கண்களை கவரும் அம்பானி மகன் திருமண அழைப்பிதழ்… இப்படியா? வீடியோ…

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தை உலகமே வியந்து பார்த்து வருகிறது. திருமணத்திற்கு முன்பே பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம், உலக நாடுகளை தங்கள் பக்கம் ஈர்க்க வைத்தார் அம்பானி.

அதிலும், உலக பணக்கார‍ர்கள் மட்டுமல்லாமல், பிரபலங்கள், அரசியல்வாதிகள் என ஆயிரக்கணக்கானோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். திருமணம் முடிந்துவிட்டது என்றால் அதுதான் இல்லை. இதுவரை நடந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே, திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள்தான்.

திருமணத்திற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருமணத்திற்காக, பல்வேறு விதங்களில் அழைப்பிதழ் தயாரித்து காண்போரை வாய் பிளக்க வைத்து வருகிறார் அம்பானி. அந்த வகையில், தற்போது புதிதாக ஒரு திருமண அழைப்பிதழ், இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

விருந்தினர் ஒருவருக்கு வழங்கப்பட்ட திருமண அழைப்பிதழை, அவர் திறந்து பார்ப்பதை வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சிறிய அளவில் பெட்டியாக அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதனை திறந்தால், உள்ளே கடவுள்களின் படங்கள் மேல்புறம் இருக்க, உள்ளே இரண்டு பெட்டிகள் உள்ளன. அவற்றுள் பெரிய பெட்டியை திறந்தால், ஆல்பம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும், வித்தியாசமான முறையில் கடவுள் படங்கள், திருமணத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை வித்தியாசமான முறையில் காணும் வகையில், வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பக்கமாக திறக்க திறக்க, அடுத்து எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரது கண்களிலும் கூடிக்கொண்டே இருக்கும். அதன்பின்னர், சிறிய பெட்டியை திறந்தால் அதிலும் கடவுள் படங்கள்.

தொடர்ந்து இரண்டு பெட்டிகளையும் எடுத்த பின்னர், உள்ளே பட்டு துணி. அதன் உள்ளே ஒரு அழைப்பிதழ். இத்தனையும் எடுத்து பார்க்கும் போது, காண்போரை வியந்து பார்க்கும் அளவுக்கு அழைப்பிதழை வடிவமைத்துள்ளனர்.

https://x.com/PTI_News/status/1806399110662045999 

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.