மண்டாடி


‘விடுதலை’, ‘கொட்டுக்காளி’, ‘கருடன்’, ‘மாமன்’, படத்தைத் தொடர்ந்து மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ‘மண்டாடி’ படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சூரி.

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தைத் தயாரித்த எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

இப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வெற்றிமாறன் பணியாற்றி இருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆக. 28) அன்று நடைபெற்றது.

மண்டாடி

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூரி, ” சில வார்த்தைகளை எத்தனை முறை சொன்னாலும் சலிக்காது. இன்றைக்கு எனக்கு கிடைக்கக்கூடிய இந்த விசிலும், கைத்தட்டலும் அனைத்தும் வெற்றிமாறனுக்கு தான் சேரும்.

நான் இதுவரை வந்ததற்கும், இதற்கு மேல் நான் பயணிப்பதற்கும் காரணம் அவர்தான். எவ்வளவு புயல் காற்று வந்தாலும் நீங்கள் போட்ட விதை முளைத்துக் கொண்டே இருக்கிறது.

இதற்கு மேல் பலத்த காற்று கூட அடிக்கலாம். எது வந்தாலும் அந்தச் செடி ஒடியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இளையராஜா பெரிய ஹீரோக்களுக்கும் இசையமைப்பார், சிறிய ஹீரோக்களுக்கும் இசையமைத்து கொடுப்பார்.

அவரால் பல இயக்குநர்கள் உருவாகியிருக்கிறார்கள். அதேபோல் ஜி.வி.பிரகாஷ் குமாரும் அனைவருக்கும் பாடல்கள் கொடுத்து வருகிறார்.

இந்தப் படத்தில் ரிஸ்க் இல்லை, ரிஸ்க்கையே படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினேன்.

இந்தப் படத்தை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் ராமநாதபுரம் சுற்றுவட்டார ஊர் மக்கள் எங்களுக்கு அவ்வளவு ஆதரவு கொடுத்தார்கள்.

அவர்கள் ஒருநாள் வராமல் இருந்திருந்தால் கூட இந்தப் படம் கண்டிப்பாக வந்திருக்காது. என் குடும்பம் இப்போதும் என்னுடன் வந்திருக்கிறது.

தனது தாயுடன் சூரி
தனது தாயுடன் சூரி

நான் இந்த இடத்தில் நிற்பதற்கு என் குடும்பம்தான் காரணம். என் அம்மா இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்கள்.

அவர் காரில் வரும்போது கூட, ‘ஒருகாலத்தில் 300 ரூபாய் வாடகைகொடுக்கக்கூட காசு இல்லாமல் அழுதிருக்கிறான்.

ஆனால் இன்றைக்கு அவனுக்காக இத்தனை பேர் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள்’ என்று சொல்லிக் கொண்டே வந்தார். எங்க அம்மா என்னுடைய சாமி” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed