இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷன், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், முனிஷ்காந்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “நூறு சாமி’.
இப்படம் ஜூன் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஜூன்.5) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய விஜய் ஆண்டனியிடம், ”இந்தப் படத்தில் விவசாயியாக நடித்திருக்கிறீர்கள். உங்களின் அனுபவம் எப்படி இருந்தது?” என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்குப் பதிலளித்த அவர், “எனக்கு பிடித்தது எளிமையான வாழ்க்கைதான். தொழில் காரணமாகத்தான் சென்னையில் இருக்கிறேன்.






















