இறங்கிய இடத்தில் எல்லாம் ஹிட்டுதான்! ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ்! தொடருமா வேட்டை!


இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தங்கள் அணியின் புதிய கேப்டனை அறிவித்துள்ளது. சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

#OrangeArmy! Our new skipper Pat Cummins 🧡#IPL2024 pic.twitter.com/ODNY9pdlEf
— SunRisers Hyderabad (@SunRisers) March 4, 2024

ஏற்கனவே பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்படுவதாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் பேட் கம்மின்ஸ் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்று ஒரே ஆண்டில் ஐசிசி கோப்பைகளை வென்ற கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார். 
 

மேலும் காண

Source link