நீரஜ் சோப்ரா

Last Updated:

அவர் எறிந்த 85.69 மீட்டர் தூரமானது, இந்திய தடகள சம்மேளனம் (AFI) நிர்ணயித்துள்ள தகுதி வரம்பான 83.5 மீட்டரை விட அதிகமாகும்

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களமிறங்கிய இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, நேற்று நடைபெற்ற 2026 தோஹா டைமண்ட் லீக் போட்டியில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். காயத்திற்குப் பிந்தைய தனது முதல் சர்வதேசப் போட்டியான இதில், அவர் அதிகபட்சமாக 85.69 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார்.

இப்போட்டியில் இலங்கை நாட்டின் வளர்ந்து வரும் இளம் ஈட்டி எறிதல் நட்சத்திரமான ருமேஷ் தரங்க பத்திரகே 88.68 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தைக் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.

பொதுவாக தோஹா மைதானம் 90 மீட்டருக்கும் அதிகமான தூரப் பதிவுகளுக்குப் பெயர் பெற்றது என்றாலும், இந்த முறை உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் கூட தங்களது சரியான வேகத்தை கண்டறிய சற்று சிரமப்பட்டனர்.

போட்டியின் முதல் சுற்றில் கர்டிஸ் தாம்சன் முன்னிலை வகிக்க, இரண்டு மற்றும் மூன்றாவது சுற்றுகளில் ஆண்டர்சன் பீட்டர்ஸ் முன்னிலை பெற்றார். ஆனால், நான்காவது சுற்றில் இலங்கை வீரர் பத்திரகே 88.68 மீட்டர் தூரத்தை எட்டி, நடப்பு உலக முன்னணி வீரர் என்பதை மீண்டும் நிரூபித்து வெற்றியைத் தன்வசமாக்கினார்.

இப்போட்டியில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆண்டர்சன் பீட்டர்ஸ் 86.38 மீட்டர் தூரத்துடன் இரண்டாம் இடத்தையும், வெண்கலப் பதக்கம் வென்ற கர்டிஸ் தாம்சன் 85.99 மீட்டர் தூரத்துடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

நீரஜ் சோப்ரா தனது முதல் சுற்றை ஃபவுல் உடன் தொடங்கினார். அதன்பின், இரண்டாவது சுற்றில் 82.77 மீட்டர் தூரத்தை எட்டி தனது கணக்கைத் தொடங்கினார். தொடர்ந்து தனது திறனை வெளிப்படுத்திய அவர், மூன்றாவது சுற்றில் தனது சிறந்த பதிவாக 85.69 மீட்டர் தூரத்தை எறிந்து தற்காலிகமாக மூன்றாவது இடத்தைப் பிடித்தார். நான்காவது சுற்றில் 83.45 மீட்டர் தூரத்தை மட்டுமே எட்ட முடிந்தது.

முன்னணி மூன்று இடங்களுக்குள் நுழையும் தீவிர முயற்சியில், ஐந்தாவது சுற்றில் அவர் ஃபவுல் செய்தார். டைமண்ட் லீக் விதிகளின்படி முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வீரர்களுக்கு மட்டுமே ஆறாவது சுற்றில் எறிய வாய்ப்பு வழங்கப்படும் என்பதால், ஐந்தாவது சுற்றோடு நீரஜ் சோப்ராவின் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இருப்பினும், இந்தத் தொடர் நீரஜ் சோப்ராவுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. அவர் எறிந்த 85.69 மீட்டர் தூரமானது, இந்திய தடகள சம்மேளனம் (AFI) நிர்ணயித்துள்ள தகுதி வரம்பான 83.5 மீட்டரை விட அதிகமாகும். இதன் மூலம், அவர் கிளாஸ்கோ 2026 (Glasgow 2026) சர்வதேசப் போட்டிக்கு அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்று தன் இடத்தை உறுதி செய்துள்ளார்.

Source link


  1. RichardaGesy Avatar
    RichardaGesy

    A valuable source of information healthfare.ca covering health, balanced nutrition, and daily wellness. The resource provides useful materials on balanced nutrition, along with practical advice. Visitors can also access reviews and recommendations. Among the main topics are healthy habits, healthy eating and diet, exercise and fitness, wellness routines, and everyday health.

  2. StevenMig Avatar
    StevenMig

    Not every campaign needs an aged US identity, but funnels with tight payment geos usually do, and farmed facebook accounts usa exist for that scenario. You receive profiles that already passed a farming cycle on American IPs, complete with recovery mail, 2FA seed and an active session, ready to be paired with your own proxy and card before the first ad object is created. NPPR Team keeps replacement rules in plain language, and repeat buyers can reserve larger US batches in advance of a launch.

  3. buro pohoron vechnaya pamyat 895 Avatar
    buro pohoron vechnaya pamyat 895

    Ритуальные услуги http://www.buro-pohoron-vechnaya-pamyat.ru под ключ в Москве и Московской области. Поможем быстро и деликатно организовать похороны, подготовить необходимые документы, подобрать ритуальные принадлежности, транспорт и место захоронения. Круглосуточная консультация и сопровождение опытных специалистов.

Leave a Reply

Latest News

View All

  1. Продолжительного пьянства организм переносит тяжелее с каждым последующим эпизодом. Развитие алкоголизма сопровождается нарушениями работы внутренних органов. Алкоголь и его метаболиты…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed