ACTP news

Asian Correspondents Team Publisher

தமிழகத்தில் சிறுத்தை…புதுச்சேரியில் புலி வேடமிட்ட நாய் – பீதியில் பொதுமக்கள்


<h2 style="text-align: justify;">தெரு நாய்க்கு புலி வேடம்</h2>
<p style="text-align: justify;">புதுச்சேரி குறிஞ்சி நகர் பகுதியில் நள்ளிரவில் தெரு நாய்க்கு புலி வேடம் போல் நாயின் முதுகில் கோடு வரைந்து தெருவில் விட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த நாய் பல்வேறு தெருக்கள் வழியாக சுற்றி வந்த நிலையில் வாகன ஓட்டிகள் திடீரென பார்த்த போது புலி என அச்சுத்துடன் ஒதுங்கி சென்றனர். பின்னர் அதனை நாய் என அறிந்தவுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.</p>
<h2 style="text-align: justify;">பீதியில் பொதுமக்கள்&nbsp;</h2>
<p style="text-align: justify;">ஏற்கனவே, மயிலாடுதுறை நகர்ப்புறத்தில் சிறுத்தை ஒன்று தென்பட்டது, சுதாரித்துக் கொண்ட மாவட்ட வனத்துறை மற்றும் காவல்துறை, சிறுத்தையைப் பிடிப்பதற்கு கடந்த 12 நாட்களாக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தச் சிறுத்தையை 11 நாட்களைக் கடந்தும் பிடிக்க முடியாமல் வனத்துறை திணறி வரும் நிலையில், அது அப்பகுதியை விட்டு திருவாரூர், தஞ்சை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் தெரு நாய்க்கு புலி வேடம் போல் தெரு நாயின் முதுகில் கோடு வரைந்து தெருவில் விட்ட சம்பவம் போதுமக்க்ளிடேயை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>

Source link