"19-ம் நூற்றாண்டின் பிற்போக்குத்தனமான கருத்து" - முஸ்லிம் மதகுரு பேச்சுக்கு கேரள முதல்வர் எதிர்ப்பு | "A regressive 19th-century idea" – Kerala CM opposes Muslim cleric's remarks


தங்க நகைகள் பெட்டிக்குள் இருப்பதுபோன்று பெண்களும் வீட்டுக்குள் இருக்க வேண்டும், பெண்கள் பொதுவெளியில் நடந்தால் நாசம் ஏற்படும். பெண்கள் வீட்டில் அடங்கி ஒடுங்கி வாழ வேண்டும் என முஸ்லிம் மதகுருவும், சமஸ்த அமைப்பின் தலைவருமான கேரளத்தைச் சேர்ந்த காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் முஸ்லியார் சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார்.

இது விவாதம் ஆனநிலையில் நேற்று அமைச்சரவை கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் வி.டி.சதீசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து முதல்வர் வி.டி.சதீசன் கூறுகையில், “பொது இடங்களில் பெண்கள் நடமாடுவது தொடர்பாக காந்தபுரம் ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார் கூறியுள்ள கருத்து, முற்போக்கு சிந்தனை கொண்ட கேரளாவுக்கு எந்த வகையிலும் பொருத்தமானதல்ல.

19-ம் நூற்றாண்டில் பேசப்பட வேண்டிய ஒரு பிற்போக்குத்தனமான கருத்தை அவர் இந்த 21-ம் நூற்றாண்டில் பேசிக் கொண்டிருக்கிறார். எங்கள் அரசுக்கோ, எங்கள் கட்சிக்கோ இந்த நிலைப்பாட்டில் துளியளவும் உடன்பாடில்லை.

அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். பெண்கள் பொதுவாழ்வின் அனைத்து தளங்களிலும் சம உரிமையோடு பங்கேற்று முன்னேற வேண்டும் என்பதே எங்கள் அரசின் உறுதியான நிலைப்பாடு.

காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் முசலியார்

காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் முசலியார்

இஸ்லாமிய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தாலே இது மிகத் தெளிவாகப் புரியும். நபிகள் நாயகத்தின் முதல் மனைவி கதீஜா ஒரு மாபெரும் வணிகராகத் திகழ்ந்தவர். அவரது மற்றொரு மனைவியான ஆயிஷா “ஜமல்’ போரில் படைகளை வழிநடத்திய தலைமைத் தளபதியாக நின்றவர்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed