மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் திரைப்படமான `மைக்கேல்' வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.| Micheal Jackson's biopic movie is releasing on April

இப்படத்தில் மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் மகனை நடிக்க வைக்க முடிவு செய்தது குறித்து இப்படத்தின் இயக்குநர் ஆண்டோயின், “நான் ஜாஃபரை முதல் முறையாக சந்தித்தபோது அவரிடம் ஸ்பிரிட்சுவல் தொடர்பு தெரிந்தது.

மைக்கேல் ஜாக்சனை இயல்பாகப் பிரதிபலிக்கும் திறன் அவரிடம் இருந்தது. அதுமட்டுமல்ல, ஜாஃபரின் முகத்திற்கும் கேமராவுக்கும் அழகான கெமிஸ்ட்ரியும் இருக்கிறது.

மைக்கேல் ஜாக்சனின் கதாபாத்திரத்திற்கு உலகமெங்கும் பல நடிகர்களை தேடினோம்.

பிறகுதான், ஜாஃபர் சரியான தேர்வாக இருப்பார் என நடிக்க வைத்தோம்!” எனக் கூறியிருக்கிறார். இதைத் தாண்டி மைக்கேல் ஜாக்சனின் சிறு வயது கதாபாத்திரத்தில் ஜுலியானோ க்ரூ வால்டி என்பவர் நடித்திருக்கிறார்.

Micheal Jackson at Cannes Film Festival

Micheal Jackson at Cannes Film Festival

இப்படத்தில் மைக்கேல் ஜாக்சனின் தாயாராக நடித்திருக்கும் நியா லாங், “மைக்கேல் ஜாக்சனின் தாயார்தான் குடும்பத்திற்கு அற்புதமான வலிமையின் தூண்.

ஒரு தாயாக, அவர் தன்னலமற்றவராக இருந்தார். மைக்கேல் ஜாக்சனுடைய தாயாரின் குரலைத் திரைக்குக் கொண்டுவந்து, மைக்கேல் ஜாக்சனின் கதையை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமைப்படுகிறேன்.” என்றார்.

இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் 24-ம் தேதி திரைக்கு வருகிறது.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed