19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியானது தற்போது பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே பெனோனியில் உள்ள வில்லோமூர் பூங்காவில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று இரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றது.
இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி இறுதிப்போட்டியில் இந்திய அணியை சந்திக்கும். இந்த போட்டியில் இரு அணிகளும் முதல்முறையாக நேருக்குநேர் மோதுகின்றன. தற்போதைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தோற்கடிக்க முடியாத அணியாக வலம் வருகிறது. சாத் பெய்க் தலைமையிலான பாகிஸ்தான் அணி, தனது கடைசி சூப்பர் சிக்ஸ் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
10 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை 2024ல் பாகிஸ்தான் அணி தனது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சூப்பர் சிக்ஸ் போட்டியில் நுழைந்தது. அங்கு வங்கதேச அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.
மறுபுறம், ஆஸ்திரேலிய அணி தனது குரூப் லீக் ஆட்டத்தில் இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா அணிகளை வீழ்த்தி சூப்பர் சிக்ஸ் போட்டிக்கு தகுதிபெற்றது. இதையடுத்து, சூப்பர் சிக்ஸில் இங்கிலாந்தை 110 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அண்டர் 19 உலகக் கோப்பையில் இதுவரை 35 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், பாகிஸ்தான் அணி அதிகபட்சமாக 19 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி 14 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.
பிட்ச் எப்படி..?
தென்னாப்பிரிக்காவில் உள்ள பெனோனியின் ஸ்டேடியத்தின் பிட்ச் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். அதன்பிறகு, பேட்டிங் செய்யும் அணிக்கு ரன்களை குவிக்க வாய்ப்புகளை தரும். இத்தகைய சூழ்நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது நல்லது. ஏனெனில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்கள் இங்கு நிறைய ரன்களை எடுத்து எளிதாக வெற்றியை நோக்கி பயணிக்கலாம்.
இரு அணிகளிலும் டாப் வீரர்கள்:
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உபைத் ஷா 2024 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் சிறப்பாக பந்துவீசியுள்ளார். இந்த உலகக் கோப்பை போட்டியில் இதுவரை உபைத் ஷா 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மறுபுறம் பேட்டிங்கில் பாகிஸ்தான் அணி 260 ரன்கள் குவித்துள்ள ஷாசாய்ப் கான் சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார். இவர் இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்காக அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல், ஆஸ்திரேலிய கேப்டன் வீப்கன் 252 ரன்களும், கால்ம் விட்லர் 11 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.
இரு அணிகளின் வீரர்கள் விவரம்:
பாகிஸ்தான் U19 அணி:
ஷாமில் ஹுசைன், ஷாஜாய்ப் கான், அஸான் அவாய்ஸ், சாத் பைக்(விக்கெட் கீப்பர்/கேப்டன்), அஹ்மத் ஹசன், ஹாரூன் அர்ஷத், அராபத் மின்ஹாஸ், அலி அஸ்பாண்ட், உபைத் ஷா, முகமது ஜீஷான், அலி ரசா, அமீர் ஹாசன், குபைப் அஹ்மத், நவீத் கலீல், கான், முகமது ரியாசுல்லா
ஆஸ்திரேலியா U19 அணி:
ஹாரி டிக்சன், ஹர்ஜாஸ் சிங், சாம் கான்ஸ்டாஸ், ஹக் வெய்ப்ஜென்(கேப்டன்), ஆலிவர் பீக், லாச்லன் ஐட்கன்(w), ராஃப் மேக்மில்லன், சார்லி ஆண்டர்சன், ஹர்கிரத் பஜ்வா, மஹ்லி பியர்ட்மேன், காலம் விட்லர், ரியான் ஹிக்ஸ், டாம் காம்ப்பெல், டாம் ஸ்ட்ரேக்கர், ஐடன் ஓ கானர், கோரி வாஸ்லி