'ஆர்டிக்கிள் 370' படத்திற்கு 3 தேசிய விருதுகள் – சமூக வலைதளங்களில் எழும் விவாதங்கள்! |72nd National Film Awards: 3 Awards for 'Article 370' Sparks Political Debate on Social Media


தி காஷ்மீர் ஃபைல்ஸ் (The Kashmir Files – 69ஆவது தேசியத் திரைப்பட விருதுகள்)

இந்தப் படம் தேசிய ஒருமைப்பாட்டைப் பேசும் சிறந்த திரைப்படம் – நர்கிஸ் தத் விருதைப் பெற்றது. அத்தோடு இப்படத்தில் நடித்திருந்த நடிகை பல்லவி ஜோஷிக்குச் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.

1990களில் காஷ்மீரில் வாழ்ந்த பண்டிட்டுகள் துயரத்தை எதிர்கொண்டதாக இப்படத்தின் கதையை இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி அமைத்திருந்தார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் தவறாகச் சித்தரித்திருப்பதாகவும் கடுமையான விமர்சனங்களையும் இத்திரைப்படம் எதிர்கொண்டது.

தி கேரளா ஸ்டோரி (The Kerala Story – 71ஆவது தேசியத் திரைப்பட விருதுகள்)

இந்தப் படத்திற்குச் சிறந்த இயக்குநருக்கான விருது மற்றும் சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.

கேரளாவைச் சேர்ந்த இந்துப் பெண்களை இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்து, அவர்களை நாடுகடத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதுபோல இப்படத்தில் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

“உண்மைச் சம்பவம் என்கிற பதாகையைப் படத்தில் போட்டுக்கொண்டு, எவ்வித ஆதாரமும் இல்லாமல் இப்படத்தில் இப்படியாகக் கதாபாத்திரங்களைப் படக்குழு சித்தரித்திருக்கிறது” எனவும் இப்படம் விமர்சிக்கப்பட்டது.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed