மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் வெளியான அரசு வேலைக்கான தேர்வு முடிவுகள் வெளியான போது அத்தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக செய்தி வெளியானது. இதையடுத்து அத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த நவம்பர் மாதம் மற்றும் கடந்த ஆகஸ்ட் மாதங்களில் நடக்க இருந்த தேர்வுகளும் இதே பிரச்னையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் அரசு வேலைக்கு தயாராகிக்கொண்டிருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மகாராஷ்டிரா அரசு தேர்வாணைய தலைவர் பீமன்வரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புனேயில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
அவர்களுடன் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.ரோஹித் பவாரும் கலந்து கொண்டார். இதையடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அமைச்சர் சிவேந்திர ராஜே போசலே தலைமையிலான மாநில அரசுக் குழு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்து பேசியது.
அதில் அரசு தேர்வில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள், வினாத்தாள் கசிவு குறித்து விசாரிக்க அமைக்கப்படும் குழுவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனர் துகாராம் முண்டே இடம் பெறுவார் என்று தெரிவித்தார். முண்டே போன்ற அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக் குழுவை அமைப்பது உட்பட அவர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
ஆனால் தேர்வுக்குழு தலைவர் பீமன்வரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவரை நீக்கும் வரை போராட்டம் ஓயாது என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சர் போஸ்லே இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிசுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு பீமன்வரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவதாக் அமைச்சர் போஸ்லே தெரிவித்தார். இறுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களது 10 நாள் போராட்டத்தை கைவிட்டனர். விசாரணை குழுவில் கமிஷனர் துக்காராம் தவிர, முன்னாள் நீதிபதி திலீப் போசலே தலைவராகவும், ஐபிஎஸ் அதிகாரி லக்ஷ்மி கௌதம், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கணேஷ் பாட்டீல் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி பி டி நாயக் ஆகியோரும் குழுவில் இருப்பார்கள். பீமன்வர் விடுப்பில் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.

























Reading this site over the past week has changed how I evaluate content in this space, and a look at…