கில்

ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக குஜராத் அணி இறுதி போட்டியை எட்டியுள்ளது. நாளை (மே31)அகமதாபாத் மைதானத்தில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது.

நேற்று நடந்த குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 214 ரன்கள் எடுத்தது. இதனை விரட்டி களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் இந்த ஸ்கோரை 19வது ஓவரிலேயே எட்டி வெற்றி பெற்றனர். இதன் மூலம் தனது மூன்றாவது பைனலில் கால் பதித்துள்ளது குஜராத் அணி.

கில்

இந்த போட்டிக்கு பின்னர் பேசிய அணியின் கேப்டன் சுப்மன் கில்,

“டாஸ் போடும்போது சில குழப்பங்கள் இருந்தன. இருந்தாலும் இந்த வெற்றியைப் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கும் சாய் சுதர்சனுக்குமான கூட்டணி மிகவும் நன்றாகப் பொருந்திப் போகிறது. நாங்கள் ஒருவருக்கொருவர் ஆட்டத்தை மிக நன்றாகப் புரிந்து வைத்துள்ளோம்.

களத்தில் பேட்டிங் செய்யும்போது எங்களுக்குள் இருக்கும் கம்யூனிகேஷன் மிகவும் சிறப்பாக இருக்கும்.

சாய் சுதர்சன் ‘ஹிட்-விக்கெட்’ ஆன விதம் விசித்திரமானது. அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக இப்படி யாரும் பார்த்திருக்க முடியாது. சமூக வலைத்தளங்களில் அவர் தன் கையில் டேப் ஒட்டியிருந்த வீடியோவைப் பார்த்தேன். அடுத்த போட்டியில் நானும் அதைச் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

கில்
கில்

இன்று நான் மிகவும் அமைதியாக, ஒரு தனி மனநிலைக்குள் இருந்தேன். பந்துவீச்சாளர்களை மட்டுமே கவனித்து, பந்து விழும் இடத்திற்குத் தகுந்தபடி விளையாடினேன். ஃபார்மில் இருக்கும்போது களமே கண்ணில் தெரியும், பந்து பேட்டின் நடுவில் சரியாகப் படும்.

எதிரணியை 180–190 ரன்களுக்குள் கட்டுப்படுத்த நினைத்தோம். ஆனால் அவர்கள் 214 ரன்கள் எடுத்துவிட்டனர். நல்ல தொடக்கம் கிடைத்ததும் போட்டியை நானே முடிக்க நினைத்தேன். ஆனால் நான் அவுட் ஆன விதம் வருத்தமளிக்கிறது.

சொந்த மைதானத்தில் ஃபைனல் விளையாடப் போகும் உணர்வு சிறப்பாக உள்ளது. போட்டியின் முக்கியத்துவத்தைத் தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல், கணக்குகளைத் தள்ளிவைத்துவிட்டு, பதற்றமின்றி நம் இயல்பான கிரிக்கெட்டை விளையாடினாலே மிகச்சிறந்த ஆட்டம் வெளிப்படும். அதன் பிறகும் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை,” என்று நம்பிக்கையுடன் பேசியிருந்தார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Онлайн-платформа https://inventure.com.ua/uk про инвестиции, финансовые рынки и экономику Украины и мира. Актуальные новости, профессиональная аналитика, обзоры активов, инвестиционные стратегии и…

  2. Хочешь заказать еду? https://kejtering-moskva-s-dostavkoj.ru фуршеты, банкеты, корпоративы, свадьбы и частные праздники. Меню составляется с учетом количества гостей, пожеланий заказчика и…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed