விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சியின் பானை சின்னம் அழிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனத்தில் பானை சின்னம் அழிப்பு

விழுப்புரம் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தற்போது ரவிக்குமார் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட அவர், தற்போது சுயேட்சை சின்னமான பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். புதிய சின்னம் என்பதால் விடுதலை சிறுத்தை கட்சியினர் பல இடங்களில் பானை சின்னத்தை சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திண்டிவனம் அருகே சார் ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியிலுள்ள (சிங்கனுார் சாலை) சுவர்களில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பானை சின்னம் வரையப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சி

இந்த சின்னத்தை நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் மை ஊற்றி அழித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த சிசிடிவி பதிவில், பைக்கில் வரும் நபர், பானை சின்னத்தை அழிக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

போலீசார் விசாரணை

இதனால் அப்பகுதியில் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால், மயிலம் காவல் போலீசார் பானை சின்னத்தை அழித்த நபர் யார் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மரக்காணம் அருகே ஆலங்குப்பம் பகுதியில் பானை சின்னம் அழிக்கப்பட்டது. தற்போது திண்டிவனம் அருகே பானை சின்னம் அழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
50 giros gratis sin depósito con dinero real españa casino santaella (Phoebe)
tordex market darknet silk road darknet link
copa del rey 2025 apuestas – https://Www.Agmemorabilia.com/, octavos eurocopa
is online casino $20 min deposit (Tegan) gambling banned in australia, online gambling usa law and whats the largest casino…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிப்பதாக புகார்! | ACTPnews.com

“மோடி அரசின் பிடிவாதத்திற்குப் பிஞ்சுக் குழந்தைகளின் கல்வியைப் பணயம் வைப்பதா?" – மாணிக்கம் தாகூர் | ACTPnews.com

‘பரிதாபத்தில்தான் தலித்தை பொதுத் தொகுதியில் நிறுத்தினீர்களா?’ – அவையில் வன்னி அரசு சரமாரி கேள்வி! | ACTPnews.com

‘மதவாதிகளுடன் கரம் கோர்த்து அனைத்து சாதி அர்ச்சகர் திட்டம் முடக்கம்!’ – திமுகவை சாடிய ஆதவ் |“Joining hands with religious extremists, the All-Caste Priest Scheme has been stalled!” – Aadhav slams DMK | ACTPnews.com

beste live casino eps Here is my web site – 50 Euro Einzahlen 200 Euro Spielen (Alvasnaplo.Hu)