ஆப்கனை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி … முழு விவரம்..

உலக‍க்கோப்பை சூப்பர் 8 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

பார்படாஸ் நாட்டில் உள்ள கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில், உலக‍க் கோப்பை டி20 தொடரின் 43ஆவது போட்டியும், சூப்பர் 8 சுற்று போட்டியும் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் நல்ல ஃபார்மில் இருப்பதால் போட்டி எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த‍து.

அதன்படியே, டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்த‍து. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சற்று நிதானமாக ஆடியது. அதே நேரத்தில், ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் மற்றும் ஃபரூக்கியின் சிறப்பான பந்து வீச்சால், அடுத்த‍டுத்து இந்திய வீர‍ர்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை எடுத்த‍து.

இந்திய வீர‍ர்களின் ரன் விவரம்

ரோகித் சர்மா – 8 (13)

விராத் கோலி – 21 (24)

ரிஷப் பண்ட் – 20 (11)

சூர்யகுமார் யாதவ் – 53 (28)

ஷிவம் துபே – 10 (7)

ஹர்திக் பாண்டியா – 32 (24)

ரவீந்தர ஜடேஜா – 7 (7)

அக்ஷர் படேல் -12 (6)

அர்ஷ்தீப் சிங் – 2 (2) நாட் அவுட்

ஆப்கன் வீர‍ர்கள் பந்துவீச்சு விவரம்

ஃபரூக்கி – 33/3

நபி – 24/0

நவீன் உல் ஹக் – 40/1

ரஷித் கான் – 26/3

நூர் அகமது – 30/0

அஷ்மத்துல்லா – 23/0

பின்னர் 182 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆப்கன் வீர‍ர்கள், 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

ஆப்கன் வீர‍ர்கள் ரன் விவரம்

குர்பாஸ் – 11(8)

ஹஸ்ரதுல்லா – 2(4)

ஷாத்ரான் – 8(11)

குல்பாதின் – 17(21)

ஒமர்சை – 26(20)

நிஜிபுல்லா – 19(17)

நபி – 14(14)

ரஷித் கான் – 2(6)

நூர் அகமது – 12(18)

நவீன் உல் ஹக் – 0(1)

ஃபரூக்கி – 4 (1) நாட் அவுட்

இந்திய வீர‍ர்கள் பந்து வீச்சு விவரம்

அர்ஷ்தீப் சிங் – 36/3

பும்ரா – 7/3

அக்ஷர் படேல் – 15/1

ஹர்திக் பாண்டியா – 13/ 0

குல்தீப் யாதவ் – 32/2

ஜடேஜா – 20/1

இதன்மூலம் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. 3 சிக்சர்கள், 5 ஃபோர்களுடன் 53 ரன்கள் விளாசிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்ப்பட்டார்.

இந்திய அணியின் இந்த வெற்றியை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். சூர்யகுமார் யாதவின் சிறப்பான ஆட்டத்தையும், இந்திய வீர‍ர்களின் சிறப்பான பந்துவீச்சையும் வாழ்த்தி வருகின்றனர்.