இமயமலை உருகினால் 200 கோடி பேருக்கு ஆபத்து - நேபாள அமைச்சர்|‘What Melts in Himalayas Rises in Sea’: Nepal FM’s Big Warning


இதுவரையில் கிடைத்துள்ள தகவல்களின்படி, நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தபட்சம் 160 பேர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அதில் 133 பேர் இந்தியர்கள்.

நேற்று நடந்த இந்தச் சம்பவம் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க, இந்தியா, சீனா, நேபாளம் மற்றும் பூட்டான் இணைந்து செயல்பட வேண்டும் என்று நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிஷிர் கனால் NDTV உச்சிமாநாட்டில் இன்று பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது…

“இமயமலையில் உருகுவது கடலின் நீர்மட்டத்தை உயர்த்துகிறது. நேற்றைய தினம் நமது கண்ணெதிரே நேரலையாக நாம் கண்டதும் அதைத்தான்.

சீனா, நேபாளம், இந்தியா, பூட்டான் என நாம் அனைவரும் சூழலியலால் ஒன்றுபட்டிருக்கிறோம். நமது கூட்டு வாழ்வும் எதிர்காலமும் இந்த இமயமலைச் சூழலியலைப் பாதுகாப்பதில்தான் அடங்கியுள்ளது. எனவே நாம் ஒன்றிணைய வேண்டும்.

காலநிலை மாற்றத்தைப் பொறுத்தவரையில், இமயமலைப் பிராந்தியம் மிகவும் ஆபத்தான பகுதிகளில் ஒன்றாகும்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed