இந்திய அணி

Last Updated:

ஆல் ரவுண்டர் தீப்தி சர்மாவின் சுழற்பந்துவீச்சு தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது

இந்திய அணி
இந்திய அணி

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் விறுவிறுப்பான 6-வது லீக் போட்டியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணி, இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களுக்கு சுருண்டது.

இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 6 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். எனினும், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை மீட்டெடுத்தது.

மந்தனா 44 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் குவித்து அசத்தினார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 36 ரன்கள் எடுத்தார். இறுதி கட்டத்தில் ரிச்சா கோஷ் வெறும் 17 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை 170 ஆக உயர்த்தினார். பாகிஸ்தான் தரப்பில் சாடியா இக்பால் மற்றும் பாத்திமா சனா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே தடுமாற்றமாக இருந்தது. தொடக்க வீராங்கனை முனீபா அலி மட்டுமே சற்று ஓரளவுக்கு போராடி 35 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.

மற்ற வீராங்கனைகளான குல் பெரோசா 12 ரன்கள், ஆயிஷா ஜாபர் 12 ரன்கள், அலியா ரியாஸ் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் அபார பந்துவீச்சால் பாகிஸ்தான் அணியால் ரன் ரேட்டை உயர்த்த முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 106 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

ஆல் ரவுண்டர் தீப்தி சர்மாவின் சுழற்பந்துவீச்சு தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அவர் தனது 4 ஓவர்களில் வெறும் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணியை உடைத்தார்.

இவருக்கு பக்கபலமாக பந்துவீசிய ஸ்ரீ சரணி 4 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி சர்மா ஆட்டநாயகியாக (Player of the Match) தேர்வு செய்யப்பட்டார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Телесериал в интернете сверхъестественное сезон на русском с хорошей картинкой доступно на сайте. Все сезоны и серии можно смотреть онлайн.…

  2. Ищете товары для охоты? https://tovary-dlya-ohoty.ru предлагает широкий выбор для охоты, путешествий и outdoor-активностей. В каталоге собраны охотничья экипировка, одежда, обувь,…

  3. Заказать быстро заказать букет с доставкой можно в онлайн-каталоге. Заказывайте авторские букеты к любому празднику. На сайте доступны букеты из…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed