பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதில் சிறப்பாக செயலாற்றிய இராமநாதபுரம், காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுப் பத்திரங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம்:

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த மூன்று மாவட்டங்களுக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 2024-ம் ஆண்டுக்கான விருதுக்கு இராமநாதபுரம், காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட நிர்வாகங்களின் சார்பில் அம்மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.

பாலின விகிதம் உயர்வு:

இது தொடர்பாக, அரசு வெளியிட்ட அறிவிப்பில், “2023-2024ஆம் ஆண்டில் மாவட்டத்தின் பிறப்பு பாலின விகிதம்,
5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம், உயர் பிறப்பு விகிதம் மற்றும் கருத்தரிப்பு மற்றும் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை நுட்பங்கள், சட்டம் ஆகிய காரணிகளை கவனமுடன் பரிசீலித்து, இராமநாதபுரம், காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட நிர்வாகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பி. விஷ்ணு சந்திரன், ( தங்கப் பதக்கம்), காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் ( வெள்ளிப் பதக்கமம்), ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜ கோபால் சுன்கரா (வெண்கலப் பதக்கமம்) ஆகிய மூவருக்கும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கம், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Latest News

View All

1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed