Time

Cinema

oi-V Vasanthi

<!–

–>

சென்னை: நடிகர் ரவி மோகனின் குடும்ப பிரச்சனை இப்போது கோலிவுட்டையே அதிரவைக்கும் அளவுக்கு பரபரப்பாக மாறியுள்ளது. மனைவி ஆர்த்தி ரவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பாடகி கெனிஷாவுடன் அவரின் நட்பு தொடர்பு இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக்கியது. இதுவரை எப்போதும் சிரித்த முகத்தோடு, எந்த பிரச்சனையையும் அமைதியாக கையாளும் நபராக பார்க்கப்பட்ட ரவி மோகன், தற்போது செய்தியாளர்கள் முன் கண்ணீர் விட்டு பேசியிருப்பது ரசிகர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக கெனிஷா தன்னை விட்டு விலகிச் செல்கிறேன் என்று அறிவித்த மறுநாளே ரவி மோகன் இவ்வளவு ஓபனாக பேசியிருப்பதால், இதுவே அவரது மன உடைப்புக்கான முக்கிய காரணமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் தனது பேட்டியில் ரவி மோகன் இதை விட மிகப் பெரிய மன வேதனைகளையே வெளிப்படுத்தியுள்ளார்.

Ravi Mohan Karthi Aarti Ravi Kenishaa

நடிகர் ரவி மோகன் பேட்டி

“என்னுடைய முந்தைய திருமண வாழ்க்கையில் நான் சந்தித்த அவமானங்களும் பிரச்சனைகளும் யாருக்கும் தெரியாது. என்னைப் போல கஷ்டப்படும் ஆண்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்று தான். எந்த பிரச்சனை வந்தாலும் உடைந்து போகக்கூடாது. ஸ்ட்ராங்கா இருக்கணும். நான் உங்களுக்காக துணையாக இருப்பேன்.

பிரச்சனை என்பது ஆண்களுக்கு மட்டும் வராது, பெண்களுக்கும் வரும். ஆனால் பிரபலமாக இருக்கிறோம் என்பதற்காக நம்முடைய கஷ்டத்தை வெளியே சொல்லக்கூடாது என்று இல்லை,” என்று எமோஷனலாக பேசினார்.

ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பு

தொடர்ந்து, “நான் இரண்டு வருடங்களாக அமைதியாக இருந்ததுதான் இன்று இவ்வளவு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. நான் பேசாமல் இருந்ததை எல்லோரும் பலவீனமாக எடுத்துக் கொண்டார்கள். என்னை வைத்து கேம் விளையாடினார்கள்,” என்று கூறிய ரவி மோகன், தனது வாழ்க்கையில் உண்மையான நண்பர்கள் யார் என்பதும் இந்த நேரத்தில் தெரிந்துவிட்டதாக கூறினார்.

அதில் நடிகர் கார்த்தியின் பெயரையும் குறிப்பிட்ட அவர், “பொதுவாக கஷ்டம் வரும்போது கூட இருக்கிறவங்க தான் உண்மையான நண்பர்கள் என்று சொல்வாங்க. எனக்கு அப்படித் துணையாக நின்றவர் நடிகர் கார்த்தி. அவன் என் நண்பன். பெயரை சொல்லவே வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் அவன் என்னிடம் ‘நீ ரொம்ப நல்லவன்டா’ என்று சொன்னான். நம்மோடு வாழ்கிறவர்களுக்கு தான் நாம உண்மையில் யார் என்று தெரியும்,” என்று உருக்கமாக கூறினார்.

மன அழுத்தத்தில் ரவி மோகன்

இதையடுத்து தனது திருமண வாழ்க்கை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்களையும் பகிர்ந்தார். “எனக்கென்று ஒரு தனி வாழ்க்கையே இல்லை. எனக்குன்னு ஒரு அக்கவுண்ட் கூட இல்லை. இருந்த ஒரே அக்கவுண்ட் ஜாயிண்ட் அக்கவுண்ட் மட்டும்தான். அதில் நான் ஒரு சின்ன பொருள் வாங்கினால்கூட உடனே அதற்கான மெசேஜ் போய்விடும். பிறகு எதற்காக இதை வாங்கினாய்? எதற்காக அதை செய்தாய்? என்று கேள்வி மேல கேள்வி வரும். வீட்டுக்குள்ள நிம்மதியே இல்லாமல் தான் வாழ்ந்தேன்,” என்று தெரிவித்தார்.

Ravi Mohan Karthi Aarti Ravi Kenishaa

“14 வருட திருமண வாழ்க்கை எனக்கு நரகமாக இருந்தது. அந்த வாழ்க்கையில் என்னால் தொடர முடியவில்லை. அதனால்தான் அங்கிருந்து வெளியே ஓடி வந்தேன்,” என்று கண்ணீருடன் கூறிய ரவி மோகன், அந்த கடினமான நேரத்தில் தனக்கு துணையாக இருந்தவர் கெனிஷா தான் என்றும் தெரிவித்தார்.

“அப்போது என்னை மனிதனாக புரிந்து கொண்டு துணையாக இருந்தது கெனிஷா தான். ஆனால் இப்போது அவரையும் சோசியல் மீடியா புல்லிங் மூலம் அனுப்பிவிட்டீர்கள். நான் இங்கே அதற்காக பேச வரவில்லை. அவங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும். நான் பேச வந்தது எனக்கு நடக்கிற பிரச்சனைகளை பற்றி தான்,” என்று மனவேதனையுடன் கூறினார்.

நடிப்புக்கு பிரேக்

இதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியபோது ரவி மோகன், “எனக்கு விவாகரத்து முடியும் வரை இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன். மனரீதியாக என்னால் அதற்கு தயாராக முடியவில்லை. நான் நடிகன் தான். ஆனால் நிஜ வாழ்க்கையில் நடிக்க முடியாது,” என்று கூறியிருந்தார்.

அதேபோல், “என் குழந்தைகளைக் கூட பார்க்க விடவில்லை. போனில் பேச விடுவதில்லை. என் உலகமே என் பசங்கதான். அவர்களுக்காக 50 லட்சம் ரூபாய் கட்டி படிக்க வைக்கிறேன். அவர்களை பார்க்க முடியாத வேதனையில் நான் உடைந்து போயிருந்தேன்,” என்றும் தெரிவித்திருந்தார்.

Ravi Mohan Karthi Aarti Ravi Kenishaa

சூழ்ச்சிகள்

மேலும் அதிர்ச்சியாக, “என் வாழ்க்கையை அழிக்க நினைத்தவர்கள் யார் என்பதை உலகம் தெரிந்துகொள்ளும். நான் அமைதியாக இருந்ததால்தான் எல்லோரும் எல்லை மீறினார்கள்,” என்றும் அவர் கூறியிருந்தார்.

தற்போது ரவி மோகனின் இந்த எமோஷனலான பேட்டிகள் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதுவரை அமைதியாக இருந்த ஒருவர் இவ்வளவு உடைந்து பேசுகிறார் என்றால், பின்னணியில் இன்னும் என்ன நடந்திருக்கலாம் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே நேரத்தில் எதிர் தரப்பிலிருந்து என்ன பதில் வருகிறது என்பதையும் அனைவரும் உற்றுநோக்கி காத்திருக்கின்றனர்.

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Информация об обращении не передается третьим лицам, а детали лечения обсуждаются только с пациентом. Изучить вопрос подробнее – [url=https://1kapelnica-ot-zapoya-v-moskve77.ru/]kapelnica-ot-alkogolya-posle-zapoya[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed