[ad_1]
இருதரப்பு வாதங்களையும் கேட்ட மதுரை கூடுதல் மாவட்ட மற்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி S. சண்முகவேல் பிறப்பித்த உத்தரவில், “கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்ப்பதும், தேர்தலில் வாக்களிப்பதும் சாத்தியப்படும்போது, நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்வதில் என்ன தடை இருக்க முடியும்?’ எனக் கேள்வியெழுப்பினார்.
மேலும் தயாநிதியின் தற்போதைய மனநிலை, புரிந்துகொள்ளும் திறன் மற்றும் உடல் தகுதியை ஆய்வு செய்ய புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர், முதன்மை மனநல மருத்துவர் (Chief Psychiatrist), கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் மற்றும் முதன்மை நரம்பியல் வல்லுநர் (Chief Neurologist) அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்து தயாநிதிக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.

தேவைப்பட்டால் தயாநிதியை மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்து ஆய்வு செய்யும் அதிகாரமும் ஜிப்மர் இயக்குநருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின், அதன் அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்திற்கு நேரடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமலாக்கத்துறையின் இந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, ஜிப்மர் மருத்துவக் குழுவின் பரிசோதனைக்கு தயாநிதி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
[ad_2]
Source link
























