ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால்

Last Updated:

முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் அணி அனைத் விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ரோஹித் சர்மா – யஷஸ்வி ஜெய்ஸ்வால்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் அணி அனைத் விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 110 ரன்களும், ரோஹித் சர்மா 79 ரன்களும் எடுத்தனர்.

ஷ்ரேயாஸ் ஐயர் 20 ரன்கள் சேர்க்க 28.4 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்த இந்திய அணி 224 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பும்ரா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா அணியில் இல்லாத நிலையில், இந்திய அணி எளிதாக தொடரை முழுமையாக வென்றிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியில் அதன் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிதி மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 131 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 1 சிக்சருடன் 102 ரன்கள் எடுத்தார். அஸ்மதுல்லா உமர்சாய் 50 ரன்களும், முகமது நபி 21 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசியி பிரசித் கிருஷ்ணா 8.2 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். பிரின்ஸ் யாதவ், குர்நூர் ப்ரார், ஹர்ஷ் துபே தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.

219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மாவும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு இருவரும் 170 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

ரோஹித் சர்மா 79 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 86 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கனுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Ищете товары для охоты? https://tovary-dlya-ohoty.ru предлагает широкий выбор для охоты, путешествий и outdoor-активностей. В каталоге собраны охотничья экипировка, одежда, обувь,…

  2. Заказать быстро заказать букет с доставкой можно в онлайн-каталоге. Заказывайте авторские букеты к любому празднику. На сайте доступны букеты из…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed