Uttarpradesh Barber Killed 2 Children At Their Home up shocking incident police encouter | UP Crime: உத்தர் பிரதேசத்தை அதிரவைத்த சம்பவம்! 2 குழந்தைகள் கொடூர கொலை


Crime: உத்தர பிரதேச மாநிலத்தில் 2 குழந்தைகள் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
உத்தர பிரதேசத்தை அதிரவைத்த இரட்டை கொலை:
உத்தர பிரதேச மாநிலம் புடவன் பகுதியில் பார்பர் கடை ஒன்றை நடத்தி வந்தார் சஜித் கான். இவரது கடைக்கு அருகே வினோத் என்பவர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மூன்று குழந்தைகள் மற்றும் மனைவியுடன்  வசித்து வருகிறார். இவரது மனைவி சலூன் ஒன்றை நடத்தி வருகிறார்.
வினோத்குமார் குடும்பத்தினருக்கு, சஜித்கானுக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், நேற்று சஜித் கான், வினோத்திடம் ரூ.5,000 பணம் கேட்டிருக்கிறார். ஆனால், 5,000 ரூபாயை வினோத் தர மறுத்திருக்கிறார்.
இதனால், இவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு இருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சஜித் கான், இரண்டாவது தளத்தில் விளையாடிக் கொண்டிருந்த வினோத்தின் இரண்டு குழந்தைகளை கழுத்தை அறுத்துள்ளார்.  வினோத் குமார் மனைவி வீட்டில் மூன்று பிள்ளைகளுடன் இருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த சஜித் கான், டீ போட்டு தருமாறு கேட்டு இருக்கிறார்.
குற்றவாளியை என்கவுன்டர் செய்த போலீஸ்:
டீ போடுவதற்கு சமையலறைக்கு வினோத்குமாரின் மனைவி சென்றபோது, வீட்டிற்கு வெளியே விளையாட்டிக் கொண்டிருந்த 11,7,9 வயதுடைய குழந்தைகளின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார். இதில், இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.  ஒரு குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  
குழந்தைகளை கொன்றுவிட்டு தப்ப முயன்ற சஜித் கானை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முன்றதால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், சஜித் கான் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேசத்தில் இந்த இரட்டைக்  கொலை சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இந்த கொலைக்கு தொடர்புடைய சஜித்  கானின் சகோதரரான ஜாவேத் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.  இந்த சம்பவம் குற்றவாளியான சஜித்கானின் தாய் கூறுகையில், “தனது மகன் எதற்காக இந்த கொடூர செயலை செய்தான் என்று தெரியவில்லை.  இவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதும் தெரியவில்லை.
 எனது இரண்டு மகன்களுக்கு காலை உணவு சாப்பிட்டுவிட்டு காலை 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறினர். எனது நீண்ட காலமாக பார்பர் கடையை நடத்தி வந்தார். இவருக்கு யாருடனும் எந்த பகையும் இல்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தை நினைத்து நான் வருதுகிறேன்.   என் மகன் செய்த தவறுக்கு நிச்சயம் விளைவுகளை சந்திப்பார்” என்றார். 

மேலும் ப டிக்க
Crime: ஷாக்! முட்டை கறி சமைக்க மறுத்த காதலியை கொன்ற காதலன் – ஹரியானாவில் பயங்கரம்!

மேலும் காண

Source link