Vistex Asia’s CEO Falls To Death At Hyderabad’s Ramoji Film City During Firm’s Silver Jubilee Celebrations In Tamil

Hyderabad CEO: ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடந்த விபத்தில், படுகாயமடைந்த தனியார் நிறுவன தலைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலைமை செயல் அதிகாரி பலி:
ஐதராபாத்தில் நடந்த விழாவில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் ஷா உயிரிழந்தார். ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் 25ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.  விழாவுக்கு தனது குழுவினருடன் சஞ்சய் ஷா வந்திருந்தபோது, இரும்புக் கூண்டு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ சஞ்சய் ஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
25ம் ஆண்டு விழா கொண்டாட்டம்: 
ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் 25ம் ஆண்டு விழாவை விமரிசையாக கொண்டாட திட்டமிடப்பட்டது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜ் ஃபிலிம் சிட்டியில் இரண்டு நாட்களுக்கான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி, கடந்த வியாழனன்று நடைபெற்ற விழாவில் நிறுவன ஊழியர்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். தலைமை செயல் அதிகாரியான சஞ்சய் ஷா மற்றும் சக மூத்த அதிகாரியான் ராஜு டட்லா ஆகியோருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதற்காக சுமார் 15 அடி உயரத்திலிருந்து கூண்டில் அமர்ந்து, மேடைக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டு இருந்தது.  

#Vistex #Asia’s #CEO Falls To Death At #Hyderabad #ramojifilmcity During Firm’s Silver Jubilee #Celebrations#viralvideo pic.twitter.com/75o87IgF2s
— Srilibiriya Kalidass (@srilibi) January 20, 2024

கம்பி அறுந்து விபத்து:
ஏற்கனவே திட்டமிட்டபடி சஞ்சய் ஷா மற்றும் ராஜு ஆகியோர் இரும்புக் கூண்டில் ஏற்றப்பட்டு, குறிப்பிட்ட உயரத்தில் தொங்க வைக்கப்பட்டு இருந்தனர். பாடல்கள் ஒலித்தவாறும், பட்டாசுகள் வெடித்தவாறும் அவர்கள் அமர்ந்திருந்த கூண்டு கீழே மெதுவாக இறக்கப்பட்டது. அப்போது, அந்த இரும்புக் கூண்டுடன் பிணைக்கப்பட்டு இருந்த, இரண்டு செயின்களில் ஒன்று திடீரென அறுந்துள்ளது. இதனால், பாரம் தாங்காமல் இரும்புக் கூண்டு கவிழ, அதிலிருந்த சஞ்சய் ஷா மற்றும் ராஜு ஆகியோர் அந்த உயரத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி சஞ்சய் ஷா உயிரிழந்துள்ளார். ராஜுவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஸ்டெக்ஸ் நிறுவனம்:
 Vistex என்பது ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 1999ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனமாகும். தனது வாடிக்கையாளர்களுக்கு வருவாய் மேலாண்மை சேவைகள் மற்றும் தீர்வுகளை வழங்குகிறது. GM, Barilla, மற்றும் Bayer உட்பட நன்கு அறியப்பட்ட நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்கி வருகிறது. 20 உலகளாவிய அலுவலகங்களையும் 2,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது. விஸ்டெக்ஸ் நிறுவனத்தை நிறுவியது மட்டுமின்றி சஞ்சய் ஷா, நிர்வாக கற்றல் மற்றும் ஆராய்ச்சிக்கான விஸ்டெக்ஸ் கல்வி நிறுவனத்தையும் நிறுவியுள்ளார்.

Source link