பனையாகிறது. 
    திருச்சி
    திருச்சியில் (Gold Rate In Trichy ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,890 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,360 ஆகவும் விற்பனையாகிறது. 
    வேலூர் 
    வேலூரில் (Gold Rate In Vellore) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,890 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,360 ஆகவும் விற்பனையாகிறது. 
    நாட்டின் பிற நகரங்களில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate in Various Cities in India)
    மும்பை
    மும்பை நகரில் (Gold Rate in Mumbai) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,327 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,800 ஆகவும் விற்பனையாகிறது.
    புது டெல்லி
    புது டெல்லியில் (Gold Rate in New Delhi) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,342 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,815 ஆகவும் விற்பனையாகிறது.
    கொல்கத்தா
    கொல்கத்தாவில்  (Gold Rate in Kolkata) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,327 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,800 ஆகவும் விற்பனையாகிறது.
    ஐதராபாத் 
    ஐதராபாத் நகரில்  (Gold Rate in Hydrabad) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,327 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,800 ஆகவும் விற்பனையாகிறது.
    அகமதாபாத்
    அகமதபாத்   (Gold Rate in Ahmedabad) நகரில்  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,332 ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,805 ஆகவும் விற்பனையாகிறது.
    திருவனந்தபுரம்
    திருவனந்தபுரத்தில்  (Gold Rate Trivandrum)  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,327 -ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,800 ஆகவும் விற்பனையாகிறது.
    பெங்களூரு
    பெங்களூருவில் (Gold Rate in Bengalore ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,327 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,800 ஆகவும் விற்பனையாகிறது.
    ஜெய்ப்பூர்
    ஜெய்ப்பூரில்  (Gold Rate in Jaipur ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,342 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,815 ஆகவும் விற்பனையாகிறது.
    புனே
    புனே நகரில்  (Gold Rate in Pune ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,327 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,800 ஆகவும் விற்பனையாகிறது.

    Source link

  • seetha raman today episode february 2nd episode written update details
    seetha raman today episode february 2nd episode written update details


    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா ராமை விவாகரத்து செய்ய முடிவெடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் . 
    அதாவது, சீதா கோலம் போட்டுக் கொண்டிருக்க சத்யாவும் அஞ்சலியும் வெளியே வருகின்றனர், சத்யா “நானும்  உங்களோட சேர்ந்து கோலம் போடவா அண்ணி?” எனக் கேட்க, அஞ்சலி, கொலைகாரி எனப் பேச, “இப்போ இன்னொரு கொலையை செய்யப் போறேன்” என அஞ்சலி கழுத்தை நெரித்து பயம் காட்டுகிறாள். 
    அதன் பிறகு சீதா ராமின் ஷூக்களுக்கு பாலிஷ் போட்டு கொண்டிருக்க, ராம் வெளியே வந்து “நீ எதுக்கு இதையெல்லாம் பண்ணிட்டு இருக்க?” என கோபப்பட, அர்ச்சனா “நீ இப்படி எல்லாம் பண்றதால் ராம் உன்னை சும்மா விட்டுடுவானு மட்டும் நினைக்காதே” என சொல்கிறாள். 
    உடனே சீதா “கோர்ட்டில் நிறைய உண்மை வெளியே வரும் அப்போ தெரியும்” என பதிலடி கொடுக்க, “என்ன உண்மை?” என அர்ச்சனா பதறிப் போய் கேட்கிறாள். “நான் தான் கொலைகாரின்னு சொல்லுவாங்க, ஆதாரம் அப்படி தானே இருக்கு, என்ன பாஸ் நான் சொல்றது சரி தானே?” என டீஸ் பண்ணுவது போல பேசுகிறாள். 
    பிறகு ராம், “அப்பா இவளை இதையெல்லாம் செய்ய வேண்டாம்னு சொல்லி வையுங்க” என சொல்லி கிளம்ப, ராஜசேகர் சில ரிப்போர்ட்டுகளுடன் சேதுவை சந்தித்துப் பேச வருகிறார். “சீதா ரெண்டு புல்லட் தான் யூஸ் பண்ணா, அதுக்கு அப்புறமும் குண்டு குறைந்திருக்கு. அப்படினா வேற யாரோ துப்பாக்கியை பயன்படுத்தி இருக்காங்க?” என சொல்கிறாள். 
    அதே போல் “கைக்கு கிளவுஸ் போட்டு தான் பயன்படுத்தி இருக்காங்க, அதனால் தான் கை ரேகை சீதாவுடையதாக இருக்கு” எனவும் சொல்ல, அஞ்சலி “நீங்க என்ன எங்க அண்ணனை விட பெரிய போலீசா?” என நக்கலாகப் பேச, ஆவேசப்படும் சேது அஞ்சலியை கை நீட்டி அறைகிறார்.  இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் எபிசோட் நிறைவடைகிறது.
    மேலும் படிக்க: Poonam Pandey Death: நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் உயிரிழப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்!
    Lal Salaam Rajinikanth Salary: லால் சலாம் படத்துக்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்: கெஸ்ட் ரோலுக்கு இத்தனை கோடிகளா!

    மேலும் காண

    Source link

  • அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்! எப்போது போட்டி?
    அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்! எப்போது போட்டி?


    தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகராக உலா வருபவர் நடிகர் விஜய். இவர் அரசியலில் களமிறங்க உள்ளார் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகி உள்ள நிலையில், அவர் இன்று தனது கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம்(Tamizhaga Vetri kazhagam) என்று அறிவித்துள்ளார். இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடப்பு மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த சட்டசபைத் தேர்தல் நடைபெறும் 2026ம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளார்.
    இதுதொடர்பாக, நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 
    அரசியல் அதிகாரம் தேவை:
    ” அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும். என் பணிவான வணக்கங்கள். “விஜய் மக்கள் இயக்கம்” பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.
    தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ‘ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்* ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி, மத, பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் ‘பிளவுவாத அரசியல் கலாச்சாரம்”மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதி, மத, பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகத்திற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக, குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
    தமிழக வெற்றி கழகம்(Tamizhaga Vetri kazhagam):
    மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.
    இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும் ‘எண்ணித் துணிக கருமம் என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, “தமிழக வெற்றி கழகம்” என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
    சட்டமன்ற தேர்தலில் போட்டி:
    முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
    வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின் வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்.
    இடைப்பட்ட காலத்தில் எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்க பணிகளுக்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது எமது கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
    எப்போது போட்டி?
    வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழ. மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக, என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி.
    அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்.”
    இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.
     

    மேலும் காண

    Source link

  • 35 million new cancer cases projected in 2050 world health organisation report
    35 million new cancer cases projected in 2050 world health organisation report


    WHO: 2050ஆம் ஆண்டுக்குள் புதிதாக 3.5 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 
    வருடங்கள் ஓடினாலும் பல தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்னும் மாறாத, குணப்படுத்த முடியாத விஷயம் என்றால் அது புற்றுநோய் தான். பல ஆய்வுகள், ஆராய்ச்சிகளுக்கு பின்பும் புற்றுநோய்க்கு முழுமையாக மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. சில மருந்துகள் புற்றுநோய்க்கு எதிராக நம்பிக்கை அளித்தாலும், முழுமையாக புற்றுநோயை குணப்படத்தாமல் இருக்கிறது. தற்போது வரை, கீமோதெரபிதான் புற்றுநோய்க்கு எதிராக முக்கியான சிகிச்சை முறையாக இருக்கிறது. 
    உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை:
    இந்த நிலையில், புற்றுநோய் குறித்து உலக சுகாதார அமைப்பு 115 நாடுகளில் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டது. புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (IARC) ஆய்வின் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. அதில், “வேகமாக வளர்ந்து வரும் உலக நாடுகளில் புற்றுநோய் என்பது மனித இனத்திற்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக  உள்ளது.
    புகையிலை, மது பழக்கம், உடல் பருமன், காற்று மாசு, சூற்றுச்சூழல் ஆகியவை  புற்றுநோய் வருவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன. உலக நாடுகளில் கடந்த 2022ஆம் ஆண்டில் 10 வகையான புற்று நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 
    நுரையீரல் புற்றுநோயானது உலகளவில் பொதுவாக ஏற்படும் புற்றுநோயாகும். நுரையீரல் புற்றுநோயால் கடந்த 2022ஆம் ஆண்டில் 2.5 மில்லியன் பேர் (12.4%) பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் மார்பக புற்றுநோய் உள்ளது. இந்த மார்பக புற்றுநோயால் 2.3 மில்லியன் பேர் (11.6%) பாதிக்கப்பட்டுள்ளனர்.   
    ”35 மில்லியன் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள்”
    அதேபோல, பெருங்குடல் புற்றுநோய்க்கு 9.6 சதவீத பேரும், வயிற்று புற்றுநோய்க்கு 4.9 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில், அதிகபட்சமாக 1.8 மில்லியன் பேர் (18.7%) நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். மேலும், மார்பக புற்றுநோயால் 6.9 சதவீத பேரும், வயிற்று புற்றுநோயால் 6.8 சதவீத பேரும்,  பெருங்குடல் புற்றுநோயால் 9.3 சதவீதம் பேரும் உயிரிழந்துள்ளனர். 
     2022ஆம் ஆண்டின் பாதிப்புடன் ஒப்பிடுகையில் 2050ஆம் ஆண்டிற்குள் உலக நாடுகளில் 35 மில்லியன் பேர் புற்றுநோயால்  பாதிக்கப்படுவார்கள். அதாவது, ஐந்து பேரில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள். மனிதவள மேம்பாட்டு தொடர்பான தரவரிசையில் வளர்ந்த நாடுகளில் 142 சதவீதமும், நடுத்தர நாடுகளில் 99 சதவீதமும் பாதிப்பு ஏற்படும்.  2022 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட வழக்குகளை விட 77% அதிகமாக இருக்கும்.  2050ஆம் ஆண்டிற்குள் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இருமடங்காக இருக்கும். 
    புகையிலை, மது பழக்கம், உடல் பருமன், காற்று மாசு, சூற்றுச்சூழல் பாதிப்பு போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கும்” என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

    மேலும் படிக்க
    DMK – Congress: 13ம் தேதி சென்னை வரும் கார்கே! தி.மு.க. – காங்கிரஸ் தொகுதி பங்கீடு இறுதியாகுமா?
    Poonam Pandey Death: நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் உயிரிழப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

    மேலும் காண

    Source link

  • Tamizhaga Vetri kazhagam: இதுவே என் ஆழமான வேட்கை; நாடாளுமன்ற தேர்தல் கிடையாது: நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை
    Tamizhaga Vetri kazhagam: இதுவே என் ஆழமான வேட்கை; நாடாளுமன்ற தேர்தல் கிடையாது: நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை


    நடிகர் விஜயின் (Vijay) விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் இன்று அதாவது பிப்ரவரி 2ஆம் தேதி பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார் நடிகர் விஜய். அதில் தமிழக வெற்றிக் கழகம் (Tamizhaga Vetri kazhagam) என பெயர் முடிவு செய்யப்பட்டு, அதனை சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். இந்நிலையில், விஜயின் தமிழக வெற்றிக் கழகம்  (Tamizhaga Vetri kazhagam)வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பேட்டியிடப்போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய் தெளிவுபடுத்தியுள்ளார். அதே நேரத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
    கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார் என பேச்சுகள் எழுந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும். என் பணிவான வணக்கங்கள். விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் சமூக சேவைகளையும் நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே இருப்பினும், முழுமையான சமூக பொருளாதார அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம் அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது
    தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ‘ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் என்றால் நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் ‘பிளவுவாத அரசியல் கலாச்சாரம்* மறுபுறம் என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற வெளிப்படையான சாதிமத பேதமற்ற தொலைநோக்கு சிந்தனை உடைய லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை மிக முக்கியமாக அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பிறப்பால் அனைவரும் சமம் என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும் அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும் அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.
    இந்நிலையில் என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில் இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது தீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும் எண்ணித் துணிக கருமம் என்பது வள்ளுவன் வாக்கு அதன்படியே “தமிழக வெற்றி கழகம்’ என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சிப்பின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylows) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
    வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின் வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகள் கொடி சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன் தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்.
    இடைப்பட்ட காலத்தில் எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும் கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்க பணிகளுக்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது எமது கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. 
    வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும் எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழ, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். 
    இறுதியாக என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல அது ஒரு புனிதமான மக்கள் பணி அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன் எனவே அரசியல் எனக் பொழுதுபோக்கு அல்ல அது என் ஆழமான வேட்கை அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன் என் சார்பில் நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார். 

    மேலும் காண

    Source link

  • Tiruvannamalai news Kortavai from the 8th century Farmers who do all things after worshiping Kortavai – TNN | 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை
    Tiruvannamalai news Kortavai from the 8th century Farmers who do all things after worshiping Kortavai – TNN | 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை


    கொற்றவை சிற்பம் 
    திருவண்ணாமலை மரபுசார் அமைப்பைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா இணைந்து திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது, ஆலம்பூண்டியை அடுத்த திக்காமேடு கிராமத்தில் உள்ள வயல்வெளியில் காளி சிற்பம் ஒன்று இருப்பதாகத் சந்திரன் அளித்த தகவலின் பெயரில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றனர். இதுகுறித்து மரபுசார் அமைப்பைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வத்திடம் பேசுகையில், செஞ்சி – திருவண்ணாமலை சாலையில் உள்ள ரெட்டிபாளையத்தின் வடக்கே உள்ள திக்காமேடு கிராமத்தின் வயல்வெளியின் மத்தியில் உயர்ந்த மேடை மேலே இரண்டு பலகை கல்லால் ஆன காளி சிற்பங்கள் காணப்பட்டது. அவ்விரண்டில் இடது புறம் உள்ள சிற்பம் சுமார் 5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் நான்கு கரங்களுடன் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ள அச்சிற்பம் கொற்றவை சிற்பம் என்பது கண்டறியப்பட்டது.
     

    8ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை 
    போர்வீரர்கள் அணியும் கவசம் போன்ற தலைப்பாரம் கரண்ட மகுடத்துடன் தலையை அலங்கரிக்க , நீள் வட்டமான முகத்தில் தடித்த உதடுகளும் இரு செவிகளில் பத்ர குண்டலும் அணிந்து காட்சி தருகிறார். கழுத்தில் மணிமாலையுடன் கூடிய ஆரம் போன்ற அணிகலன்களையும் தனது அனைத்து கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளையுடன் மார்பில் பட்டையான கச்சை அணிந்து காட்சியளிக்கிறார். நான்கு கரங்களில் தனது மேல் வலது கரம் சக்கரத்தையும் கீழ் வலது கரம் அருள் பாலிக்கும் அபய முத்திரையிலும், மேல் இடது கரத்தில் சங்கும், கீழ் இடது கரம் இடைமீது ஊறு முத்திரையில் காட்டப்பட்டுள்ளது. கொற்றவையின் இடையாடை பெரிய முடிச்சுகளுடன் தொடையைத் தாண்டி நீள, காலருகே இருபக்கமும் வீரர்கள் வடிவமைக்கப்பட்டு எருமை தலையின் மீது நிமிர்ந்து கம்பீரமாக நின்றவாரு காட்சி தருகிறது. இக்கொற்றவையின் சிற்பமைதி, ஆடை மற்றும் அணிகலன்களை வைத்து இதன் காலம் கி.பி 8ம் நூற்றாண்டாகக் கருதலாம்.

     
    கொற்றவையை வணங்கியே எல்லா காரியங்களையும் செய்யும் விவசாயிகள் 
    8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவைகள் பெரும்பாலும் அஷ்ட புஜங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், சதுர் புஜமாகக் காட்சி தருவது மிகவும் சொற்பமாக ஆவணம் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று ஆலம்பூண்டியை அடுத்த தூரம்பூண்டி கிராமத்தில் அஷ்ட புஜங்களுடன் கூடிய 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் ஒன்று சிதைந்த நிலையில், வயலுக்கு மத்தியில் இன்றும் சிறப்புற வழிபடப்படுகிறது. அவ்வூர் மக்கள் வீட்டு விசேஷங்கள் தொடங்கி, நிலத்தில் விதைப்பு முதல் அறுவடை வரை என எல்லா நிகழ்வுகளிலும் இக்கொற்றவையை வணங்கியே எல்லா காரியங்களையும் தொடங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான இக்கொற்றவை இன்றும் வயல்வெளியின் மத்தியில் வெட்ட வெளியில் வளமையைக் காக்கும் தெய்வமாக அருள்பாலித்து வருகிறது. இச்சிற்பத்தை ஊர்மக்கள் முறையாகப் பாதுகாத்து வழிபட்டு வந்தால், அவ்வூரின் தொன்மை காக்கப்படும்.

    மேலும் காண

    Source link

  • Thalapathy Vijay to End His Cinema Career This is the last Movie Tamizhaga Vetri Kazhagam TVK
    Thalapathy Vijay to End His Cinema Career This is the last Movie Tamizhaga Vetri Kazhagam TVK


    தான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை முடித்துவிட்டு, முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளதாக நடிகர் விஜய்(Vijay) அறிவித்துள்ளார்.
    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம்(Tamizhaga Vetri Kazhagam) கட்சியைத் தொடங்கி உள்ளது, அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. புலி வருது புலி வருது கதையாக அல்லாமல், கட்சியின் பெயரை அறிவித்துவிட்டார் நடிகர் விஜய்.  
    முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விஜய் கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
    இந்த நிலையில், சினிமாவில் இருந்து விலகுவதாகவும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு.
    வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டி இடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழு, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
    அரசியல் மற்றொரு தொழில் அல்ல
    இறுதியாக, என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்.
    தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றிக் கடன்
    எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றிக் கடனாகக் கருதுகிறேன்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை முடித்துவிட்டு, முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளதால், நடிகர் விஜய் திரைத் துறையில் இருந்து விலகுகிறார் என்று அறிய முடியகிறது. 

    மேலும் காண

    Source link

  • ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை! சூடுபிடிக்கும் ஜார்க்கண்ட் அரசியல்!
    ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை! சூடுபிடிக்கும் ஜார்க்கண்ட் அரசியல்!


    <p>மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், வட இந்தியாவில் அரசியல் நிகழ்வுகள் மாற்றம் கண்டு வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் கடந்த புதன்கிழமை கைது செய்தனர்.</p>
    <h2><strong>ஹேமந்த் சோரன் மனு மீது இன்று விசாரணை:</strong></h2>
    <p>இதையடுத்து, அந்த மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் இன்று பதவியேற்கிறார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து தன்னுடைய முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். அமலாக்கத்துறையால் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.</p>
    <p>உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பரிதிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணை நடைபெற உள்ளது.</p>
    <h2><strong>அமலாக்கத்துறை நடவடிக்கை:</strong></h2>
    <p>அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரனுக்கு ஒருநாள் நீதிமன்ற காவல் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு, அவர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹேமந்த் சோரன் மீது நிலக்கரி சுரங்க முறைகேடு, நிலமோசடி மூலம் சட்டவிரோதமாக பணிப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.</p>
    <p>அமலாக்கத்துறை அவருக்கு பல முறை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியும் அவர், ஆஜராகவில்லை. பின்னர், கடந்த மாதம் 20ம் தேதி நேரில் ஆஜரானார். பின்னர், டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 36 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
    <h2><strong>ஜார்க்கண்டில் பரபரப்பு:</strong></h2>
    <p>ஹேமந்த் சோரன் தரப்பு வழக்கறிஞர்கள் முதலில் அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், இந்த வழக்கில் நேரடியாக உச்சநீதிமன்றத்தையே அணுகலாம் என்று முடிவு செய்த ஹேமந்த் சோரன் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.</p>
    <p>ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றனர். சம்பாய் சோரன் தலைமையில் புதிய ஆட்சியை அமைக்கும் வரை அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ஹைதரபாத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. &nbsp;</p>
    <p>மேலும் படிக்க: <a title="Nitish Kumar: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை கொண்டாடும் நிதிஷ்குமார் – இத்தனை நல்ல விஷயங்களா?" href="https://tamil.abplive.com/news/india/bihar-cm-nitish-kumar-praises-interim-budget-as-positive-165191" target="_blank" rel="dofollow noopener">Nitish Kumar: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை கொண்டாடும் நிதிஷ்குமார் – இத்தனை நல்ல விஷயங்களா?</a></p>
    <p>மேலும் படிக்க: <a title="கடனில் தள்ளாடுகிறதா இந்தியா? மனம் திறந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!" href="https://tamil.abplive.com/news/india/nirmala-sitharaman-after-presenting-union-budget-2024-says-managed-the-economy-with-correct-intentions-165133" target="_blank" rel="dofollow noopener">கடனில் தள்ளாடுகிறதா இந்தியா? மனம் திறந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!</a></p>

    Source link

  • SIngapore Saloon Successmeet : அரவிந்த் சுவாமிக்கு நன்றி சொன்ன RJ பாலாஜி | RJ Balaji | Aravind Swamy
    SIngapore Saloon Successmeet : அரவிந்த் சுவாமிக்கு நன்றி சொன்ன RJ பாலாஜி | RJ Balaji | Aravind Swamy


    <p>அரவிந்த் சுவாமிக்கு நன்றி சொன்ன RJ பாலாஜி | RJ Balaji | Aravind Swamy | SIngapore Saloon Successmeet</p>

    Source link

  • Minister Gingee Masthan says There is no freedom in central government’s budget – TNN | மத்திய அரசின் பட்ஜெட்டில் சுதந்திரம் இல்லை
    Minister Gingee Masthan says There is no freedom in central government’s budget – TNN | மத்திய அரசின் பட்ஜெட்டில் சுதந்திரம் இல்லை


    விழுப்புரம்: மத்திய அரசின் பட்ஜெட்டில் சுதந்திரம் இல்லை என்றும் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கவில்லை, ரயில்வே துறையில் சொகுசு பெட்டிகளை இணைப்பதாக கூறுவதன் மூலம் சாதாரண ஏழை எளிய மக்கள் வஞ்சிக்கும் வகையில் ஒன்றிய அரசின் பட்ஜெட் இருப்பதாகவும் பணம் படைத்தவர்களை ஆதரிக்கும் பட்ஜெட்டாக உள்ளதாக அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார். 
    விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் விழுப்புரம் மாவட்டத்தின் இரண்டாவது புத்தகத் திருவிழாவை சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திமுக எம்எல்ஏ லட்சுமணன், ஆட்சியர் பழனி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து பார்வையிட்டு புத்தகங்களை வாங்கினர்.
    அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் மஸ்தான், தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து ஒட்டுமொத்த தமிழ மக்களும் படித்தவர்களாக இருக்க கல்வி கட்டமைப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பாடுகள் உள்ளன. வாசிப்பு தன்மை அனைவரிடத்திலும் வர வேண்டும் என்பதால் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக திருவிழா தமிழக அரசால் நடத்தப்பட்டு வருவதாகவும், நாட்டின் நடப்புகள் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் செயல்படுவதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர் இந்திய நாடு மதச்சார்பற்ற நாடாக இருக்க புத்தக கண்காட்சிகள் ஒரு சாட்சியாக இருக்கும் என்றும் வெளிநாடு வாழ் துறை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 2 ஆயிரத்திற்கும் அதிகமானோரை மீட்டு வந்துள்ளதாகவும் 300 க்கும் மேற்பட்ட இறந்தவர்களின் உடல்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார். வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஏதேனும் இன்னல்கள் ஏற்பட்டால் அவர்கள் தமிழக அரசு கொடுத்துள்ள எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் கூட அவர்களுடன் தொடர்பு கொண்டு மீட்பதற்கான நடவடிக்கை எடுத்து சிறப்பாக வெளிநாடு வாழ்துறை சிறப்பாக செயல்படுவதாகவும், போலி ஏஜெண்டுகள் கண்டறிந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் பட்ஜெட்டில் சுதந்திரம் இல்லை என்றும் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கவில்லை, ரயில்வே துறையில் சொகுசு பெட்டிகளை இணைப்பதாக கூறுவதன் மூலம் சாதாரண ஏழை எளிய மக்கள் வஞ்சிக்கும் வகையில் ஒன்றிய அரசின் பட்ஜெட் இருப்பதாகவும் பணம் படைத்தவர்களை ஆதரிக்கும் பட்ஜெட்டாக உள்ளதாக அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார். 

    மேலும் காண

    Source link

  • Tamil Nadu latest headlines news 2nd february2024 flash news details here
    Tamil Nadu latest headlines news 2nd february2024 flash news details here



    Tamizhaga Vetri Kazhagam: இன்னும் ஒரே ஒரு படம்தான்! சினிமாவில் இருந்து விலகும் நடிகர் விஜய்!

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம்(Tamizhaga Vetri Kazhagam) கட்சியைத் தொடங்கி உள்ளது, அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. புலி வருது புலி வருது கதையாக அல்லாமல், கட்சியின் பெயரை அறிவித்துவிட்டார் நடிகர் விஜய்.   முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் படிக்க

    DMK – Congress: 13ம் தேதி சென்னை வரும் கார்கே! தி.மு.க. – காங்கிரஸ் தொகுதி பங்கீடு இறுதியாகுமா?

    மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் பிரதான கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியான தி.மு.க. எந்த கட்சியுடனும் இதுவரை தொகுதி பங்கீட்டை உறுதி செய்யவில்லை. தி.மு.க. – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு இழுபறியாக உள்ளது. மேலும் படிக்க

    Tamizhaga Vetri kazhagam: இதுவே என் ஆழமான வேட்கை; நாடாளுமன்ற தேர்தல் கிடையாது: நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை

    நடிகர் விஜயின் (Vijay) விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் இன்று அதாவது பிப்ரவரி 2ஆம் தேதி பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார் நடிகர் விஜய். அதில் தமிழக வெற்றிக் கழகம் (Tamizhaga Vetri kazhagam) என பெயர் முடிவு செய்யப்பட்டு, அதனை சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். மேலும் படிக்க

    TN Rain Alert: அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை.. சென்னையில் குறையும் வெயிலின் தாக்கம்..

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி இன்று,  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும் படிக்க

    Rice Price: விண்ணை முட்டும் அரிசி விலை: கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை- ராமதாஸ்

    அரிசி விலை விண்ணை முட்டும் நிலையில் ஏறி வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சாப்பாட்டுக்கான சன்ன ரக அரிசி விலை, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிலோவுக்கு ரூ. 6 வரை உயர்ந்திருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் நெல்லுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலை கிலோவுக்கு மேலும் ரூ.12 வரை உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வணிகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க
     
     

    மேலும் காண

    Source link

  • T20 WC 2024: டி20 உலகக்கோப்பை அரையிறுதி நடக்கும் இடங்கள் திடீர் மாற்றம்! என்ன காரணம்?
    T20 WC 2024: டி20 உலகக்கோப்பை அரையிறுதி நடக்கும் இடங்கள் திடீர் மாற்றம்! என்ன காரணம்?


    <p>2024ம் ஆண்டு நடக்கும் கிரிக்கெட் தொடரில் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக கருதப்படுவது டி20 உலகக்கோப்பைத் திருவிழா ஆகும். இந்த திருவிழா வரும் ஜூன் 1ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 29ம் தேதி வரை நடக்கிறது.</p>
    <h2><strong>டி20 உலகக்கோப்பையில் முக்கிய மாற்றம்:</strong></h2>
    <p>இந்த நிலையில், டி20 உலகக்கோப்பைக்கான அட்டவணையில் முக்கிய மாற்றத்தை ஐ.சி.சி, செய்துள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணையில் உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதி போட்டி வெஸ்ட் இண்டீஸ் கயானாவில் உள்ள ப்ரொவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தற்போது இந்த மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; இந்த முதல் அரையிறுதி போட்டி ஜூன் 27ம் தேதி நடைபெறுகிறது. ரிசர்வ் டே ஜூன் 28ம் தேதி ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. &nbsp;&nbsp;</p>
    <p>அதேபோல, இரண்டாவது அரையிறுதி போட்டி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த டிரினிடாட் மற்றும் டொபாகோவில் முதல் அரையிறுதி நடக்கிறது. அங்குள்ள ப்ரைன் லாரா கிரிக்கெட் அகாடமியில் ஜூன் 26ம் தேதி நடக்கிறது. அந்த போட்டிக்கான ரிசர்வ் டே ஜூன் 27ம் தேதி ஆகும்.</p>
    <h2><strong>காரணம் என்ன?</strong></h2>
    <p>இந்த மாற்றமானது இறுதிப்போட்டி நடக்கும் பார்படாஸிற்கு, அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் செல்வதற்கு ஏதுவாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், ஏற்கனவே 2வது அரையிறுதி போட்டி அறிவிக்கப்பட்டு இருந்த டிரினிடாட் டொபாகோவில் இருந்து பார்படாஸ் மிகவும் தூரம் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p>
    <h2><strong>இந்திய போட்டிகளுக்கான நேரம் என்ன?</strong></h2>
    <p>அதேபோல, ஐ.சி.சி. இறுதிப்போட்டி தவிர மற்றபோட்டிகள் தொடங்கும் நேரத்தையும் அறிவித்துள்ளது. இந்திய அணி ஆடும் குரூப் ஆட்டங்கள் அனைத்தும் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி பார்படாஸில் உள்ள ப்ரிட்ஜ்டவுனின் கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக நியூயார்க் நகரத்தில் உள்ள நாசவ் கவுண்டி மைதானத்தில் ஆடுகிறது.&nbsp; இந்திய அணி ஆடும் குரூப் ஆட்டங்கள் அனைத்தும் நியூயார்க் நகரத்தில் நடக்கிறது.</p>
    <p>இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித்சர்மா, விராட் கோலி இருவரும் விளையாடும் கடைசி கிரிக்கெட் உலகக்கோப்பையாக இந்த டி20 உலகக்கோப்பை இருக்கும் என்பதால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.</p>

    Source link

  • Skyrocketing rice prices: Action needed to curb them- Ramadoss | Rice Price: விண்ணை முட்டும் அரிசி விலை: கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை
    Skyrocketing rice prices: Action needed to curb them- Ramadoss | Rice Price: விண்ணை முட்டும் அரிசி விலை: கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை


    அரிசி விலை விண்ணை முட்டும் நிலையில் ஏறி வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
    ’’தமிழ்நாட்டில் சாப்பாட்டுக்கான சன்ன ரக அரிசி விலை, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிலோவுக்கு ரூ. 6 வரை உயர்ந்திருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் நெல்லுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலை கிலோவுக்கு மேலும் ரூ.12 வரை உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வணிகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆனால், விண்ணை முட்டும் அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.தமிழ்நாட்டில் அரிசி விலை வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில்தான் அதிகரிக்கும். சம்பா/ தாளடி அறுவடைப் பருவமான ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அரிசி விலை பெருமளவில் குறையும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக, இப்போது ஜனவரி & பிப்ரவரி மாதங்களில் அரிசி விலை அதிகரித்து உள்ளது. 26 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் விலை ரூ.1450-ல் இருந்து ரூ.1600 ஆகவும், 62 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் விலை 1350 ரூபாயிலிருந்து ரூ.1720 ஆக அதிகரித்து உள்ளது. இதனால் சில்லறை விற்பனையில் கிலோவுக்கு குறைந்தபட்சம் 6 ரூபாயிலிருந்து 8 ரூபாய்  வரை அரிசி விலை அதிகரித்திருக்கிறது. இந்த விலை உயர்வு இன்னும் தொடரும் என்று தெரிகிறது.
    விளைச்சல் குறைவுக்குக் காரணம் என்ன?மிக்ஜாம் புயல் காலத்தில் பெய்த மழையால் காவிரி பாசன மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் நெற்பயிர்கள் சேதமடைந்தது, காவிரி பாசன மாவட்டங்களில் போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால்  2 லட்சம் ஏக்கரில் குறுவை நெற்பயிர்கள் முழுமையாகவும், ஒன்றரை லட்சம் ஏக்கரில் பகுதியாகவும் கருகியதால் விளைச்சல் குறைந்தது ஆகியவைதான் முதன்மைக் காரணங்களாக கூறப்படுகின்றன.தென்னிந்தியாவில் அதிக அளவில் நெல் விளையும் மாநிலங்களான ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும்கூட போதிய அளவில் நெல் விளைச்சல் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால், அம்மாநிலங்களைச் சேர்ந்த வணிகர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு குவிண்டால் சன்ன ரக நெல்லை ரூ.3,000 வரை விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். இதுவும் அரிசி விலை உயர்வுக்கு காரணம். இவை தவிர  அரிசி ஆலைகளுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது மூன்றாவது காரணமாக கூறப்படுகிறது.நெல் மூட்டைகளின் விலை கணிசமாக அதிகரித்து வருவதால், அடுத்த சில நாட்களில் அரிசியின்  விலை கிலோவுக்கு ரூ.12 வரை அதிகரிக்கக் கூடும் என்றும், ஒரு கிலோ பொன்னி, பாபட்லா ரக அரிசியின் விலை ரூ.75 என்ற உச்சத்தை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த வகை அரிசி கிலோ ரூ.48 முதல் ரூ.50க்கு தான் விற்கப்பட்டது. இவற்றின் விலை 50% வரை அதிகரித்து 75 ரூபாயை எட்டும் என்பது நியாயப்படுத்த முடியாததாகும்.
    கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிய மக்கள்
    ஒருபுறம் அரிசி விலை உயர்ந்தால் இன்னொருபுறம் பருப்பு விலைகளும், பிற மளிகை சமான்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்திருக்கின்றன. அதனால், தமிழ்நாட்டு மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும்போது, அதைக் கட்டுப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. இதற்காகத்தான் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சரின் தலைமையில் விலைக் கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது. சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் அரிசி விலை அதிகரித்திருப்பது இந்தக் குழுவுக்கு தெரியுமா? என்பதுகூடத் தெரியவில்லை. அரிசி விலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு  இதுவரை துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. மக்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லாததையே இது காட்டுகிறது.அரிசி விலை உயர்வுக்கான காரணம் அதன் பற்றாக்குறைதான் என்பது தெளிவாகத் தெரியும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அரிசி அதிகமாக விளையும் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழக சந்தைக்கு அரிசியை கொண்டு வருவதன் மூலம் விலையை குறைக்கச் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராய வேண்டும். இந்தியாவின் எந்த மாநிலத்திலும் அரிசி விலை குறைவாக இல்லை என்றால், சன்னரக அரிசியை நியாயவிலைக்கடைகள் மூலம் மானிய விலையில் விற்க  அரசு முன்வர வேண்டும்’’. 
    இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    மேலும் காண

    Source link

  • பரபரப்பான அரசியல் சூழசம்பாய் சோரன் முதலமைச்சராக பதவியேற்பு..
    பரபரப்பான அரசியல் சூழசம்பாய் சோரன் முதலமைச்சராக பதவியேற்பு..


    ஜார்கண்ட் புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் இன்று பதவியேற்றார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் கடந்த புதன்கிழமை கைது செய்தனர். இதனையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தின் மூத்த அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் இன்று முதலமைச்சராக பதவியேற்றார். ஜார்கண்ட் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

    JMM vice president Champai Soren takes oath as the Chief Minister of Jharkhand, at the Raj Bhavan in Ranchi. pic.twitter.com/xxcA7E8sxg
    — ANI (@ANI) February 2, 2024

    சரைகேலா-கர்சவான் மாவட்டத்தில் உள்ள ஜிலிங்கோடா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிமால் சோரனின் மூத்த மகன் சம்பாய் சோரன். தந்தையுடன் சேர்ந்து தனது பண்ணைகளில் வேலை செய்து வந்தார் சம்பாய் சோரன். அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றார். அவருக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்யப்பட்டது. அவருக்கு நான்கு மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர். 90களின் பிற்பகுதியில் ஷிபு சோரனுடன் இணைந்து ஜார்கண்ட் மாநிலத்தை உருவாக்க வேண்டும் என தீவிரமாக செயல்பட்டவர் சம்பாய் சோரன். தனது செயல்பாடுகள் மூலம் ‘ஜார்கண்ட் புலி’ என மக்கள் அவரை அழைத்தனர். சரைகேலா தொகுதி இடைத்தேர்தல் மூலம் சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
    அர்ஜுன் முண்டா தலைமையிலான பாஜக ஆட்சியில் சம்பாய் சோரன் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் அவர் முக்கியமான துறைகளை தன் வசம் வைத்திருந்தார். 2010ஆம் ஆண்டு, செப்டம்பர் 11ஆம் தேதி முதல் 2013ஆம் ஆண்டு, ஜனவரி 18ஆம் தேதி வரை அமைச்சராகப் பதவி வகித்தார். குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பிறகு, ஹேமந்த் சோரன் மாநிலத்தில் ஆட்சி அமைத்தபோது, ​​சம்பாய் சோரன் உணவு மற்றும் சிவில் சப்ளை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் காண

    Source link

  • Captain miller : இனி அமேசான் ப்ரைமில் கேப்டன் மில்லர்… ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!
    Captain miller : இனி அமேசான் ப்ரைமில் கேப்டன் மில்லர்… ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!


    Captain miller : இனி அமேசான் ப்ரைமில் கேப்டன் மில்லர்… ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

    Source link

  • Naam Tamilar Party: சாட்டை துரைமுருகன் வீட்டில் இருந்து 2 புத்தகங்களை எடுத்துச்சென்ற என்.ஐ.ஏ அதிகாரிகள்! நடந்தது என்ன?
    Naam Tamilar Party: சாட்டை துரைமுருகன் வீட்டில் இருந்து 2 புத்தகங்களை எடுத்துச்சென்ற என்.ஐ.ஏ அதிகாரிகள்! நடந்தது என்ன?


    <p>இன்று காலை முதல் தமிழ்நாடு முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் இரண்டு இடங்கள், சென்னை, திருச்சி, சிவகங்கை, தென்காசியில் தலா ஓர் இடம் என என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>
    <p>இதனை தொடர்ந்து என்.ஐ.ஏ சோதனை தொடர்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கூறுகையில், &ldquo; இன்று காலை என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடந்த போது நான் வீட்டில் இல்லை. எனது மனைவி மட்டுமே இருந்தார். காலை 6 மணி முதல் 9 மணி வரை சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்கு பின் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஓமலூரில் கடந்த 2022 ஆம் ஆண்டு யூடியூப் பார்த்து ஒருவர் துப்பாக்கி செய்ய முயன்றதாக சிவகங்கையில் அந்த நபரை கைது செய்தனர். அந்த நபர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் அவர் கட்சி உறுப்பினரா என்பது தெரியவில்லை. இது தொடர்பாக தான் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது பிரபாகரனின் எழுச்சி என நெடுமாறன் எழுதிய புத்தகம், திருப்பி அடிப்பேன் என்ற சீமானின் புத்தகம் ஆகிய இரண்டு புத்தகங்களை எடுத்துச் சென்றுள்ளனர். வரும் 7 ஆம் தேதி நேரில் ஆஜராக உள்ளேன்&rdquo; என தெரிவித்துள்ளார்.</p>
    <p>மேலும், &ldquo; தடை செய்யப்பட்ட அமைப்பிடம் நாங்கள் தொடர்பில் இல்லை. ஈழத் தமிழர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர்களிடமிருந்து நிதியுதவி பெறப்பட்டுள்ளது. அதற்கு வரி செலுத்தப்பட்டு உள்ளது. இதை பற்றி எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை. ஓமலூர் வழக்கு தொடர்பாக மட்டுமே சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விடுதலை புலிகள் அமைப்பு இல்லை என்ற&nbsp; நிலையில், தற்போது அந்த அமைப்பில் யார் இருக்கிறார்கள்? ஜனநாயக ரீதியான அமைப்பு தான் நாம் தமிழர் கட்சி&rdquo; என தெரிவித்துள்ளார். &nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Thalapathy Vijay Announces His Political Party in Ashtami Political Journey on Path of Rationality Tamizhaga Vetri kazhagam TVK
    Thalapathy Vijay Announces His Political Party in Ashtami Political Journey on Path of Rationality Tamizhaga Vetri kazhagam TVK


    எப்போது அரசியல் கட்சியை நடிகர் விஜய் அறிவிக்க போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வகைக்கும் விதமாக ‘தமிழக வெற்றி கழகம்’(Tamizhaga Vetri Kazhagam) என்ற தன்னுடைய கட்சியை அறிவித்து அரசியலுக்கு காற்புள்ளி வைத்திருக்கிறார் விஜய்.

    #தமிழகவெற்றிகழகம் #TVKVijay pic.twitter.com/ShwpbxNvuM
    — TVK Vijay (@tvkvijayoffl) February 2, 2024

    அஷ்டமியில் அறிவிப்பு வெளியிட்ட விஜய்
    அரசியல் கட்சி குறித்த தனது அறிக்கையில், அரசியல் மற்றொரு தொழில் அல்ல, இது புனிதமாமான மக்கள் பணி என குறிப்பிட்டுள்ள விஜய் அஷ்டமி தினமான இன்று தன்னுடைய அரசியல கட்சி பெயரை அறிவித்து மூட நம்பிக்கைகளை உடைத்தெறியும் பகுத்தறிவு பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்.
    அழுத்தங்களை தாண்டிய அறிவிப்பு
    பல்வேறு கால கட்டத்தில் அரசியல் கருத்துகளை பகிர்ந்து வந்த விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்கடிகள் அதிகரித்து வந்தன. ஆனால், அது குறித்து வெளிப்படையாக அவர் இதுவரை எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் தமிழ்நாட்டின் தலையெழுத்தை இதுவரை தீர்மானித்து வந்த இயக்கங்கள் தங்களுடைய கட்சியில் ‘கழகம்’ என்ற வார்த்தையை சேர்ப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். அதே மாதிரியான ஒரு பாணியை தன்னுடைய கட்சி அறிவிப்பிலும் சேர்த்து தமிழக வெற்றி கழகம என்று அறிவித்திருக்கிறார்.
    எல்லா நாளும் நல்ல நாளே கான்சப்ட்
    நல்ல நாள் பார்த்து, முன் கூட்டியே இன்று அரசியல் அறிவிப்பு என்று பெரிய அறிவிப்புகளை வெளியிட்டு, ஊடகங்களை எல்லாம் அழைத்து பிரம்மாண்டமாகதான் தன்னுடைய கட்சி அறிவிப்பையும், அரசியல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நடிகர் விஜய் வெளியிடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அப்படிப்பட்ட ஒரு வழக்கத்தை மாற்றி மிக எளிமையாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இப்படிப்பட்ட ஒரு முக்கிய அறிவிப்பை நடிகர் விஜய் வெளியிட்டிருப்பது பல்வேறு தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
    பலரும் செய்யத் துணியாத செயல்
    வழக்கமாக பலரும் அஷ்டமி தினத்தில் சுப காரியங்களையோ, முக்கிய முடிவுகளையோ, முக்கிய பணிகளையோ மேற்கொள்ள தயக்கம் காட்டும் நிலையில், அதையெல்லாம் நடிகர் விஜய் உடைத்தெறிந்து, அரசியல் கட்சியை வெளியிட்டிருக்கிறார்.

    மேலும் காண

    Source link