சுற்றுலா மையமாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவில் பொதுக்கழிப்பறைகள் இல்லை என்பது மிகப்பெரிய குறையாக இருக்கிறது. ஊட்டி, குன்னூர் போன்ற நகரங்களில் நகராட்சி மற்றும் போக்குவரத்துக் கழகம் மூலம் நிர்வகிக்கப்படும் பொதுக் கழிப்பறைகளில் ஆண்களிடம் 5 ரூபாயும் பெண்களிடம் 10 ரூபாயும் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குன்னூரைச் சேர்ந்த பெண்கள் சிலர் கூறுகையில், “குன்னூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிவறையைப் பயன்படுத்த பெண்களிடம் 10 ரூபாய் வாங்குகிறார்கள். சிறுநீர் கழிக்க ஒரு நாளைக்கு மூன்று, நான்கு முறை அந்தக் கழிவறையப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. கழிவறைக்கு மட்டுமே ஒரு நாளைக்கு 40 ரூபாய் வரை தேவைப்படுகிறது. எப்படிச் சமாளிக்க முடியும்? இவ்வளவு பணம் வாங்கியும் முறையாகப் பராமரிப்பதில்லை. நோய்த்தொற்று ஏற்படும் நிலையில்தான் இருக்கிறது. பெண்களாகிய எங்களுக்கு பஸ்ஃ ஃபிரீ தான். ஆனால், பஸ் ஸ்டாண்டு டாய்லெட்டுக்கு 10 ரூபாய்” என்றனர்.
நுகர்வோர் விழிப்புணர்வு சங்கத்தைச் சேர்ந்த மனோகரன் பேசுகையில், “நகராட்சி பேருந்து நிலையங்களில் இலவச சிறுநீர் கழிப்பறை அமைக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், இலவச கழிப்பறை இல்லாத ஒரே பேருந்து நிலையமாக குன்னூர் பேருந்து நிலையம் இருக்கிறது. சிறுநீர் கழிக்க 2 ரூபாய், மலம் கழிக்க 5 ரூபாய் வாங்க வேண்டும். ஆனால், பெண்களிடம் 10 ரூபாய் கட்டாயமாக வசூலிக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரிடம் பலரும் சொல்லியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் ஊட்டியில் போக்குவரத்துக் கழகம் மூலம் நிர்வகிக்கப்படும் பொதுக் கழிப்பறையிலும் பெண்களிடம் 10 ரூபாய் வாங்குகிறார்கள். வேறு வழியில்லாமல் கேட்கிற தொகையை பெண்கள் கொடுத்து விட்டுப் போகிறார்கள்” என்றார்.

இது குறித்து தெரிவித்துள்ள நீலகிரி மாவட்ட நிர்வாகம் தரப்பு, “ஒப்பந்ததாரர்கள் மூலம் நிர்வகிக்கப்படும் அனைத்து பொதுக் கழிப்பறையிலும் கட்டண தொகை குறித்து அறிவிப்பு பதாகை வைக்க வேண்டும். 10 ரூபாய் வசூலிப்பது சட்டப்படி தவறு. அத்துமீறலில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உத்தரவிட்டுள்ளது.

























Atras crash speles, tostarp Aviator, un momentloterijas Vavada kataloga ir izvietotas atseviska sadala. Sifretie DNS protokoli DoH un DoT palidz…