UPI Payment: செம்ம! இனி இலங்கை, மொரிஷியஸ் நாடுகளிலும் யுபிஐ பயன்படுத்தலாம் – இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்

UPI Payment: இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில்  டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக யுபிஐ தொழில்நுட்ப சேவையை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

யுபிஐ சேவை:

மத்திய அரசு 2016ல் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியது. பல வங்கி கணக்குகளையும் ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக கையாளக்கூடிய UPI (Unified Payments Interface) வசதியை அறிமுகப்படுத்தியது.  ஆரம்பத்தில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லாத நிலையில், ஆண்ட்ராய்டு போன்கள் வந்துவிட்ட பிறகு UPI வசதி என்பது அசுர வளர்ச்சி அடைந்து விட்டது.

அதற்கேற்ப Gpay, Paytm, PhonePe போன்ற பல்வேறு செயலிகளும் நடைபாதை வியாபாரம் தொடங்கி பெரிய பெரிய வணிகம் வரை யுபிஐ பயன்பாட்டை அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் பயனாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்கவும் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவின் யுபிஐ சேவை உலகிற்கே முன்மாதிரியாக இருந்து நிலையில், பல்வேறு நாடுகளும் யுபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை ஏற்க தொடங்கியுள்ளன. அந்த பட்டியிலில் தற்போது இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளும் இணைந்துள்ளன.

நாளை முதல் இலங்கை, மொரிஷியஸில் அறிமுகம்:

அதாவது, நாளை முதல் இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாட்டில் யுபிஐ சேவை அறிமுகமாக உள்ளது. இரண்டு நாட்டிற்கு யுபிஐ சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார். மொரிசியஸ் நாட்டில் Rupay கார்டு சேவையும் தொடங்கப்பட உள்ளது. காணொலி மூலம் நடைபெறும் தொடக்க நிகழ்வில், மொரிஷியஸ் பிரதர் பிரவீன் ஜெகன்நாத், இலங்கை ரணில் விக்ரமசிங் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

நாடுகளுக்கு இடையிலான டிஜிட்டல் பரிவர்த்தனையை மேம்படுத்தும் நோக்கில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இலங்கை மற்றும் மொரிஷியஸுக்குப் நாடுகளுக்கு பயணிக்கு இந்தியர்கள்  இனிமேல் யுபிஐ சேவை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். ஜூலை 2023ல் இலங்கை  அதிபர் ரணில் விக்ரமசிங்கே  இந்தியாவின் யுபிஐ சேவைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட  நிலையில், நாளை அறிமுகமாக உள்ளது.

எந்தெந்த நாடுகளில் யுபிஐ சேவை?

வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் சிரமமின்றி  பரிவர்த்தனை செய்யும் நோக்கில் வெளிநாடுகளில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங் காங், ஓமன், கத்தார், அமெரிக்கா, சவுதி,  அரேபியா,  பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில்  யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ள நிலையில்,  தற்போது இலங்கை மற்றும் மொரிசியஸ் நாடுகளில் அறிமுகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

இந்த வார்த்தைய இதுக்கு முன்னாடி கேள்விப்பட்டதே இல்லயே.. புது விதியால் குழம்பும் கர்நாடக மக்கள்!

Source link