<p>சத்தீஸ்கர் மாநிலம், காங்கெர் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும் மாவோஸ்ட்டுகளுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை பி.டி.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டின்போது எல்லை பாதுகாப்பு படையினர் இருவர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. </p>
<p>சத்தீஸ்கர் காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் கூட்டுக் குழுவிற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் கான்கெர் மாவட்டத்தின் சோட்டபெத்தியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப் பகுதிகளில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. மாவோஸ்ட்டுகளிடம் இருந்து நான்கு ஏ.கே.47 ரக துப்பாக்கிகளையும் இதர பயங்கரமான ஆயுதங்களையும் எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். </p>
<p>கடந்த மாதத்தில் நடைபெற்ற இதேபோன்ற துப்பாக்கிச் சூட்டில் மவோயிஸ்ட்டுகள் தரப்பில் இருந்து ஒருவரும் பாதுகாப்பு படையினர் தரப்பில் இருந்து ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆனால் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்து பயங்கரமான குறிப்பாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் கைப்பற்றினர். </p>
<p>கடந்த ஆண்டு நவம்பரில், மாநில சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்த போது, கான்கெர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. ஒருகட்டத்திம் மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கிகளை வீசிவிட்டு ஓடியதால், பாதுகாப்பு படையினர் துப்பாக்கிகளை மட்டும் கைப்பற்றினர். அதேபோல், வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள பண்டாவில் உள்ள வாக்குச்சாவடிக்கு அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த DRG அதிகாரிகளை மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட முயற்சி செய்தனர். </p>

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
A search for how to buy likes on tiktok app should be assessed by delivery transparency, retention, account-security requirements, and…
сравнение на букмейкъри My web-site – футболни прогнози
quem Bola De Ouro Apostas Esportivas online gratis
где купить экскурсии на пхукете https://ekskursiya-phuket.com
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed
-

புதுச்சேரி பட்ஜெட்: `ரூ.14,300 கோடியில், வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.2,200 கோடிதான்!’ – சாடும் திமுக | ACTPnews.com
-

விஜய் அரசு 2 முக்கிய திட்டங்கள்: யாருக்கெல்லாம் என்ன சலுகை?|Vijay Delivers Two TVK Promises: Who Will Get the Benefits? | ACTPnews.com
-

புதுச்சேரி: “எனக்கு எதிராக பெரும் சதி நடக்கிறது!” – சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சர் பகீர் தகவல்! | ACTPnews.com
-

அமைச்சர் மன்னிப்பு: “இனி இதுபோல நடக்கக் கூடாது" – மதுரையில் எம்.பி சு.வெங்கடேசன் பேட்டி! | ACTPnews.com
-

`இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அவசியம் இல்லை' – மாணவியின் கோரிக்கையை நிராகரித்த உ.பி. உயர் நீதிமன்றம் | ACTPnews.com


















estrategia Apuestas Betis valencia en vivo