காங்கிரஸ் கட்சி சார்பில் 3 முறை சட்டமன்ற் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயதாரணி இன்று பா.ஜ.க வில் இணைந்தார். எல்.முருகன் முன்னிலையில் டெல்லியில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகத்தில் அவர் பாஜகவில் இணைந்தார்.
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சி தரப்பிலும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுகிறது. இப்படி இருக்கும் சூழலில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ விஜயதாரணி பாஜக்வில் இணைந்துள்ளது பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. கடந்த வாரம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த கே.எஸ் அழகிரி நீக்கிவிட்டு புதிய காங்கிரஸ் கட்சி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டார்.
இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ விஜயதாரணி பாஜகவில் இணைகிறார் என்ற தகவல் கடந்த இரண்டு வாரங்களாக பரவி வந்தது. ஆனால் அந்த தகவல் வதந்தியே, உட்கட்சி பூசல் இல்லை என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று பாஜக இணை அமைச்சர் எல்.முருகம் தலைமையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சி அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவர் மீது கட்சி தாவல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மக்களுக்கான பணியை அவர் முறையே செய்யவில்லை தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ஆனால் அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினால் ஏற்றுக்கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காண